இளம் கிரிக்கெட் வீரர் தாக்கப்பட்டு கொலை!

வங்காளதேசம் டாக்காக நகரில் உள்ளூரில் கிரிக்கெட் போட்டி நடத்தினர். அப்போது இரு அணியினர் விளையாடி கொண்டு இருந்தனர். ஒரு அணியின் சார்பில் பாபுல் ஷைக்தர் என்ற 16 வயது சிறுவன் விக்கேட் கீப்பராக இருந்தார். அப்போது பந்து வீசியவர் நோபால் வீசியது குறித்து அம்பயருடன் பேசிகொண்டு இருந்தார். இதனால் கோபம் அடைந்த பேட்ஸ்மேன் அங்கிருந்த ஸ்டெம்பை...

50% அதிகமான மாணவர்கள் பகிடிவதைகளால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளர்

பல்கலைக்கழகத்தினுல் நம்பமுடியாத சித்திரவதைகள் மற்றும் செயற்பாடுகள் இடம்பெறுவதாக, உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் மொஹான் லால் கிரேரு தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தற்போது, பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் இருந்து, 50 சதவீதத்துக்கும் அதிகமான மாணவர்கள் பகிடிவதைகளால் உளரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருவதாக, அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தான் இவ்வாறான பகிடிவதைகளை எதிர்ப்பதாகவும்,...
Ad Widget

வடக்கு மக்கள் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும்

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவது தடைசெய்யப்பட்டிருந்தாலும், வடக்கு மக்கள் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த முடியும் என, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். விடுதலைப் புலிகளின் கொடிகளை காட்சிப்படுத்துதல் மற்றும் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்துதல் போன்றன தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அவற்றை...

பஷில் பிணையில் விடுவிப்பு

பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஷவை பிணையில் விடுவித்து, மாத்தறை நீதவான் உரேஷா டி சில்வா உத்தரவிட்டுள்ளார். இதன்படி, 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா சரீரப் பிணைகள் மூன்றில் அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலும், ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக்கிழமை நிதி குற்ற விசாரணைப்...

இலங்கையில் வெங்காய உற்பத்தியில் யாழ் மாவட்டமே முதலிடம் ஆண்டுக்கு 55,000 மெற்றிக்தொன் உற்பத்தி

இலங்கையில் வெங்காய உற்பத்தியில் யாழ் மாவட்டமே முதலிடத்தில் உள்ளது. ஏறத்தாழ 4,200 ஹெக்டயர் பரப்பளவில் ஆண்டுதோறும் 55,000 மெற்றிக்தொன் வெங்காயம் யாழ்ப்பாணத்தில் விளைவிக்கப்படுகிறது என வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குறிப்பிட்டுள்ளார். திருநெல்வேலி மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (12.05.2016) விவசாயிகளுக்கு வெங்காய விதைகள், வெங்காயக் குமிழ்கள் உட்பட நடுகைப் பொருட்கள் வழங்கும்...

முன்னாள் போராளி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

தலைச்சுற்று ஏற்பட்டு கீழே விழுந்ததில், தலையில் ஏற்பட்ட பலத்த காயம் காரணமாக, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த, விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி புதன்கிழமை (11) உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பரந்தன் பகுதியைச் சேர்ந்த சுரேந்திரன் விக்னேஸ்வரன் (வயது 46) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். விடுதலைப் புலிகள்...

பள்ளிக்குடாவில் காணி அபகரிப்பு முயற்சி முறியடிப்பு!

பூநகரி – பள்ளிக்குடாப் பகுதியில் சிறீலங்காக் கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கும் பணி அப்பகுதி மக்களின் எதிர்ப்பினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது. இன்று காலை 9.30 மணியளவில் காணிகளை அளவீடுசெய்வதற்காக நிலஅளவையாளர்கள் அங்கு சென்றிருந்தவேளை அப்பிரதேசத்தைச் சேர்ந்த நூற்றிற்கும் மேற்பட்ட மக்கள் ஒன்றுதிரண்டு தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தியுள்ளனர். இதனையடுத்து இப்பணி இடை நிறுத்தப்பட்டது. குறித்த காணி தேவாலயத்திற்குச் சொந்தமான காணி...

