Ad Widget

வடமாகாண காடுகளை தேசிய சரணாலயங்களாக மாற்ற திட்டம்

வடமாகாணத்திலுள்ள சுண்டிக்குளம், மடு மற்றும் நெடுந்தீவு ஆகிய காடுகளை தேசிய சரணாலயங்களாக மாற்றுவதற்கு வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் திட்டமிட்டுள்ளது.

தேசிய சரணாலயங்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் திட்டத்துக்கமையவே வடக்கில் இது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இதற்குரிய சட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எச்.டி.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், வடமாகாண காடுகளில் காணப்படுகின்ற வன விலங்குகளை பாதுகாக்கவும் புதிய சாரணாலயங்கள் உருவாக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

பருவக்காலங்களில் இந்தியாவில் இருந்து வரும் பறவைகள் வடமாகாண காடுகளில் தங்குகின்றதாகவும் அவ்வாறான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கூறியுள்ளார்.

மேலும், புதிய சரணாலயங்களை உருவாக்குவதன் மூலம் சுற்றுலாத் துறையின் ஊடாக மக்களின் பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும் என எச்.டி.ரத்நாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Related Posts