- Thursday
- May 14th, 2026
பிரதமர் வேட்பாளர் பதவி உட்பட எதையும் தான் கேட்டுப்பெறப்போவதில்லை என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடத்தப்பட்ட பேச்சு வெற்றியா அல்லது தோல்வியா என தற்போது கூறமுடியாது எனவும், மேலும் பேச்சுகள் நடத்தப்பட்ட பின்னரே அது பற்றிக் கூற முடியும் எனவும் அவர் கூறியுள்ளார். நேற்று முன்தினம் புதன்கிழமை...
திருகோணமலை மாவட்டத்தில் சம்பூர் பகுதியில் முதலீட்டு வலயத்துக்காக சுவீகரிக்கப்பட்ட பொதுமக்களின் 818 ஏக்கர் காணி மீளக் கையளிக்கப்படவுள்ளது. இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வியாழக்கிழமை கையெழுத்திட்டார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். சம்பூர் மக்கள் தமது காணிகளை நாளை வெள்ளிக்கிழமை முதல் பார்வையிட முடியும் என்றும்...
எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட மாட்டாது என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். கடந்த அரசாங்கத்தின் ஹெட்ஜின் மோசடியினாலும் பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நட்டமடைந்துள்ளது. அவ்வாறு இல்லையெனில் எரிபொருள் விலையை மேலும் குறைத்திருக்க முடியும். எனினும் எரிபொருளின் விலைகளை குறைப்பதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது. திறைசேரி பிணைப்பத்திர விநியோகம் தொடர்பில் பாராளுமன்றில் சமர்ப்பித்த யோசனைத் திட்டத்தை எதிர்க்கட்சிகள் தோற்கடித்தன....
கோலிவுட்டில் ’ஒரு நாயகன் உருவாகிறான்’ என்பது போல் மெல்ல மெல்ல உச்சத்தை நோக்கி பயணிப்பவர் சிவகார்த்திகேயன். இவர் 5 படங்களுக்கு மேல் தான் முழு நீள ஆக்ஷன் கதையை தேர்ந்தெடுத்து நடித்தார். தற்போது இவருக்கு விபரீத ஆசை ஒன்று வந்துள்ளது. சிவகார்த்திகேயன் சூப்பர் ஸ்டாரின் தீவிர ரசிகர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் இவர்...
தமிழ் சினிமாவில் கதாநாயகனாக மட்டுமில்லாமல் ஒரு தயாரிப்பாளராக, பாடகராக, பாடலாசிரியராக அனைத்திலும் வெற்றி கொண்டு வலம் வருபவர் தனுஷ். தனுஷின் அடுத்த வெற்றி படமாக களம் காணப்போவது மாரி. இப்படத்தை பாலாஜி மோகன் இயக்க, அனிருத் இசையமைத்து இருக்கிறார். ஏற்கனவே தனுஷ் - அனிருத் கூட்டணி நல்ல வரவேற்பபை பெற்றுள்ளதால் இப்படத்தின் பாடல்களுக்கும் நல்ல எதிர்பார்ப்பு...
ஊழியர் சேமலாப நிதி (ஊ.சே.நி) பெறும் அங்கத்தவர்கள், அவர்களது கணக்கு மிகுதியை தொழில் செயலகத்தில் புதிதாக பொருத்தப்பட்டுள்ள தன்னியக்க இயந்திரத்தில் சரிபார்த்துக்கொள்ள முடியும் என்று தொழில்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். இதன்மூலம், சேமலாப நிதி பெறும் சுமார் 2.5 மில்லியன் தொழிலாளர்கள் அவர்களது கணக்கு மீதியை எந்தவொரு நேரத்திலும் சரிபார்த்துக்கொள்ள முடியும். தொழில் தருநர், அவருக்கு கீழ்...
நிதி மோசடிக் குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பஸில் ராஜபக்ஷவுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது. பஸில் உள்ளிட்ட சந்தேக நபர்கள் மூவரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவல நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2015ஆம் ஆண்டுக்கு தேசிய கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்களை இணைத்துக்கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் நாளை (08) அரச வர்த்தமானியில் வெளியிடப்படவுள்ளது என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் மே 25ஆம் திகதி வரை விண்ணப்பங்களை அனுப்பி வைக்க முடியும்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் கபீர் காசிம் ஆகியோரை எதிர்வரும் 20ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவு வழங்க எடுக்கப்பட்ட தீர்மானம் கட்சியின் யாப்புக்கு முரணானது என ஐ.தே.க. உறுப்பினர் சித்ரா ஸ்ரீமணி மற்றும் கிஸ்லி லால் பெர்னாண்டோ ஆகியோர் நீதிமன்றில்...
நெல்லியடி புனித அந்தோனியர் தேவாலயத்தில் இருந்து வியாழக்கிழமை (07) காலை இளைஞன் ஒருவரர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று நெல்லியடி பொலிஸார் கூறினர். நெடுந்தீவு 11ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஜெசுரட்ணம் ஆரோக்கியராஜ் (வயது 19) என்ற இளைஞனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. தேவாலய பாதிரியாரை சந்திப்பதற்காக புதன்கிழமை (06) மாலை தாயாருடன், நெல்லிடிக்கு வருகை தந்திருந்த இளைஞன்,...
