- Monday
- August 10th, 2026
தான் உள்ளிட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களைப் படுகொலை செய்வதற்குத் தீட்டப்பட்ட திட்டம், செயற்படுத்தப்படுகின்றமை வெளிச்சத்துக்கு வந்துள்ளதெனவும், உயிர்தொடர்பில் பாரிய அச்சுறுத்தல் இருக்கிறது என்றும், அமைச்சரவைப் பேச்சாளரும் சுகாதார அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். ராஜபக்ஷ குழுவின் உறுப்பினரொருவர் தெரிவித்திருந்த கருத்திலிருந்து, இந்தச் சதித்திட்டம் தொடர்பிலான கருத்து, அம்பலமாகியுள்ளது என அவர் தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதியின் பணியாட்...
"மஹிந்த ராஜபக்ஷவும் அவரது சகாக்களான மோசடிக்கார கும்பல் விரைவில் கைதாகும்"இவ்வாறு அரசு நேற்று புதன்கிழமை அதிரடி அறிவிப்பை விடுத்துள்ளது. "மஹிந்த ராஜபக்ஷ ஊழல், மோசடி, திருட்டு என கறைபடிந்த சரிதை கொண்டவர். எனவே, அவர் தன்னை கறை படியாத தலைவர் எனக் கூற முடியாது. சதாம் ஹுசைன், கடாபி, ஹொஸ்னி முபாரக் போன்ற தலைவர்களும் பல...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டது தொடர்பில் கூட்டு எதிரணியினர் கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களிடம் முறையீடு செய்துள்ளனர். முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்தத் தகவலைத் தெரிவித்தார். இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து முன்னாள் ஜனாதிபதியின் உயிருக்கு ஏற்பட்டுள்ள ஆபத்து குறித்து தங்கள் நாடுகளிடம் தெளிவுபடுத்துமாறு கொழும்பிலுள்ள இராஜதந்திர வட்டாரங்களிடம் கேட்டுள்ளார் என...
கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைக்க ஒருபோதும் முஸ்லிம் மக்கள் இணக்கம் தெரிக்கக்கூடாது என்று மஹிந்த அணியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார். கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சதித்திட்டம் தீட்டியுள்ளது என்றும் அவர் குற்றம் சுமத்தினார். பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற...
ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழிருடன் சேஷ்டை விட்ட மூவரை ஊர்காவற்றுறைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் கடந்த செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணியளவில் ஊர்காவற்றுறையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:- வழமைபோன்று வீதியால் கடமைக்குச் சென்றுகொண்டிருந்த பெண் ஊழியருடன் மதுபோதையில் வந்த மூவர் சேஷ்டை விட்டுள்ளனர். உடனடியாகவே வைத்தியசாலைப் பணிப்பாளரூடாக பொலிஸாருக்கு...
ரயிலில் பிரவேசச் சீட்டின்றி (டிக்கட்) பயணிப்பவர்களுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி தற்போது 1500 ரூபாவாக இருந்த அதிகபட்ச அபராதத் தொகை 3000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பில் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக, அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார். நேற்று அரசாங்க...
எதிர்வரும் 18ம் திகதி யுத்தத்தால் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த தயாராகி வருவதாக, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனின் தலைமையில் வெல்லமுள்ளிவாய்க்கால் கடற்பகுதியில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதன்நிமித்தம் கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளார். நேற்று யாழ்...
வடக்கு மாகாணசபையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதற் காக எட்டுப்பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு மாகாணசபையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கடைப்பிடிக்கப்படவுள்ளது. கடந்த வருடத்தைப்போன்று முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு அமைதியான முறையில் நடைபெறுமெனவும், இதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தக் குழுவில் வடக்கு...
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் வாள்வெட்டுக்கள், கொள்ளைச் சம்பவங்களை உடனே தடுத்து நிறுத்துமாறு பிரேரணை ஒன்று முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை காவல்துறை மா அதிபருக்கும் அனுப்பிவைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்பிரேரணை கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வடமாகாண சபையின் 52ஆவது அமர்வில் வட மாகாணசபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டது. வடக்கில் அண்மைக்காலமாக நடைபெற்றுவரும் குற்றச்செயல்கள் காரணமாக...
புத்தூர் வாதரவத்தைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) மாலை புளியமரத்தின் கீழ் நின்று அலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்த இளைஞனின் முகத்தில், நபரொருவர் கத்தியால் குத்தியுள்ளதாக அச்சுவேலிப் பொலிஸார் தெரிவித்தனர். அதே இடத்தைச் சேர்ந்த அசோகதாசன் சதீஸ் (வயது 26) என்ற இளைஞனே முகத்தில் படுகாயமடைந்து அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக...
சந்தேகநபர்கள் தாங்கள் எதனையும் தெரிவிக்க வேண்டும் என்றால் நீதிமன்றத்துக்குள் வைத்து தெரிவிக்க முடியும். அதனை விடுத்து, நீதிமன்றத்துக்கு வெளியில் சிறைச்சாலை வாகனங்களுக்குள் இருந்து கத்துவதால் எந்தப் பிரயோனசனமும் இல்லை' என யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் கூறினார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கில் கைதாகி, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 சந்தேகநபர்களின் விளக்கமறியல் காலத்தை மேலும்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் இணங்காணப்பட்ட சந்தேக நபர்கள் 09 பேர்களுக்கான பிணை யாழ். மேல் நீதிமன்றத்தினால் இன்று மறுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாணைகள் எதிர்வரும் 10.08.2016 இடம்பெறும் என்றும் அன்றைய தினம் சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்தார். குறித்த வழக்கின்...