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் ஆரம்பம்!

இறுதி யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்தும் 'முள்ளிவாய்க்கால் நினைவு வாரம்’ இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில், வடமாகாண அமைச்சர் ஐங்கரநேசன், வடமாகாண உறுப்பினர்களான எம்.கே.சிவாஜிலிங்கம், கஜதீபன் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு ஈகைச் சுடரேற்றி அஞ்சலி செலுத்தியுள்ளனர். யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் ஈகை சுடரேற்றப்பட்டு மலரஞ்சலியுடன், அகவணக்கம் செலுத்தி...

பசில் ராஜபக்ஷ கைது!!

முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளார்.வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று காலை காவற்துறை நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு முன்னிலையாகி போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடூர பகிடிவதை- இடைநடுவில் கல்வியை கைவிட்ட மாணவி!!

பேராதனை பல்கலைக்கழகத்தின் புதிய மாணவியொருவர் தான் முகம் கொடுக்க நேர்ந்த கொடூர பகிடிவதை காரணமாக பல்கலைக்கழக படிப்பை இடைநடுவில் கைவிட்டுள்ளார். இணைந்த சுகாதாரத்துறை பாடநெறியொன்றை கற்பதற்காக பல்கலைக்கழகத்துக்குத் தெரிவான புதிய மாணவியொருவரே இவ்வாறு தனது பல்கலைக்கழகக் கல்வியை இடைநடுவில் கைவிட்டுள்ளார். பகிடிவதை காரணமாக குறித்த மாணவி பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறியமை குறித்து அறிந்து கொண்டவுடன் பேராதனை...

இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை உறுதி செய்யக் கோருகிறது அமெரிக்கா!

இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் காசியப் தெரிவித்துள்ளார். ஓரினச் சேர்க்கையாளர்கள், பால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் உள்ளிட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். அமெரிக்கத் தூதரகத்தில் வைத்து, ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகளுக்கான ஈகுவல் கிராவுன்ட் இலங்கை அமைப்பின்...

பேரவையின் தீர்வுத் திட்டம் அமெரிக்காவிடம் கையளிப்பு!

தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட வரைவு நேற்றய தினம் அமெரிக்காவிடம் கையளிக்கப்பட்டது. கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதுவராலய அரசியல் விவகாரங்களுக்கான பொறுப்பாளர் கெலி பிலிங்ஸ்சிலியிடம் (Kelly Billingsley) தமிழ் மக்கள் பேரவையின் உறுப்பினர்கள் இதனை நேரடியாகக் கையளித்தனர். இதனைத்தொடர்ந்து அமெரிக்கக் குழுவினருக்கும், தமிழ் மக்கள் பேரவை குழுவினருக்குமான சந்திப்பும் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற பஸ் விபத்து! ஐவர் படுகாயம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு சென்ற சொகுசு பஸ் நேற்று அதிகாலை புத்தளம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்ஸில் பயணித்த ஐவர் படுகாயமடைந்து புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்திலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு கொழும்பு நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த இந்த அதி சொகுசு பஸ் நேற்று அதிகாலை 3.15 மணியளவில்...

விரைவில் இலங்கையிலும் இ-மோட்டர் முறையில் வாகனங்களைப் பதிவுசெய்யலாம்!

உலகிலே பெருமளவான நாடுகளில் வாகன அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்கு இ-மோட்டர் முறை பயன்படுத்தப்பட்டு வருகின்றது. விரைவில் இ-மோட்டர் முறை சிறீலங்காவிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது என போக்குவரத்துத் துறை அமைச்சர் நிமால் சிறீ பால டி சில்வா தெரிவித்துள்ளார். திருகோணமலையில் மோட்டார் வாகன திணைக்களம் ஒன்றின் அலுவலகம் ஒன்றைத் திறந்து வைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,...

இலங்கையில் கஞ்சா செய்கை! ஏற்றுமதி செய்யவும் முடிவு!

ஆயுர்வேத மூலிகையாக இலங்கையில் கஞ்சா உற்பத்திசெய்யப்போவதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற ஆயுர்வேத மூலிகை மருந்து உற்பத்திகளை அறிமுகம் செய்யும் நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன கலந்துகொண்டார். இதன்போதே போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அத்துடன் உற்பத்தி செய்யப்படும் கஞ்சாவை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்....

