சிறுமி மீது பாலியல் துஸ்பிரயோகம், இளைஞன் தலைமறைவு!

கிளிநொச்சி விநாயகபுரம் பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக பொலீஸார் தெரிவிக்கின்றனர். குறித்த சிறுமியின் வீட்டுக்கருகில் வசித்த அம்பாள்குளம் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே சிறுதியை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியுள்ளதாகவும், குறித்த சம்பவம் இருவாரங்களுக்கு முன் இடம்பெற்றது என்றும் கூறப்படுகிறது. இது தொடர்பில் ஞாயிற்று கிழமை கிளிநொச்சி பொலீஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து சிறுமியின்...

தொண்டர் ஆசிரியர் நியமனத்தில் முறைகேடு!!

கிளிநொச்சி மாவட்டத்தில் தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனம் வழங்குவதில் முறைகேடு இடம்பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கிளிநொச்சி வலயக் கல்விப் பணிமனையில் பெயர் விபரம் அடங்கிய பட்டியல் வெளிப்படுத்தப்பட்ட நிலையில், அப்பட்டியலில் முறைகேடான வகையில் பெயர் விபரம் இடம்பெற்றுள்ளதாக தொண்டர் ஆசிரியர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இப்பெயர்ப் பட்டியலில் 277 பேருடைய பெயர் விபரங்கள் அடங்கியுள்ள போதிலும், 200க்கு உட்பட்ட...
Ad Widget

சுற்றுலாப் பேரூந்து மீது கல்வீச்சு: ஐந்து இளைஞர்கள் கைது

யாழ்ப்பாணத்தில் அண்மையில் சுற்றுலாப் பயணிகளின் பேரூந்து மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மானிப்பாய், கல்வியங்காடு, கோப்பாய், மற்றும் உரும்பிராய் ஆகிய பகுதிகளை சேர்ந்த இளைஞர்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற 9 பாரிய குற்றச் செயல்களுடன் குறித்த...

யாழில் குற்றச்செயல்கள்; சமூக நலன் விரும்பிகள் கொழும்பில் கூடி ஆராய்வு

யாழ்ப்பாணத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளமை தொடர்பில் கவலையும் விசனமும் அடைந்துள்ள சமூக நலன்விரும்பிகள் குழு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் கூடி ஆராய்ந்துள்ளது. யாழ்.ஆயர் ஞானப்பிரகாசம் உட்பட்ட கிறிஸ்தவ, இந்து மத குருமார், மருத்துவர்கள், சட்டத்தரணிகள், பேராசிரியர்கள், ஊடகத்துறையினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் வாள்வெட்டு சம்பவங்கள், கொள்ளைகள், மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் பாவனை,...

பூநகரி பிரதேச மருத்துவமனையில் நீர்ப்பற்றாக்குறையினால் நோயாளர்கள் அவதி!!

பூநகரி பிரதேச மருத்துவமனையில் அதிகரித்துள்ள நீர்ப்பற்றாக்குறையால் நோயாளர்களை பராமரிக்க முடியாதுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் நோயாளர்கள் நாளாந்தம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படுவதாக வைத்தியசாலை வைத்தியர் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரியப்படுத்தப்பட்டும், இதுவரை எந்தவொரு மாற்று நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை...

வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டம்; பிரதி ஒன்றை வழங்குமாறு கோரிக்கை

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டத்தின் பிரதி ஒன்றை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார். வடக்கு மாகாணசபையின் தீர்வுத்திட்டம் கடந்த மாதம் 22 ஆம் திகதி சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. குறித்த தீர்வுத்திட்டம் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம்...

சாவகச்சேரி தற்கொலை அங்கி விவகாரம்: அழைப்புவிடுத்து ஏமாற்றிய அதிகாரிகள் மீது மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரம் தொடர்பாக கைதுசெய்யப்பட்டு கொழும்பு 2 ஆம் மாடியில் தடுத்துவைக்கப்பட்டுள்ள எட்வேட் ஜுலியனை பார்வையிட வருமாறு அழைப்புவிடுத்து ஏமாற்றிய அதிகாரிகளுக்கு எதிராக கொழும்பு மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்படவுள்ளது. இந்த முறைப்பாட்டை இன்று திங்கட்கிழமை காலை ஜுலியனின் தந்தை சட்டத்தரணியுடன் சென்று பதிவு செய்யவுள்ளதாக தெரிவித்தார். கடந்த வெள்ளிக்கிழமை...

மகிந்தவிற்கு இராணுவப் பாதுகாப்பு வேண்டும்! ஐநாவுக்கு கடிதம்!

முன்னாள் அதிபர் மகிந்தராஜபக்ஷவுக்கு இராணுவப் பாதுகாப்பு வேண்டுமெனக் கோரி கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஜெனீவாவில் உள்ள சர்வதேச பாராளுமன்றத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளனர். கூட்டு எதிர்க்கட்சியினைச் சேர்ந்த 50 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டு அனுப்பியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார். முன்னாள் அதிபருக்கு விடுதலைப்புலிகளிடமிருந்து தொடர்ந்து கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டு வருவதால் அவருக்கு...

இலங்கையில் காணாமல் போனவர்கள் மற்றும் சித்திரவதைகள் குறித்து ஐ.நா. நிபுணர்கள் கவலை!

