ஜனாதிபதி-இந்திய பிரதமர் சந்திப்பு

உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு நேற்று (13) இந்தியா சென்ற ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து கலந்துரையாடினார். ஐதராபாத்தில் இல்லத்தில் இராப்போஷனத்துடன் இடம்பெற்ற இச்சந்திப்பில், இந்திய மீனவர்கள் பிரச்சினை, பொருளாதார திட்டங்கள், முதலீடுகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. இன்று (14) உஜ்ஜைன் செல்லவுள்ள ஜனாதிபதி இந்திய பிரதமருடன் சிம்ஹஷ்த்த...

வடக்கில் போதைவஸ்து பயன்பாட்டை கட்டுப்படுத்த இந்தியாவின் ஒத்துழைப்பு அவசியம்

இலங்கையின் வடக்குப் பகுதியில் அதிகரித்துள்ள போதைவஸ்து பயன்பாட்டை கட்டுப்படுத்துவதற்கு இந்தியா உதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய அதிகாரிகள் குழுவுக்கும் வடக்கு மீனவசங்க தலைவர்களுக்கும் இடையில் அண்மையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக சட்டவிரோதமான முறையில் தடைசெய்யப்பட்டுள்ள கேரளா கஞ்சா வகைகள் அதிகளவில் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்தி வரப்பட்டுள்ளதாக யாழ்...
Ad Widget

21 ஆம் திகதிக்கு முன்னர் வலி.வடக்கு மக்களை மீள்குடியேற்றம் செய்யாவிடின் மிகப்பெரிய போராட்டம்!!

ஐ.நா உள்ளக விசாரணை நிறைவடைந்த பின்னர் அரசியலமைப்பு சீர்திருத்தத்தினை நடைமுறைப்படுத்த தமிழ் தேசிய கூட்டமைப்பு வலியுறுத்த வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில் நேற்று (13) வெள்ளிக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். ஐ.நாவின் உள்ளக விசாரணைகளை நடாத்துவதாக இலங்கை அரசாங்கம் வாக்குறுதி அளித்துவிட்டு...

யாழில் குடிநீர் மாசு; கொழும்பிலிருந்தே நீரைக் கொண்டுசெல்கிறேன்

யாழ்.குடா நாட்டு நீர் மாசடைந்திருப்பதால் தனக்குத் தேவையான குடிநீரை கொழும்பிலிருந்தே கொண்டுசெல்வதாக வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். குடா நாட்டில் சீரற்ற கழிவகற்றல் கட்டமைப்பு இன்மையினால் குடிநீர் மாசடைந்திருப்பதாக தெரிவித்த அவர், இதனால் சிறுநீரக நோய் ஏற்படும் அபாயமும் இருப்பதாகக் கூறினார். அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு...

வவுனியாவில் வித்தியாவின் நினைவு தினம் அனுஸ்டிப்பு

புங்குடுதீவில் காமுகர்களால் வன்புணர்வின் பின்னர் கொலை செய்யப்பட்ட மாணவி வித்தியாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது. தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர் அமைப்புடன் வவுனியா மாவட்ட அந்தணர் ஒன்றியமும் வவுனியா வைரவபுளியங்குளம் ஆதி விநாயகர் ஆலயமும் இணைந்து ஏற்பாடு செய்த இப்பிரார்த்தனையில் அஞ்சலி தீபம் ஏற்றப்பட்டதுடன் கலந்துகொண்டவர்களால் ஈகைச்சுடர்களும் ஏற்றப்பட்டது. இதேவேளை,...

கல்முனையில் கடத்தப்பட்ட பெண் யாழ்ப்பாணத்தில் மீட்பு

அம்பாறை - கல்முனை - சாய்ந்தமருதுவில் கடத்திச் செல்லப்பட்ட இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர் யாழ்ப்பாணத்தில் மீட்கப்பட்டுள்ளார். இவர் நேற்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம் கோப்பாயிலிலுள்ள வீடு ஒன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். கடந்த வாரம் வீட்டிலிருந்த நிலையில் குறித்த பெண் கடத்திச் செல்லப்பட்டதாக கல்முனை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டது. பெண் கடத்தப்பட்ட போது கடத்தப்பட்ட பெண்ணின் இளைய சகோதரியால்...

முள்ளிவாய்க்காலில் சரணடைந்தோரை சர்வதேசமோ ஜெனிவாவோ பாதுகாக்க முன்வரவில்லை!

இறுதியுத்தத்தின்போது முள்ளிவாய்க்காலில் சரணடைவோரை பாதுகாக்குமாறு ஜெனீவா உட்பட பல்வேறு சர்வதேச நாடுகளிடம் உதவிகோரியபோது எவரும் உதவி வழங்க முன்வரவில்லை என அப்போதைய பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். இறுதி யுத்தத்தின்போது சரணடைந்தவர்கள் தொடர்பில் முழுப்பொறுப்பையும் பசில் ராஜபக்சவே ஏற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் அவர் தெரிவிக்கையில் தமிழ் மக்கள் மீது உண்மையான...