இலங்கையில் இடம்பெற்றது இனப்படுகொலையே!

இலங்கையில் யுத்தம் நிறைவடைந்து ஏழு ஆண்டுகளின் பின்னர், சிறீலங்காவில் தமிழர்கள்மீது மேற்கொள்ளப்பட்டது ஒரு இனப்படுகொலையே என பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் ரயான் தெரிவித்துள்ளார். தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் பிரித்தானியக் கிளையினரால் நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அங்கு அவர் உரையாற்றும்போது, நாம் இவ்வாறான சாட்சியங்களைக் கேட்டுத் தெரிந்துகொள்ளும்போதுதான் போர்க்குற்றம்...

அடிப்படை வசதிகளற்ற நிலையில் அறுகுவெளி மக்கள்

தென்மராட்சியின் தனங்கிளப்பு அறுகுவெளிப் பகுதியில் மீளக்குடியமர்ந்துள்ள சுமார் 20 குடும்பங்கள் அடிப்படை வசதிகளற்ற நிலையில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளனர். போர் காரணமாக தமது சொந்த இடங்களிலிருந்து பல இடங்களில் இடம்பெயர்ந்திருந்து, தற்போது தங்களுடைய சொந்த இடத்துக்கு மீளக்குடியேறியுள்ளனர். ஆனால், அடிப்படை வசதிகளற்ற நிலையில் நெருக்கடி நிலையினை எதிர்கொண்டு வருகின்றனர். இக் கிராமத்துக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை. இந்தக்...

ஊடக சுதந்திரம் என்பது காட்டுக் குதிரைக்கான சுதந்திரம் இல்லை

ஊடகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரம் காட்டுக் குதிரைக்கு வழங்கப்பட்ட சுதந்திரம் இல்லை. ஜனநாயகத்தின் 4ஆவது தூணாகிய ஊடகங்கள் பொறுப்புடன் செயற்படவேண்டும். பிழையான, பொய்யான செய்திகளை வெளியிடக்கூடாது' என யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன், நேற்று புதன்கிழமை (11) எச்சரிக்கை செய்தார். யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் வைத்தே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கூறுகையில், 'யாழ்ப்பாணத்திலுள்ள நீதவான்...

பருத்தித்துறை- வவுனியாவுக்கு மேலதிக பஸ் சேவை

பருத்தித்துறையில் இருந்து வவுனியாவுக்கு மேலதிக பஸ்சேவையை வெள்ளிக்கிழமை (13) முதல் மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து சபையின் பருத்தித்துறை டிப்போ முகாமையாளர் கந்தப்பு கந்தசாமி, தெரிவித்தார். பருத்தித்துறை, மருதங்கேணி, புதுக்காட்டுச் சந்தியூடாக இச்சேவை வெள்ளிக்கிழமை (13) முதல் இடம்பெறவுள்ளது, வழமையாக பருத்தித்துறையில் இருந்து வவுனியாவுக்கு 6 பஸ்கள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இச் சேவையில் பருத்தித்துறையில் இருந்து...

‘நாய்’ பதிவின்றேல் ரூ.10 ஆயிரம் தண்டம்

நாய்களைப் பதிவு செய்துகொள்ளாவிடின், 10 ஆயிரம் ரூபாய் தண்டம் அறவிடப்படும் என்று, உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு அறிவித்துள்ளது. உள்ளுராட்சி மன்றங்களுக்கான நிர்வாக எல்லைக்குள் இருக்கின்ற சகல நாய்களும், வருடாந்தம் பதியப்படவேண்டும். பதிவுக்கட்டணம் அந்தந்த உள்ளுராட்சி மன்றங்களினால் தீர்மானிக்கப்படும் என்றும் அவ்வமைச்சு அறிவித்துள்ளது. நாய்களைப் பதியும் போது, அந்நாய்களுக்கு நீர்வெறுப்பு நோய்க்கான தடுப்பூசி வழங்குவதும்...
Loading posts...

All posts loaded

No more posts