Ad Widget

பிரபல பாடசாலைகளின் முன்னால் போதைப்பொருள் விற்பனை! பொலிஸார் நடவடிக்கை எடுக்கவில்லை!!

யாழ்ப்பாணம் நகரப் பகுதயில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலைகளின முன்பாக போதைப் பொருள் வியாபாரம் பாடசாலை ஆரம்பிக்கும் நேரத்திலும் பாடசாலை முடிவடையும் நேரத்திலும் இடம்பெறுகின்றது.

இதற்கெதிராக யாழ்ப்பாணப் பொலிஸார் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டனர். என யாழ் மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் யாழ்ப்பாணப் பிரதேச செயலர் தெரிவித்தார்.

யாழ். மாவட்ட சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டம் நேற்று செவ்வாய்க்கிழமை யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் கருத்துக் கூறிய யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் திருமதி சுகுனரதி தெய்வேந்திரம் யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் போதைப் பொருள் வியாபாரம் சம்பந்தமாக பொது அமைப்புகள் பொலிஸாருக்கு உரிய முறையில் தெரிவித்துள்ளன. ஆனால் இந்த முறைப்பாடு குறித்து இதுவரையில் பொலிஸாரால் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் குறிப்பிட்ட வியாபாரிகள் ஒவ்வொரு நாளும் மாறிமாறி மோட்டார் சைக்கிள்களையும் மற்றும் ஓட்டோக்களையும பயன்படுத்துவதனால் வாகனங்களின் இலக்கங்களை வைத்த அடையாளம் காணமுடியாது . பாடசாலைகளின்முன்னாள் சிவில் உடையில் இரகசியப் பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவதன் மூலம் போதை வியாபாரிகளை அடையாளப்படுத்தி கைது செய்ய முடியும் என்றார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட வட மாகாண சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெயசிங்க இந்த விடயத்தில் உடன் நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு பணிப்புரை விடுத்தார்.

Related Posts