Ad Widget

சம்பந்தனுக்கும் எனக்கும் பனிப்போர் இல்லை-முதலமைச்சர்

தமிழ்த் தேசியக் கூட்டடமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும், எனக்கும் எவ்வித பனிப்போரும் இல்லை. எனது உடல் ஆரோக்கியமற்றுள்ளது. மருத்துவ உதவியை நாடியிருப்பதால்தான், சம்பந்தனை சந்திக்க முடியாமல் போனது’ என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

யாழ்ப்பாணம் வலயக் கல்விப் பணிமனை ஆசிரிய மாநாடு வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலையில் வெள்ளிக்கிழமை (06) நடைபெற்றது. இந்நிகழ்வு முடிந்து வெளியில் வந்த முதலமைச்சரிடம், ‘வடமாகாண சபையின் தீர்வுத்திட்டம், எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிக்கப்படாமல் நேரடியாக அரசாங்கத்திடம் கையளிக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. அது உண்மையா என கேட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

‘கடந்த சனிக்கிழமை சம்பந்தனிடம் தீர்வுத்திட்டம் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. எனினும், எனது உடல்நலக்குறைவால் அது தடைப்பட்டது. மீண்டும் அவரைச் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் அமைச்சர்களுடன் வியாழக்கிழமை (05) கலந்துரையாடினேன். விரைவில் தீர்வுத்திட்டம் எதிர்க்கட்சித் தலைவரிடம் கையளிக்கப்படும். எங்கே? எப்போ? எவ்வாறு என்பது தொடர்பில் தற்போது கூறமுடியாது. சம்பந்தனுக்கும் எனக்கும் பனிப்போர் இல்லை. எனக்கு அவருக்கும் இடையில் எவ்வித பிரச்சினைகளும் இல்லை’ என்றார்.

Related Posts