- Monday
- August 10th, 2026
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார். இதற்கு முன்னர் இருந்த அரச தலைவர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார். பாரிய நிதிமோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக கோட்டாபய ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை முன்னிலையாகினார். இதன்பின்னர்...
ஸ்ரீலங்காவின் வட பகுதி அபிவிருத்தி நோக்கிச் செல்வதற்கான மாற்றத்தை ஏற்படுத்த கனேடிய அரசாங்கம் உதவி வழங்கவுள்ளது. வட பகுதியில் கனடாவின் நிதி உதவியுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களை, கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெலி வைட்டிங் மற்றும் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டத்திற்கான ஸ்ரீலங்கா பிரதிநிதி பீற்றர் பச்சுலர் ஆகியோர் பார்வையிடவுள்ளனர். பாற்பண்ணை மற்றும் விவசாயத்தை அடிப்படையாக கொண்ட பல்வேறு...
புங்குடுதீவு மாணவியின் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களின் உறவினர்கள் தனக்கு அச்சுறுத்தல் விடுவதாக மாணவியின் தாயார் சட்டத்தரணி ஊடாக நேற்று நீதிமன்றின் கவனத்திற்கு கொண்டு வந்தார். புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்கு நேற்றய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது மாணவியின்...
கிளிநொச்சி நகரின் மத்தியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் நேற்றய தினம் மூன்று ஆசிரியர்கள் சில நிமிடங்கள் தாமதமாக பாடசாலைக்கு வந்தமையினால் பாடசாலையின் பிரதான வாயிற்கதவை பூட்டி வெளியில் விட்டுள்ளார் அதிபர். இதனால் பிந்தி வந்த மாணவர்களுடன் ஆசிரியர்களும் பரிதாபமாக பாடசாலைக்கு வெளியில் நின்ற சம்பவம் பலரையும் அதிருப்திக்குள்ளாக்கியுள்ளது. நேற்று காலை ஏற்பட்ட இச் சம்பவத்தினால் பாடசாலையின்...
கடற்றொழிலில் ஈடுபட்டு வரும் தென்பகுதி மீனவர்களுக்கு மன்னாரில் தொழில் செய்ய மாற்றிடம் கொடுத்து, அவர்களுக்கு குடியேற காணியும் வழங்கி, குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கமும் அதிகாரிகளும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றதை ஏற்றுக்கொள்ள முடியாது என வடமாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் தலைவர் என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார். மன்னார் மாவட்ட கிராமிய மீனவ சம்மேளனம் மற்றும் மன்னார் மாவட்ட மீனவ...
இலங்கையில் தினமும் 658 கரு கலைப்பு சம்பவங்கள் இடம்பெற்றுவருவதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. களனி பல்கலைக்கழகத்தின் சமூக அறிவியல் பிரிவு பேராசிரியர் கே. கருணாதிலக்க அவர்களே இதனை தெரிவித்துள்ளார். கருக்கலைப்பு சட்டபூர்வமாக்குதல் வேண்டுமா என்ற தலைப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இணைந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். ஆண்டு தோறும்...
சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் மாணவ, மாணவிகள் கல்வி பயிலும் வகையில், வடமாகாணத்தில் கலப்புப் பாடசாலைகளை உருவாக்கவேண்டுமென வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்தார். அவர், ஒன்றிணைந்த கட்டளைத் தலைமையகத்தின் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் விஸ்வமடு பயிற்சி முகாமை, நேற்றுத் திங்கட்கிழமை பார்வையிட்டார். அதன் பின்னர், அங்கு இடம்பெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே...
வீட்டுத்தோட்டத்தின் ஊடாக வீட்டுக்குள் நுழையும் கள்வர்களைபு; பிடிப்பதற்காக, சட்டவிரோதமான முறையில் போடப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்குண்டு, 15 வயதான மாணவனொருவன் பலியான சம்பவம், வவுனியாவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா, செலினிகம 2ஆவது ஒழுங்கையிலேயே இந்தச் சம்பவம் நேற்றுத் திங்கட்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில், 9ஆம் தரத்தில் பயிலும் அமில சந்தருவன் குமார (வயது 15) பலியாகியுள்ளான். இவர்,...
பல்கலைக்கழகங்களுக்குள் பகிடிவதை சட்ட ரீதியாக தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அந்த சட்டத்தை மீற எவருக்கும் இடமில்லை எனவும், உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். நாவலப்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்து வௌியிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, "அனைத்து பல்கலைக்கழகங்களிலும் அல்ல ஒன்றிரண்டில் பகிடிவதை தொடர்பில் தகவல் பதிவாகியுள்ளது. உலகில் எங்கும் இதுபோன்ற பகிடிவதைகள்...