இலங்கையில் போர் நடந்த காலத்துடன் ஒப்பிடுகையில், தற்போது சித்திரவதைகள் குறைந்துள்ளபோதிலும் அதற்கு முழுமையாக முற்றுப்புள்ளி வைக்கப்படவில்லை என ஐ.நாவின் இரண்டு உயரதிகாரிகள் கவலை வெளியிட்டுள்ளனர். அரசின் அழைப்பை ஏற்று ஒருவார காலம் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நாவின் இரு உயரதிகாரிகள் தமது பயணத்தின் முடிவில் இக்கருத்தை வெளியிட்டுள்ளனர். ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான வல்லுநர்கள் மொனிக்கா...

பகிடிவதை தொடர்பில் புதிய பிரகடனம்; குற்றவாளிகளுக்கு சிறைத்தண்டனை

பகிடிவதை மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைத் தடுப்பது தொடர்பிலான புதிய பிரகடனம் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் பொதுநலவாய பல்கலைக்கழக சங்கம் ஆகியன இணைந்து இந்த பிரகடனத்தை தயாரித்துள்ளன. களனி பல்கலைக்கழகத்தில் இந்த பிரகடனம் முதலாவதாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுனந்த மத்தும பண்டார இன்று இடம்பெற்ற...

தாயகத்தில் முதலீடு செய்ய புலம்பெயர் தமிழர்களுக்கு சம்பந்தன்அழைப்பு!

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் அபிவிருத்திக்கு உதவ புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் முன்வரவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் அழைப்புவிடுத்துள்ளார். திருகோணமலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், வடக்குக் கிழக்குப் பகுதிகளில் பொருளாதார அபிவிருத்திகளை மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளநிலையில் புலம் பெயர்ந்துள்ள ஈழத்தமிழர்கள் இப்பகுதிகளில் முதலீடு...

படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் ஆலோசனை!

வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பிலும், அதனை விடுவிப்பது தொடர்பானதுமான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் அபயக்கோன் தலைமையில் இடம்பெற்றது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், தற்போது படையினரிடம் உள்ள மொத்தக் காணிகளின் விவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது. இதில் படையினரின் முகாம் மற்றும் பிறபாவனையில் உள்ள நில விபரங்கள், பயன்பாடுகள் இன்றி பாதுகாப்பின்...

ரயிலில் மோதி இளைஞன் பலி

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதத்தில் சிக்குண்டு, இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இவ்விபத்துச் சம்பவம், கிளிநொச்சி, பரந்தன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்றுள்ளது. வட்டக்கச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த பரந்தன் பகுதியை வசிப்பிடமாகக் கொண்ட 24 வயதுடைய ரிக்ஷன் எனும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞனுடன் மேலும் இருவர் பயணித்தாகவும் அவர்கள் அலைபேசியில் கதைத்துக்கொண்டு சென்றமையினால்...

காதலித்து ஏமாற்றிய பெண் தொடர்பில் தகவல் வழங்குமாறு கோரிக்கை

ஆண்களை காதலித்து பண மோசடியில் ஈடுபட்டமை உள்ளிட்ட பாரிய குற்றச் செயல்களுடன் தொடர்புபட்ட ரேனுகா இரவிச்சந்திரன் என்ற யுவதி தொடர்பில் தகவல் அறிந்தோர் சுன்னாகம் பொலிஸ் நிலைய அலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்குமாறு சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மந்த வேண்டுகோள் விடுத்துள்ளார். 2014ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16ஆம் திகதி சுன்னாகம்,...

யாழில் ரயிலில் மோதி இளம் யுவதி பலி

சுன்னாகம் பகுதியில் ரயிலில் மோதி 18 வயது இளம் யுவதி ஒருவர் நேற்று இரவு 8.00 மணியளவில் உயிரிழந்துள்ளார். சபாபதி வீதிப் பகுதியைச் சேர்ந்த லோரன்ஸ் றெஜின்ரினா என்ற யுவதியே இவ்வாறு மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ரயிலில் மோதி படுகாயமடைந்த அவரை அங்கிருந்த ஊழியர்கள் அம்புலன்ஸ் மூலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் சிகிச்சை...

வடக்கில் சமஷ்டியை கோரக் கூடாது என கூற எந்தக் கொம்பனுக்கும் உரிமை இல்லை!

சாத்வீக போராட்டங்களை சர்வதேச ரீதியில் மேற்கொண்டு காணி சுவீகரிப்பு மற்றும் ஏனைய உரிமைகளை பெற்றுக்கொள்ளுமாறு அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தமிழர் விடுதலை இயக்கதின் தலைவர் சிறி சபாரத்தினத்தின் 30வது நினைவுதின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியதாவது, கடந்த காலத்தினைப் பற்றி பேசிக்கொண்டிருக்காமல் எமது எதிர்காலம் பற்றியும்...

வடக்கு மக்களின் பிரச்சினை குறித்து ஐ.நா.விடம் கோரிக்கை

வட மாகாணத்தில் தமிழர்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு பெற்றுத் தருமாறு கோரி ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகத்தில் கடிதம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அம் மாகாண முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரின் தலைமையிலான தமிழ் மக்கள் பேரவையினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அண்மையில் நாட்டுக்கு விஜயம் செய்த ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளிடம் குறித்த கோரிக்கை கையளிக்கப்பட்டுள்ளதாக, தமிழ் மக்கள்...

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களின் மேதின உரை

விஜயகுமார் அவர்களின் மேதின உரை (வீடியோ)

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் முல்லைத்தீவு மாவட்ட அமைப்பாளர் விஜயகுமார் அவர்களின் மேதின உரை..

செல்வராசா கஜேந்திரன் அவர்களின் மேதின உரை (வீடியோ)

Loading posts...

All posts loaded

No more posts