யாழ் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக 100 மில்லியன் ரூபா

யாழ் போதனா வைத்தியசாலையின் அபிவிருத்திக்காக இவ் வருடம் 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று சுகாதார மற்றும் சுதேச வைத்திய துறையின் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித்த மகிபால கூறினார். மேலும் வைத்திசாலைக்கான விசேட மருந்து உபகரண இயந்திரங்களை வழங்க எதிர்பார்த்துள்ளதுடன், அதி விசேட சிகிச்சைக்கான பிரிவுகள் மற்றும் விபத்துக்கான பிரிவுகளும் அமைக்கப்படும் என்று அவர்...

கொக்கிளாய் விகாரை; காணி உரிமை சர்ச்சையால் நிறுத்த முடியாத நிலை

முல்லைத்தீவு - கொக்கிளாய் பிரதேசத்தில் படையினரின் ஒத்துழைப்புடன் அமைக்கப்பட்டு வரும் புதிய விகாரை அமைக்கும் பணிகளை நிறுத்துவதற்கு காணி உரிமைப் பத்திரத்தில் ஏற்பட்டுள்ள குழப்பநிலை தடையாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. தந்தையின் பெயரில் காணி உரிமைக்கான அனுமதிப்பத்திரம் உள்ளதால் தனது காணியையும் உள்ளடக்கி நிர்மாணிக்கப்பட்டு வரும் விகாரையின் நிர்மாணப்பணிகளை சட்டத்தின் மூலமும் நிறுத்த முடியவில்லையென காணியின் தற்போதைய...
Ad Widget

குளிர்பானங்களை பருக வேண்டாம்!! அரச வைத்திய அதிகாரிகள் எச்சரிக்கை!!!

நாட்டில் நிலவுகின்ற கடும் வெப்பமான காலநிலையின் காரணமாக குளிர்பானங்களையும், அதிக சீனி கலக்கப்பட்ட பானங்களையும் பருக வேண்டாம் என்று அரச வைத்திய அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து, அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் நளிந்த ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார்.இவ்வாறான பானங்களை பருகுவதன் ஊடாக, மீண்டும் உடலில் நீரற்ற நிலை ஏற்படும்...

யாழில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்க ஒன்றிணையுமாறு அழைப்பு

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் குற்றச்சசெயல்களையும் சமூக அவல நிலையையும் தடுத்து நிறுத்துவதற்கு புத்திஜீவிகளும் சமூக பெரியார்களும் முன்வரவேண்டும் என யாழ்.மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அழைப்பு விடுத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் யாழ். ஆயர் நேற்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்.குடா நாட்டில் அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் அதிகரித்து செல்வதை காணக்கூடியதாகவுள்ளது....

கோண்டாவில் பகுதியில் புகையிரதம் மோதியதில் இரண்டு இளைஞர்கள் பலி

யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் புகையிரதத்தில் மோதி இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த புகையிரத்தில் மோதி இரண்டு இளைஞர்களும் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் கோண்டாவில் புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இன்று சனிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. இரு இளைஞர்களும் தண்டவாளத்தில் உறங்கிய நிலையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்த...

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு தேடுதல்

தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளுக்கு பயங்கரவாதத் தடுப்புப் பொலிஸ் உயர் மட்டக்குழு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் முக்கிய விசாரணையாளர்கள் 7 பேர் இடம்பெற்றுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தை மீள உருவாக்கும் நோக்குடன் புலம்பெயர் நாடுகளிலிருந்து செயற்படுபவர்களை இலக்கு வைத்து குறித்த குழு தேடுதலில் ஈடுபட்டு வருவதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள்...

சாவகச்சேரி சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளரிடம் விசாரணை!

முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகரவிடம் நேற்று புலனாய்வுப் பிரிவினர் விசாரணை நடத்தியுள்ளனர். சாவகச்சேரி வெடிபொருள் மற்றும் தற்கொலை அங்கி மீட்பு தொடர்பில் கைதான தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் தொடர்பில், ருவான் குணசேகர வெளியிட்ட கருத்து தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அத்துடன், புலனாய்வுப் பிரிவினர் ருவான் குணசேகரவிடம் வாக்கு...

வலி.வடக்கு உயர்பாதுகாப்பு வலய சோதனைச் சாவடி நீக்கப்படவுள்ளது!