பாக்கு நீரிணையில் அமைந்துள்ள கச்சதீவில், புதிய தேவாலயத்தை அமைக்கும் பணிகளை சிறிலங்கா கடற்படை ஆரம்பித்துள்ளது. இந்தியாவுக்கும், சிறிலங்காவுக்கும் இடையில் உள்ள கச்சதீவில் புகழ்பெற்ற அந்தோனியார் தேவாலயம் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் நடைபெறும் திருவிழாவில் இருநாடுகளையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பது வழக்கம். கச்சதீவில் உள்ள அந்தோனியார் தேவாலயம் மிகவும் சிறியதாகவும், வசதிகள் குறைந்ததாகவும் இருக்கும்...
வித்தியா கொலை சந்தேக நபர்கள் மேல் நீதிமன்றில் நீதிபதி இளஞ்செளியன் முன்னிலையில் இன்று காலை ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தை மட்டுமன்றி முழு நாட்டையும் பரபரப்படையச் செய்திருந்த புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் மேல் நீதிமன்றத்தில் இன்று 11 ஆம் திகதி முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி...
வெள்ளவத்தை மற்றும் இரத்மலானை புகையிரத நிலையங்களுக்கு அருகில் புகையிரதத்தில் மோதுண்டு 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. வெள்ளவத்தை புகையிரத நிலையத்திற்கு அருகில் மாத்தறையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த சாகரிக்கா புகையிரதத்தில் மோதி பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இந்த விபத்தின்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்காலத்தில் காணமல்போன பலர் தற்போது உயிருடன் இருப்பது தெரியவந்துள்ளதாக மனித உரிமைச் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் தெரிவித்தார். எனினும், குறித்த நபர்கள் எங்கு இருக்கின்றார்கள் என்ற தகவல்களை முழுமையாக அறியமுடியவில்லை எனவும் அவர் கூறினார். வடக்கு, கிழக்கில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வெள்ளைவான் கடத்தலைக் கண்டித்து கொழும்பில் நேற்று செவ்வாய்க்கிழமை கண்டன...
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மகளிர் அணித்தலைவி தமிழினி எழுதியதாகக் கூறப்படும் “ஒரு கூர் வாளின் நிழலில்” நூல் சிங்களத்திலும் அவசர அவசரமாக வெளியிடப்படுகிறது. சாமிநாதன் விமல் மொழிபெயர்த்திருக்கும் இந்த நூலின் வெளியீட்டு நிகழ்வை “தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு” ஒழுங்கு செய்திருப்பதாகத் தெரியவருகிறது. மேலும் இந்த நூலை சிங்களத்தில் மொழிபெயர்க்கும் முயற்சிகளில்...
கந்த புராணக் கலாசாரத்தைக் கொண்ட யாழ். மண் இன்று காடையரின் அராஜகத்தின் விளைநிலமாகி வாள் வெட்டுக் கலாசாரத்தின் சொந்தமாகிவிட்டது என அகில இலங்கை இந்துமா மன்றம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அகில இலங்கை இந்துமா மன்றம் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும்தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, “யாழ்ப்பாணத்தின் இளம் சமுதாயத்தை சீர்கெட்ட பாதையிலிருந்து சீர்திருத்தப் பாதைக்கு கொண்டு வருவதற்கு அறநெறி...
வாள்வெட்டு, கொள்ளை மற்றும் வழிப்பறிக் கொள்ளை உள்ளிட்ட சமூக விரோத சம்பவங்கள் அண்மைக் காலமாக யாழ் குடா நாட்டில் இடம்பெற்று வருக்கின்றன. அதிலும் கடந்த இரு வாரங்களாக இச்சம்பவங்கள் பெரிதும் அதிகரித்துள்ளன. இக்காலப் பகுதியில் பத்துக்கும் மேற்பட்ட வாள்வெட்டு சம்பவங்களும், நாற்பதுக்கும் மேற்பட்ட கொள்ளைச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன. இச்சம்பவங்களினால் சுமார் பத்து பேர் காயமடைந்து சிகிச்சை...
வெள்ளைக் கொடியோடு சென்று சிங்கள ராணுவத்திடம் சாரணடைந்த, நடேசன் படுகொலை செய்யப்பட்டது யாவரும் அறிந்ததே. இன் நிலையில் இன்றைய தினம் பிரித்தானிய பாராளுமன்றில் நடேசனின் மகன் பல பிரித்தானிய MP க்களுக்கு முன்னதாக முதல் தடவையாக சாட்சியம் அளித்துள்ளார். முள்ளிவாய்க்காலில் என்ன நடந்தது என்றும். இலங்கை ராணுவம் தனது அப்பாவை கொலைசெய்தது என்ற உண்மையை அவர்...
Loading posts...
All posts loaded
No more posts
