Ad Widget

படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் ஆலோசனை!

வடக்கு, கிழக்கில் படையினர் வசமுள்ள நிலங்கள் தொடர்பிலும், அதனை விடுவிப்பது தொடர்பானதுமான கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் அபயக்கோன் தலைமையில் இடம்பெற்றது. நேற்றுமுன்தினம் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில், தற்போது படையினரிடம் உள்ள மொத்தக் காணிகளின் விவரங்கள் தொடர்பில் ஆராயப்பட்டது.

இதில் படையினரின் முகாம் மற்றும் பிறபாவனையில் உள்ள நில விபரங்கள், பயன்பாடுகள் இன்றி பாதுகாப்பின் நிமித்தம் கையகப்படுத்தியுள்ள காணிகளின் விவரம் எனத் தனித்தனியாக தொகுக்கப்படுவற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றன. இவ்வாறு தொகுக்கப்படும் விவரங்களில் வெற்றுக் காணிகளாக உள்ளவற்றில் உடனடியாக விடுவிக்கப்படக் கூடியவை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குப் பரிந்துரை செய்யப்படவுள்ளது. இந்தச் சந்திப்பில் மன்னார் மாவட்டத்தின் அரச அதிபர் தவிர்ந்த, வடக்கு, கிழக்கில் உள்ள ஏனைய அரச அதிபர்கள், காணி மற்றும் மீள்குடியேற்றச் செயலாளர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், படை உயர் அதிகாரிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Related Posts