விளையாட்டுக்கள் தன்னம்பிக்கையை வளர்க்கின்றது. சுற்றி இருப்பவர்களுடன் மனம் விட்டுப் பேச வசதி அளிக்கின்றன. சமூக விரோதச் செயல்களில் ஈடுபடுவதை விளையாட்டுக்கள் தடுக்கின்றன என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண கல்வி, கலாசாரம், விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சின் அனுசரணையின் கீழ் வடமாகாண முதலமைச்சர் வெற்றிக் கிண்ணத்துக்காக அமைச்சுக்களுக்கிடையிலான விளையாட்டு விழா – 2015 நாயன்மார்கட்டு,...
இந்த வருடமும் மாவீரர் நாளன்று ஈகச்சுடர் ஏற்றுவேன். எங்கள் உறவுகளை, பிள்ளைகளை, நினைவு கூர்வதை யாராலும் தடுக்க முடியாது. இவ்வாறு பொலிஸாருக்கு வாக்குமூலம் அளித்ததாகத் தெரிவித்துள்ளார் வடக்கு மாகாண சபை உறுப்பினர் து.ரவிகரன். கடந்த ஆண்டு நவம்பர் 27 ஆம் திகதி மாவீரர் தினமன்று ஈகச்சுட ரேற்றியமை தொடர்பில், விசாரணைக்கு வருமாறு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்...
வடமராட்சி மணற்காட்டுப் பகுதியில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய மணற்கொள்ளையர்கள் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவமொன்று இன்று வியாழக்கிழமை (07), இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். கொள்ளையர்களின் தாக்குதலில் படுகாயமடைந்த எம்.அச்சல (வயது 32) என்ற பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரும், பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த துன்னாலை,...
புதிய கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதி கையேடு இன்று வெளியிடப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. குறித்த கையேடு சந்தைக்கு விநியோகிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா தெரிவித்தார். இதுகுறித்த விளம்பர அறிவித்தல் நாளை மற்றும் எதிர்வரும் ஞாயிறு பத்திரிகைகளில் வெளியிடப்படும் என அவர் கூறினார். கடந்த உயர்...
இலங்கை மத்திய வங்கியின் ஆறாவது பிரதேச அலுவலகம் நேற்று கிளிநொச்சியில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை ஒன்பது மணிக்கு மீள்குடியேற்றம் மற்றும் இந்து சமய விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன் மகேந்திரன் ஆகியோர் சம்பிரதாயபூர்வமாக நாடா வெட்டி திறந்து வைத்தனர். ஏற்கனவே அநுராதபுரம், மாத்தளை, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம்,...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான அரசின் 100 நாள்கள் வேலைத்திட்டத்துக்கு வாழ்த்துத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. 'நல்லாட்சி அரசின் 100 நாள் வேலைத்திட்டம்' என தலைப்பிட்டு, வெள்ளைவான் கலாசாரம், கழிவு எண்ணெய் கலாசாரம், கசாப்புக்கடை அரசியல் கலாசாரம், இலஞ்ச ஊழல் கலாசாரம் ஆகியவற்றை நீக்கி, தமிழ் மக்களுக்கு அச்சமின்றி அடக்குமுறையின்றி, அடவாடித்தனமின்றி, கௌரவமாக,...
கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்திப்பதற்காக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களை ஏற்றிச் சென்ற பல்கலைக்கழக வாகன சாரதிகளின் கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லையென பல்கலைக்கழக தொழிற்சங்கத்திடம் சாரதிகள் புதன்கிழமை (06) முறையிட்டுள்ளனர். ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து 5 மாதங்கள் கடந்துள்ள நிலையிலும்;, தங்களுடைய கொடுப்பனவை வழங்காது...
வடமாகாணத்திலுள்ள சுண்டிக்குளம், மடு மற்றும் நெடுந்தீவு ஆகிய காடுகளை தேசிய சரணாலயங்களாக மாற்றுவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது. தேசிய சரணாலயங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்துக்கமையவே வடக்கில் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்குரிய சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.டி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அத்துடன், வடமாகாண காடுகளில் காணப்படுகின்ற வன...
"இராணுவத்தின் பிடியிலிருக்கும் சம்பூர் கிராமம் மக்களின் மீள்குடியமர்வுக்காக விடுவிக்கப்பட்டது என்ற செய்தியை (நாளை) இன்று வியாழக்கிழமை கேட்பீர்கள்." - இவ்வாறு சம்பூர் மக்களிடம் உறுதி தெரிவித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட எம்.பியுமான இரா.சம்பந்தன். அனல் மின் நிலையம் அமைப்பதற்காக திருகோணமலையின் சம்பூர் கிராமத்தை உயர்பாதுகாப்பு வலயமாக இராணுவம் அபகரித்துள்ளது. இதனால் 818...
இலங்கையில் அடுத்துவரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் விடுத்த கோரிக்கையை மைத்திரிபால தரப்பினர் நிராகரித்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் முன்னாள் மற்றும் இன்னாள் ஜனாதிபதிக்கும் இடையே நடைபெற்ற சந்திப்பொன்றின் போதே, மஹிந்த ராஜபக்ஷ தரப்பினரால் இந்தக் கோரிக்கை பிரதானமாக...
Loading posts...
All posts loaded
No more posts
