Ad Widget

வடக்குடன் கிழக்கை இணைக்க முஸ்லிம்கள் ஒருபோதும் இணங்கக்கூடாது!

கிழக்கு மாகாணத்தை வடக்கு மாகாணத்துடன் இணைக்க ஒருபோதும் முஸ்லிம் மக்கள் இணக்கம் தெரிக்கக்கூடாது என்று மஹிந்த அணியின் உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எச்.எம். அஸ்வர் தெரிவித்தார்.

azwer

கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சதித்திட்டம் தீட்டியுள்ளது என்றும் அவர் குற்றம் சுமத்தினார்.

பொரளை என்.எம்.பெரேரா கேந்திர நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“வரலாற்று காலம் தொட்டு பிரிவினைவாதத்திற்கு எதிராகச் குரல்கொடுத்துவரும் ஒரே ஒரு இனம் முஸ்லிம்களாகும். வடக்கில் பயங்கரவாதச் சூழலில் நிலவிய போது முஸ்லிம்கள் விரட்டியடிக்கப்பட்டதை மறக்க முடியாது.

வடக்கு, கிழக்கை இணைக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்து வருகின்றது. கிழக்கு மாகாணத்தை தமிழர்களிடம் ஒப்படைக்க வேண்டியது முஸ்லிம்களின் கடமை என்று மட்டக்களப்பில் பிரதி முதல்வராக இருந்தவர் தெரிவித்துள்ளார். இதற்கு ஒருபோதும் அனுமதியளிக்கப்போவதில்லை. முஸ்லிம் மக்களும் இடமளிக்கக்கூடாது.

வடக்கு, கிழக்கை இணைக்க தான் அனுமதியளிக்கப்போவதில்லை என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களின் காணிகளை அபகரிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சதித்திட்டம் தீட்டியுள்ளது. தோப்பூர் பிரதேசத்தில் முஸ்லிம்கள் பாரம்பரியமாக வாழ்ந்து வருகின்றனர். இதை தமிழர்களின் காணி எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கின்றது.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அரசுக்குச் சார்பாகச் செயற்படுவதால், அவர் முஸ்லிம் மக்கள் தொடர்பில் அக்கறையின்றிச் செயற்படுகின்றார்” – என்றார்.

Related Posts