Ad Widget

யார் எதிர்த்தாலும் முள்ளிவாய்க்காலில் நினைவுத்தூபி அமைப்பேன்!

அண்மையில் சிறுவர் இராஜாங்கப் பிரிவு மற்றும் மகளிர் விவகார அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில்,

கடந்த அரசாங்கத்தில் நான் உட்பட 90ஆயிரம் பெண்கள் விதவையாக்கப்பட்டோம் எனவும் விதவைகளாக தகுதியற்ற இளம் பெண்கள் அந்த அரசிலே விதவைகளாக்கப்பட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

கடந்த அரசிலேயே வெள்ளை வான் கடத்தல், பாலியல் துஷ்பிரயோகம், ஊடகவியலாளர்கள் கொலை என அனைத்து சம்பவங்களும் இடம்பெற்றதாக அவர் தெரிவித்தார்.

இதன்போது, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு குறித்து வினவிய போது, மஹிந்த முன்னாள் ஜனாதிபதி அல்ல பாராளுமன்ற உறுப்பினர் என இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, யாருடைய உதவியையும் எதிர்ப்பார்க்காது, யார் எதிர்த்தாலும் முள்ளிவாய்க்காலில் நினைவாலயம் அமைப்பேன் என அவர் உறுதியளித்தார்.

அத்துடன், தமிழ் மக்கள் அதிகமாக வாழும் வடமாகாணத்தில் உயிர்நீத்த உறவுகளுக்காக இவ்வாறு நினைவாலயம் அமைக்கப்படுவதில் அனைவருக்கும் மகிழ்ச்சி ஏற்படும் என சிறுவர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்தார்.

Related Posts