- Monday
- August 10th, 2026
வவுனியா- பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்று வந்த பத்து பேர், விடுதலை செய்யப்பட்டனர். விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு புனர்வாழ்வு பெற்று வந்த கிராம சேவகர்கள் 4 பேர் உள்ளிட்ட 10 பேரே, விடுவிக்கப்பட்டனர். இவர்களில் 6 பேர் ஒரு வருட காலமும், 4 கிராம சேவகர்கள் மூன்று மாத...
சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து 1.5 பில்லியன் கடனைப் பெற்றுக்கொள்ள தான் எதிர்பார்ப்பதாக விசேட செயற்றிட்டங்களுக்கான அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், உலக வங்கியிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலரும் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 300 மில்லியன் அமெரிக்க டொலரும் சிறீலங்காவுக்குக்...
குடும்பத்தகராற்றின் போது கணவனை காட்டுக்கத்தியால் வெட்டி படுகாயமடையச் செய்த மனைவியை, தலா 75 ஆயிரம் ரூபாய் பெறுமதியான இரண்டு ஆட்பிணையில் செல்ல கிளிநொச்சி நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, நேற்று செவ்வாய்க்கிழமை (10) உத்தரவிட்டார். உருத்திரபுரம், எள்ளுக்காடுப் பகுதியில் கணவன், மனைவி இருவருக்கு இடையில் திங்கட்கிழமை (09) தகராறு ஏற்பட்டு, அது கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது...
வடமாகாணத்தில் கடந்த காலங்களில் வழங்கப்பட்ட முறையற்ற நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் புதிய தலைவராக ஆளுங்கட்சி உறுப்பினர் கந்தையா சர்வேஸ்வரன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவின் முன்னாள் தலைவரான எம்.அன்டுனி ஜெயநாதன், தனது தலைவர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, புதிய தலைவர் நேற்று செவ்வாய்க்கிழமை (10) அறிவிக்கப்பட்டுள்ளார். 7 பேர் கொண்ட இந்தக்...
இளவாலைப் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (10) ஏற்பட்ட மினி சூறாவளி காரணமாக இளவாலை கன்னியர்மடம், இளவாலை பொலிஸ் நிலையம் மற்றும் புனித சென்.ஜேம்ஸ் யாகப்பர் ஆலயம் ஆகியவற்றின் கூரைகள் சேதமடைந்துள்ளன. இளவாலைப் பகுதியில் நேற்று மழையுடன் கூடிய மின் சூறாவளியும் அடித்ததால், மேற்படி பொது இடங்கள் சேதடைந்தன. இளவாலை பொலிஸ் நிலையத்தின் கூரை, சுழல்காற்றுக் காரணமாக...
வித்தியா கொலை வழக்கில் 13 ஆவது நபரை குற்றப்புலனாய்வுப் பொலிஸார் தனிமையில் நீதிவான் வை.எம்.எம்.றியால் முன்பாக நேற்று முற்படுத்தினர். புங்குடுதீவில் மாணவி வித்தியா கடத்தப்பட்டு கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டார். இக்கொலை நடந்து ஒரு வருடம் கழிகின்ற நிலையில் 13 ஆவது நபர் ஒருவர் நேற்று ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். புங்குடுதீவை...
வடக்கு மாகாண சபையின் நேற்றைய அமர்வில் பொருளதார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணி தொடர்பான பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இதையடுத்து ஆளும் கட்சியினரே முதலமைச்சர் விக்னேஸ்வரன், விவசாய அமைச்சர் ஐங்கரநேசன் ஆகியோரை சபையில் நுழைய விடாமல் செய்வோம் எனப் போர்க்கொடி தூக்கினர். வடக்கு மாகாண சபையின் 52 ஆவது அமர்வு நேற்று நடந்தது. இதன்போது தொலைபேசி...
மாகாண சபை அமர்வை நடத்த விடாது குழப்பிக் கொண்டிருந்த உறுப்பினர்களிடம் "என்னை செம்மறி என்று நினைத்துப் பேசிக்கொண்டிருக்காதீர்கள்" என சீறினார் அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம். நேற்று நடந்த வடக்கு மாகாண சபையின் 52 ஆவது அமர்வில் நிரந்தரக் குழுக்களுக்கான தெரிவு இடம்பெற்றது. அப்போது ஆளும் கட்சி உறுப்பினர்கள் இடையே கடும் வாய்த் தர்க்கம் ஏற்பட்டது. அவைத்...
களனி பல்கலைக்கழக நிர்வாகிகளின் உத்தரவை கவனத்தில் கொள்ளாது செயற்பட்ட 13 மாணவர்களை நீதிமன்றம் கடுமையாக எச்சரித்துள்ளது. குறித்த பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடுவதால் கடந்த 26ம் திகதி மாலை 05.00 மணிக்குள் அனைவரையும் விடுதிகளில் இருந்து வௌியேறுமாறு நிர்வாகிகளால் அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் சில மாணவர்கள் இந்த உத்தரவை கவனத்தில் கொள்ளாது அங்கு தங்கியிருந்துள்ளனர். இவர்களை அங்கிருந்து வௌியேறுமாறு...
டெங்கு நுளம்பு பெருகும் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடும் சட்டம் நடவடிக்கை எடுக்கப்படும் என மாகாண மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார். மேலும், மக்களை தெளிவுபடுத்துவதால் மாத்திரம் டெங்கு நோய் பெருகுவதை தடுக்க முடியாது என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். எனவே டெங்கு பெருகும் சூழலை வைத்திருப்போருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை...