சீமெந்து தொழிற்சாலை முன்னாள் பணியாளர்கள் ஒன்றுகூடல் நிகழ்வு

காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் முன்னாள் பணியாளர்கள் சங்கத்தின் கலந்துரையாடல் மற்றும் ஒன்றுகூடல் நிகழ்வு, நல்லூர் கந்தசுவாமி ஆலயத்துக்கு மேற்குப் பக்கமாகவுள்ள சூரிய சைவ உணவக கட்டடத்தில் எதிர்வரும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது. மேற்படி, ஒன்றுகூடலுக்கு காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் முன்னாள் பணியாளர்களையும் பணியாளர்கள் இல்லாதவிடத்து பணியாளரின் குடும்ப அங்கத்தவர்களையும் தவறாது...

புகைப்பிடித்தலுக்கு எதிரான தின கட்டுரைப் போட்டி

சர்வதேச புகைப்பிடித்தலுக்கெதிரான தினத்தை முன்னிட்டு, கல்வி அமைச்சு மற்றும் புகையிலை போதைப்பொருள் தொடர்பான தேசிய அதிகார சபை என்பன கூட்டாக இணைந்து பாடசாலை மாணவர்களிடையில் கட்டுரைப் போட்டியை நடத்தவுள்ளன. இப்போட்டியில், ஆரம்ப பிரிவைச் சேர்ந்த 3ஆம், 4ஆம் தர மாணவர்களிடையே 'புகைபிடிக்காத எனது அப்பா எமது சொத்தாகும்' என்னும் தலைப்பிலும், கனிஷ்ட பிரிவைச் சேர்ந்த 6ஆம்...

வித்தியா கொலை செய்யப்பட்டு இன்றுடன் ஓராண்டு பூர்த்தி

யாழ்ப்பாண மக்களிடையே பெரும் கொந்தளிப்பை அல்லது சமூகப் பயத்தை ஏற்படுத்திய, புங்குடுதீவு மாணவி வித்தியா வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இடம்பெற்று இன்றுடன் ஒரு வருடம் நிறைவடைகின்றது. 2015ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் திகதி பாடசாலைக்குச் சென்ற வித்தியா கடத்தப்பட்டு, பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரது சடலம் மறுநாள் காலையில் பற்றைக்குள் இருந்து...

இளைஞன் மீது தாக்குதல்!

அளவெட்டி கூட்டுறவுச் சங்க கடைக்கு அருகில் வியாழக்கிழமை (12) இரவு அலைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் மீது பின்னால் வந்த மூவர் இரும்பு குழாயால் தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச்சென்றுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்தனர். இதில் படுகாயங்களுக்குள்ளான இளைஞன் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அளவெட்டி பகுதியைச் சேர்ந்த பத்மநாதன் பிரசன்னா (வயது 21) என்ற...

பிர­பா­கரன் மறு அவ­தாரம் எடுத்தால் எவ­ரையும் குற்­றம்­சாட்­ட ­மு­டி­யாது

தமிழ் சமூ­கத்தின் மீது நம்­பிக்­கை­யின்றி போரினால் பாதிக்­கப்­பட்­ட­வர்­களுக்கு மத்­தியில் இரா­ணு­வத்­தி­னரை தொடர்ந்தும் நிறுத்­து­வ­தற்கு அர­சாங்கம் முயற்­சி­களை மேற்­கொள்­ளு­மாயின் மற்­றொரு பிர­பா­கரன் மறு அவ­தாரம் எடுத்தால் எவ­ரையும் குற்­றஞ்­சாட்­ட­மு­டி­யாது என வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி.விக்­கி­னேஸ்­வரன் சுட்­டிக்­காட்­டிக்­காட்­டி­யுள்ளார். அதே­நேரம் சமஷ்டி பிரி­வினை அல்ல என்­பதை வலி­யு­றுத்­தி­யவர் மத்­திய அர­சாங்­கத்தின் நேர­டித்­த­லை­யீ­டு­களால் வடக்கு மாகா­ண­சபை தொடர்ந்தும் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வ­தா­கவும் அவர் குற்­றம்­சாட்­டி­யுள்ளார்....

இது அனைவருக்கும் ஒரு பாடம்!

கடவத்த, கோப்பியவத்த பகுதியில் கைத்தொலைபேசியைப் பாவித்துக்கொண்டிருந்த மாணவன் மின்னல் தாக்கி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் கிரிவெல்ல மகா வித்தியாலத்தில் உயர் தரத்தில் கல்வி கற்றுவந்த, குடும்பத்திற்கு ஒரே ஆண் மகன் ஆவான். குறித்த சம்பவம் தொடர்பில் இறந்த மாணவனின் சகோதரி கூறுகையில், தம்பி எப்போதும் கையடக்கத்தொலைபேசியை கைகளில் வைத்துக்கொண்டே இருப்பான். அவன் யார் சொன்னாலும்...