காங்கேசன்துறை வீதி – மாவிட்டபுரக் கந்தசாமிக் கோவிலுக்கருகில் உள்ள இராணுவச் சோதனைச்சாவடி அங்கிருந்து முற்றுமுழுதாக அகற்றப்படவுள்ளது. இதனால் மங்கள் எந்தவொரு கெடுபிடிகளும் இன்றி காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு செல்லக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. வலி வடக்கு பாதுகாப்பு வலயலத்தின் இந்தச் சோதனைச்சாவடியானது, காங்கேசன்துறை வீதி மற்றும் பலாலி வீதி ஆகியவற்றின் பிரதான நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அண்மையில்...

தொலைத்தொடர்பு நிறுவனத்தின் பெயரைக் கூறி யாழில் மோசடி!

இலங்கையிலுள்ள தனியார் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றின் பெயரைக் கூறி பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் ஒன்று நேற்று முன்தினம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுள்ளது. இதில் மடத்தடிப் பிரதேசவாசி ஒருவர் 36,000 ரூபா பணத்தை இழந்துள்ளார். இச்சம்பவம் தொடர்பில் குறித்த நபர் தெரிவித்திருப்பதாவது, நேற்று முன்தினம் எனது தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்தது. நாம் குறித்த தொலைபேசி நிலையத்திலிருந்து கதைக்கின்றோம்....

வடமாகாண சபையின் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி எங்கே?

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபி அமைப்பது தொடர்பில், வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான குழுவும் நியமிக்கப்பட்டபோதும் அங்கே இன்னமும் நினைவுத்தூபி அமைக்கப்படவில்லை. இது குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட மக்களின் நினைவாக நினைவுத்தூபி அமைக்கப்படும் என கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தின்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில்...

தமிழ்மக்கள் தீர்வுத்திட்ட வரைபு ஐநாவிடம் கையளிப்பு!

இலங்கைக்கான ஐநா வதிவிடப்பிரதிநிதி உனா மக்கோளி தலைமையிலான குழுவுக்கும் தமிழ் மக்கள் பேரவை உறுப்பினர்களுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று கொழும்பில் நடைபெற்றது. இரண்டு மணிநேரம் நடைபெற்ற இந்தச் சந்திப்பில் இருதரப்பினரும் பரஸ்பரம் வெளிப்படைத் தன்மையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது இலங்கையில் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்திற்கு எவ்வாறு சர்வதேசம் தற்போதைய ஸ்ரீலங்கா அரசாங்கத்தை பலப்படுத்தல் மற்றும் செயல்படுத்தல்களில்...

யார் எதிர்த்தாலும் முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைப்பேன்!

அண்மையில் சிறுவர் இராஜாங்கப் பிரிவு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில், கடந்த அரசாங்கத்தில் நான் உட்பட 90ஆயிரம் பெண்கள் விதவையாக்கப்பட்டோம் எனவும் விதவைகளாக தகுதியற்ற இளம் பெண்கள் அந்த அரசிலே விதவைகளாக்கப்பட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார். மேலும் அவர் தெரிவிக்கையில், கடந்த அரசிலேயே வெள்ளை வான் கடத்தல்,...

யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் அட்டகாசம்!

யாழ்.பல்கலைக்கழக சுற்றாடலில் வாள், கைக்கோடரி மற்றும் இரும்பு கம்பிகளுடன் இலக்க தகடற்ற மோட்டார் சைக்கிளில் வன்முறை கும்பல் ஒன்று நேற்று முன்தினம் வர்த்தக நிலையப் பணியாளர்கள் மற்றும் வீதியால் சென்றவர்களை அச்சுறுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, நேற்று முன்தினம் இரவு 10.45 மணியளவில் பல்சர் வகை உந்துருளியில் சில்வர் கலர் கோடரி மற்றும் வாள்களுடன்...

ரயிலில் பயணித்த மாணவன் வைத்தியசாலையில்

ரயிலில் பயணித்த பல்கலைக்கழக மாணவர் ஒருவர், வெளியில் எட்டிப் பார்த்தபோது, மின்கம்பத்துடன் முகம் அடிபட்டதில் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 26 வயதுடைய தாரக டுலாஜ் எனற மாணவனே படுகாயமடைந்தார். காங்கேசன்துறை தல்சேவன விருந்தினர் விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டுவிட்டு, நண்பர்களுடன் ரயிலில் பயணித்துக்...