வடக்கு கிழக்கு மாகாணத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்றுவரும் வெள்ளைவான் கடத்தல் மற்றும் கைது போன்ற நடவடிக்கைகளை கண்டித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. கொழும்பு புறக்கோட்டையில் உள்ள அமைச்சர் மனோ கணேசனின் அலுவலகத்துக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் ஆரம்பமாகிய பேரணி கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் கிளை வரை சென்றது. அதன்பின்னர் ஐ.நா அலுவலகம் முன்பாக அமைதியான...
வடமாகாண தொழில்நுட்ப சங்கம் மாகாண சபை முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை பகல் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. வவுனியா, மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த தொழிநுட்ப சங்கத்திலுள்ளவர்களே இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த மாவட்டங்களில் தொழில்நுட்ப மையங்கள் உள்ளன. இதில் கல்விப் பொதுத்தராதர சாதாரண தர தகைமைகளோடு பயிற்சி நெறியை முடித்த தங்களை தொழில்வாய்ப்புக்களுக்கு...
வன்னி மாவட்ட தொண்டர் ஆசிரியர்கள் வடமாகாண சபைக்கு முன்பாக கூடி கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9 மணிமுதல் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பல்வேறு போராட்டங்கிளன் பின் தங்களுக்கான நிரந்தர நியமனத்திற்கான பெயர்ப்பட்டியல் வெளியிடப்பட்டுள்ள போதிலும் அதனை விரைவில் வழங்குமாறு கோரியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டு வருகின்றது. வடமாகாண சபை...
'தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் கழுத்தறுப்புக்கள், கருவறுப்புக்கள் மற்றும் வெட்டுக்குத்துக்கள் என்பன தாராளமாக நடக்கின்றன' என வடமாகாண சபையின் பிரதி அவைத்தலைவரும் தமிழரசுக் கட்சியின் உறுப்பினருமான எம்.அன்டனி ஜெயநாதன் பகிரங்கமாக தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் செவ்வாய்க்கிழமை (10) நடைபெற்றது. இதன்போது உரையாற்றக் கிடைத்த சந்தர்ப்பத்திலேயே ஜெயநாதன் இவ்வாறு கூறினார்....
'வடமாகாணத்தில் வழங்கப்பட்ட முறையற்ற நியமனங்கள் மற்றும் இடமாற்றங்கள் தொடர்பில் விசாரிக்க அமைக்கப்பட்ட குழுவின் தலைவர் பதவியை பிரதி அவைத்தலைவர் எம்.அன்டனி ஜெயநாதன், கடந்த ஜனவரி மாதம் இராஜினாமா செய்துள்ளார். இதனால், அந்தக் குழுவின் செயற்பாடுகள் முடங்கியுள்ளன' என வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண...
உயர்பாதுகாப்பு வலயமாகவிருந்து 2015ஆம் ஆண்டு இறுதியில் விடுவிக்கப்பட்ட வலிகாமம் வடக்கு (தெல்லிப்பழை) பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பலாலி வடக்கில் 15 குடும்பங்கள் எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி மீளக்குடியேறியுள்ளனர். பலாலி வடக்கு அன்டனிபுரம் பகுதி, கடந்த 2015 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 29ஆம் திகதி விடுவிக்கப்பட்டது. மேற்படி பகுதியில் மீளக்குடியமர்வதற்கு 165 குடும்பங்கள் பதிவுகளை மேற்கொண்டிருந்தனர்....
சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைய முற்பட்டதாக கூறப்படும், 12 இலங்கையர்கள், கொழும்புக்கு மீள அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை அரசாங்கம் உறுதி செய்துள்ளது. தற்போது இவர்கள் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் விசாரணைகளுக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் பெரும்பான்மை இனத்தவர்களான சிங்களவர்களே இவ்வாறு அவுஸ்திரேலியாவில் இருந்து திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கை குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரி ஒருவர் வௌிநாட்டு...
ஊடகங்கள் சில எனது மனைவிக்கும் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிக்கும் தொடர்பு என செய்திகள் வெளியிட்டு இருந்தன. இதனால் மனைவி மிகுந்த மன வேதனை அடைந்துள்ளார் என புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டு உள்ள சந்தேக நபர்களில் ஒருவர் நீதவானிடம் முறையிட்டார். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு விசாரணை நேற்றய...
யாழ் குடாநாட்டில் வாள்வெட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடும் குழுக்களை கைது செய்வதற்கு அதிடிப்படையைக் களத்தில் இறக்குமாறு யாழ்ப்பாணம் பிரதி பொலிஸ்மா அதிபருக்கு நீதிபதி இளஞ்செழியன் பணிப்புரை பிறப்பித்துள்ளார். யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் கொள்ளைச்சம்பவங்களைக் கட்டுப்படுத்துவதற்கு பிரதேச பொலிசாருக்கு உதவியாக விசேட அதிரடிப்படையைக் களத்தில் இறக்கி குற்றச்செயல்களில் ஈடுபடும் கும்பல்களைக் கைது செய்யுமாறு...
வெளிநாடுகளில் பணத்தைப் பதுக்கி வைத்துள்ளவர்கள் பற்றிய தகவல்கள் அடங்கிய பனாமா ஆவணங்களில் இடம்பெற்றுள்ளவர்கள் பற்றிய மற்றொரு தொகுதி பட்டியல் வெளியாகியுள்ள நிலையில், முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்சவின் நெருங்கிய சகாவான நிசங்க சேனாதிபதியின் பெயரும் அதில் இடம்பெற்றுள்ளது. பனாமா ஆவணங்களின் மற்றொரு தொகுதி நேற்று வெளியானது. இதில் சிறிலங்காவைச் சேர்ந்த, நிறுவனங்கள், தனிநபர்களின் பெயர்...
Loading posts...
All posts loaded
No more posts