முள்ளிவாய்க்காலில் மாணவி ஒருவரின் இதய அஞ்சலி!

முல்லைத்தீவு மாத்தளன் பகுதியில் இறந்த தனது உறவினர்களுக்காகவும், முள்ளியவளையில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்களுக்காகவும் மாணவி ஒருவர் பள்ளிச் சீருடையில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். இறுதிக்கட்டப் போரின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இந்த இனவிடுதலைப்போராட்டத்தில் மாணவர்களின் பங்களிப்பு அளப்பரியது. அந்தவகையில் தனது மக்களின் விடுதலைக்காக முதன்முதலாக உயிர் நீத்த முதல் மாணவ வீரன் பொன் சிவகுமார்...

உகாண்டா ஜனாதிபதி பதவியேற்பில் கலந்து கொண்ட மகிந்த

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உகாண்டா ஜனாதிபதியின் பதிவியேற்பு விழாவில் நேற்று (12) கலந்து கொண்டார். உகாண்டா அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின் பேரிலேயே முன்னாள் ஜனாதிபதி இந்த விழாவில் கலந்து கொண்டதாக அவரின் ஊடக செயலாளர் ரொஹான் வெலிவிட தெரிவித்தார். கடந்த பெப்ரவரி மாதம் இடம் பெற்ற அந்நாட்டு ஜனாதிபதி தேர்தலில் 61% வாக்குகள் பெற்று...

கையூட்டல், ஊழல், முறைகேடுகளை ஒழிப்பதே பிரதான நோக்கம்

இலங்கையினுள் ஊழலை ஒழிப்பதே தற்போதைய அரசின் பிரதான நோக்கம் என அதிபர் மைத்திபால சிறிசேன தெரிவித்துள்ளார். பிரித்தானியாவுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள மைத்ரிபால சிறிசேன லண்டன் நகரில் நேற்று இடம்பெற்ற ஊழல் எதிர்ப்பு சர்வதேச மாநாட்டில் உரையாற்றும் போது இதனை தெரிவித்தார். கையூட்டல், ஊழல் மற்றும் முறைகேடுகள் என்பவற்றை தடுப்பதற்காக புதிய அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து...

ஐநா வில் எழுப்பபடும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதிலளிக்க வேண்டும்

சித்திரவதை மற்றும் பாலியல் வன்புணர்வு போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக அரசாங்கம் உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமை செயலகத்தினால் அண்மையில் வெளியிடப்பட்ட தகவல்கள் தொடர்பில் இந்த கோரிக்கையை எதிர்கட்சி தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் அரசாங்கத்திடம் விடுத்துள்ளார். சின்குவா செய்தி ஸ்தாபனத்திற்கு அவர் வழங்கிய செவ்வியில் இதனை...

உருத்திரகுமாரன் செயல்முனைப்பில் ஒன்றுபட்டு தமிழீழம் அமைய பாடுபடவேண்டும்

உலகத் தமிழ் மக்கள் அனைவரும் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்களது செயல்முனைப்பில் ஒன்றுபட்டு தமிழீழம் அமைய பாடுபடவேண்டும் என்று தமிழக திரைநட்சத்திரம் சத்யராஜ் அவர்கள் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இடம்பெற இருக்கின்ற வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் 40வது ஆண்டு எழுச்சி நிகழ்வுக்கு வழங்கியிருந்த வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இக்கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார். இது தொடர்பில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமாரன்...

பசிலின் மனைவிக்கும் மகளுக்கும் அழைப்பு

மாத்தறையில் காணியொன்றைக் கொள்வனவு செய்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, மாத்தறை நீதிமன்ற நீதவான் யுரேஷா டி சில்வாவினால், கடும் நிபந்தனைகளுடன் கூடிய பிணையில் விடுவிக்கப்பட்டார். இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பில், கொழும்பிலுள்ள நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக, அவர் நேற்று வியாழக்கிழமை அழைக்கப்பட்டிருந்தார். அப்பிரிவுக்கு...

நாடு முழுவதும் அதிகளவிலான மழை பெய்யலாம்?

நாட்டின் வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்பம் காரணமாக நாட்டைச்சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும், கடலோரங்களிலும் இன்று(13) அதிகளவிலான மழைக்கான சாத்தியம் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் கிழக்கு, ஊவா, வடக்கு, வடமத்திய, மற்றும் தென்பகுதிகளில் மழைக்கான காலநிலையுடன் மேகமூட்டம் காணப்படுமெனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. பெரும்பாலான பகுதிகளில் மாலையிலும் இரவு வேளையிலும் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடிய...
Loading posts...

All posts loaded

No more posts