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஒன்பதாவது சந்தேகநபர் கைது செய்யப்பட்ட பின்னர், எவ்வாறு வெள்ளவத்தைக்குச் தப்பிச் சென்றார் என்பது தொடர்பாக தெளிவானதும், சரியானதுமான அறிக்கையினை நீதிமன்றில் சமர்ப்பிக்குமாறு, உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று (09) ஊர்காவற்றுறை நீதவான் எம்.எம்.றியால் குறித்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு நேற்று ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்காக எடுத்துக்கொள்ளப்பட்டபோது, 9 சந்தேகநபர்களும்...
சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு கொழும்பு 2 ஆம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எட்வேட் ஜுலியனை அவரது தந்தை இன்று திங்கட்கிழமை பார்வையிட்டுள்ளார். அத்துடன், குற்றப்புலனாய்வு பிரிவினரின் பாதுகாப்பில் கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஜுலியனின் மனைவியை பார்வையிட அதிகாரிகள் அனுமதி வழங்கவில்லை என ஜுலியனின் தந்தை செய்தி ஊடகம் ஒன்றிற்க்கு தெரிவித்துள்ளார். கடந்த...
வற் வரி திருத்தத்தால் அதிகரிக்கப்பட்ட இந் நாட்டு தொலைபேசி கட்டணத்தால் மக்களுக்கு பாரிய சுமை ஏற்படாது என தொலைத் தொடர்பு அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். வற் வரி உயர்வு நியாயப்படுத்த முடியாது எனினும் நிலவும் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கையை அரசாங்கம் மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். உலகத்தில் குறைந்த...
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், அமைச்சர் மனோகணேசனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றுது. இதன்போது வடமாகாணத்துக்கு மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கான காணித் தெரிவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார். இதன்போது, வடக்கில் அமைக்கப்படவுள்ள பொருளாதார...
ஆசிரியர்கள் மாணவர்களுக்கான வழிகாட்டிகள். மாணவர்களுக்கு பாடங்களைத் தெளிவாகப் புரியவைத்துப் பரீட்சைகளில் சித்திஅடைய வைப்பதில் வழிகாட்டிகளாக விளங்குகின்றார்கள். இது வாழ்வதற்கு உழைப்பதற்கு அவசியமானது. ஆனால், இது மட்டும் போதாது. மாணவன் வாழ்க்கையிலும் நல்லதொரு மனிதனாக வெற்றிபெற வேண்டும். இதற்கு ஆசிரியர்கள் மாணவர்களின் இலட்சிய வழிகாட்டிகளாகவும் திகழவேண்டும் என்று விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். ஆனைப்பந்தி மெதடிஸ்ற் மிசன்...
பெறுமதி சேர் வரி மாற்றத்துடன் பஸ் கட்டணத்திலும் திருத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என, கோரிக்கைகளோ அழுத்தங்களோ விடுக்கப்படவில்லை என, போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா தெரிவித்துள்ளார். பஸ் கட்டண அதிகரிப்பு குறித்து சில ஊடகங்களில் வௌியான செய்திகள் தொடர்பில் இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து வௌியிட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்....
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரான கேபி என அழைக்கப்படும் குமரன் பத்மநாதனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடுமாறு கோரி, தாக்கல் செய்யப்பட்ட மனுவை எதிர்வரும் 30ம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தினால் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது....
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வாளால் வெட்டிக் கொள்ளையடித்தமை மற்றும் தனியான வாள்வெட்டுச் சம்பவங்கள் என்பவற்றுடன் தொடர்புடைய பாடசாலை மாணவர்கள் இருவர் உட்பட நான்கு சந்தேகநபர்களை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்துள்ளதாக யாழ்ப்பாண குற்றத்தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர்களில் இருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியிலுள்ள பிரபல பாடசாலை ஒன்றில் உயர்தர கணிதப் பிரிவில் கல்வி...
கிளிநொச்சி, பூநகிரி பிரதேச செயலகத்துக்குட்பட்ட வெட்டுக்காடு கிராமத்தில் ஒரு பகுதியை இராணுவம் அபகரித்து, அவர்களது இராணுவத் தேவைக்குகாகப் பல வருடங்கள் உபயோகித்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று திங்கட்கிழமை (09) காலை, குறித்த பகுதியை இராணுவம் பதிவுசெய்யும் முயற்சியில் இறங்கியபோது, அது அப்பிரதேச பொதுமக்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் ஆகியோரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. சுமார் 22...
சீமெந்து மூட்டையொன்றின் விலையை 40 ரூபாவிலிருந்து 50 ரூபாயாக அதிகரிக்குமாறு, சீமெந்து நிறுவனங்கள், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியுள்ளன. வற் வரி அதிகரிக்கப்பட்டுள்ளமையினாலேயே சீமெந்தின், விலையையும் அதிகரிக்குமாறு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டைச்சூழவுள்ள அனைத்துப் பாகங்களிலும் இன்று(09) பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. நாட்டின் பல மாகாணங்களில் குறிப்பாக 2.00 மணிக்குப் பின்னர் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. அத்துடன் சில பிரதேசங்களில் இம்மழைவீழ்ச்சியினளவு 75 மில்லிமீற்றரைத்...
Loading posts...
All posts loaded
No more posts