சம்பந்தனுக்கும் எனக்கும் பனிப்போர் இல்லை-முதலமைச்சர்

தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், எனக்கும் எவ்வித பனிப்போரும் இல்லை. எனது உடல் ஆரோக்கியமற்றுள்ளது. மருத்துவ உதவியை நாடியிருப்பதால்தான், சம்பந்தனை சந்திக்க முடியாமல் போனது' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிமனை ஆசிரிய மாநாடு வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றது. இந்நிகழ்வு...

நகரைக் குளிர்மைப்படுத்தும் யாழ். மாநகர சபை

யாழ். நகர்ப் பகுதியிலுள்ள வீதிகளை வெப்பத்திலிருந்து தணிக்கும் நடவடிக்கையை யாழ்ப்பாணம் மாநகர சபை மேற்கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் நிலவும் கடும் வெப்பம் காரணமாக பொதுமக்கள் நடமாடுவதற்கு அஞ்சும் நிலைமை காணப்படுகின்றது. அதிக மக்கள் வந்து செல்லும் இடமாக இருக்கும் யாழ்ப்பாண நகர வீதிகளில் மக்கள் பயணிக்க முடியாத நிலையில் வெப்பம் காணப்படுகின்றது. இதனைத் தணிக்கும் வகையில்...

விண்ணப்பம் கோரல்

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடக வேலைத்திட்டத்துக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. ஊடகத்துறையில் ஆர்வமும் விருப்பும் கொண்ட இளம் ஊடகவியலாளர்களை வலுவூட்டும் நோக்கில் தேசிய இளைஞர் சேவை மன்றம் ஊடக வேலைத்திட்டமொன்றை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளது. இதற்காக, நேர்முகப்பரீட்சை மூலமாக தேர்ந்தெடுக்கப்படுகின்ற சிங்கள மற்றும் தமிழ் மொழி மூலங்களில் ஒரு பிரிவில் 50 பேருக்கு விரிவுரைகள் மற்றும் செயன்முறை...

டக்ளஸ் வராததால் ‘நினைவுத்தூபி’ ஒத்திவைப்பு

யுத்தத்தில் உயிரிழந்த மக்களை நினைவு கூருவதற்கான நினைவுத்தூபி ஒன்றை ஓமந்தையில் அமைத்தல் மற்றும் நினைவு கூறுவதற்கான பொதுத் திகதி ஒன்றை அறிவித்தல் தொடர்பான, எம்.பியான டக்ளஸ் தேவானந்தாவின் தனிநபர் பிரேரணை விவாதத்துக்கு எடுக்கப்பட்ட போதும் சபைக்கு எம்.பி வருகைதராமையினால் அப்பிரேரணை ஒத்திவைக்கப்பட்டது. யுத்தத்தின்போது உயிரிழந்த மக்களை நிறைவுகூர்வதற்காக நினைவுத்தூபியொன்றை அமைத்தல் மற்றும் நினைவு கூர்வதற்கான பொதுத்...

கடற்படையினர் உதவியுடன் அந்தோனியார் ஆலயம் புனரமைப்பு

யாழ்பாணத்தில் உத்தர கடற்படை முகாமின் வளாகத்திற்குள் அமைந்துள்ள புனித அந்தோனியார் தேவாலயத்தை புனரமைப்பதற்கு இலங்கை கடற்படையினர் உதவி வழங்கியுள்ளனர். முற்றிலும் புனர்நிர்மாணம் செய்ததுடன் திருப்பலியும் அண்மையில் திருப்பலி பூஜை நடைபெற்றதுடன் இதில் கத்தோலிக்க பக்தர்கள் மற்றும் தென் கடற்படையில் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் கடற்படையினர் ஆகியோர் பங்குகொண்டனர். திருப்பலியை அருட்தந்தை சுனில் குமார் பீரிஸ் ஒப்புக்கொடுத்தார்....

வடக்கு மாணவர்கள் போதைப்பொருள் பயன்படுத்துவது வேதனையளிக்கிறது

யாழ்ப்பாணம் கல்வி வலயத்தின் ஆசிரியர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. யாழ். வேம்படி மகளிர் கல்லூயில் நேற்று காலை 9.30 மணியளவில் இந்நிகழ்வு நடைபெற்றது. மாநாட்டில் பிரதம அதிதியாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டார். எதிர்கால மாணவர்களின் கல்வியும் வளமான சமுதாயமும் என்னும் தொனிப் பொருளிலான இம்மநாட்டில் யாழ் கல்வி வலயத்திற்கு உட்பட்ட சுமார்...
Loading posts...

All posts loaded

No more posts