Ad Widget

யாழில் அதிகரித்து வரும் குற்றச்செயல்களை தடுக்க ஒன்றிணையுமாறு அழைப்பு

யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் குற்றச்சசெயல்களையும் சமூக அவல நிலையையும் தடுத்து நிறுத்துவதற்கு புத்திஜீவிகளும் சமூக பெரியார்களும் முன்வரவேண்டும் என யாழ்.மறைமாவட்ட ஆயர் யஸ்ரின் பேணாட் ஞானப்பிரகாசம் அழைப்பு விடுத்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் யாழ். ஆயர் நேற்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்.குடா நாட்டில் அண்மைக்காலமாக குற்றச்செயல்கள் அதிகரித்து செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.

கொலை, களவு, வாள்வெட்டு, குழுச்சண்டைகள், போதைப்பொருள் பாவனை, கலாச்சரா பிறழ்வு போன்றவற்றால் மக்களில் வாழிவியல் அழிக்கப்பட்டு வருகின்றதா என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் விரைந்து செயற்பட வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் ஆயர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழ் சமூகத்தை வேண்டும் என்றே திட்டமிட்ட முறையில் அழித்தொழித்து அவர்களின் கல்வி, கலாச்சாரம், மேம்பாடு, ஆகிய அனைத்தையும் சீரழித்து, ஒட்டுமொத்த இந்த இனத்தை இல்லாமல் செய்யும் ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளா? இவை என எண்ணத் தோன்றுவதாக அவர் கூறியுள்ளார்.

Related Posts