- Monday
- August 10th, 2026
சமஷ்டித் தீர்வு திட்டத்திற்கு எதிராக செயற்படுவதற்கா புதிதாக, ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி உருவாக்கப்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் சந்தேகம் வெளியிட்டுள்ளார். தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள வட மாகாண சபையும், தமிழ் மக்கள் பேரவையும் தேசிய இனப்பிரச்சினைக்கு வடக்கு கிழக்கு இணைந்த சமஷ்டி...
இறுதிப்போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்குப் பொறுப்பான இராணுவத் தளபதிகளில் ஒருவரான மேஜர் ஜெனரல் பிரசன்ன டி சில்வா நேற்று (வியாழக்கிழமை) இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றுள்ளார். நேற்றுடன் 55 வயதை எட்டியுள்ள அவர் இராணுவத்திலிருந்து ஓய்வினைப் பெற்று வீடு சென்றுள்ளார். 1984ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த இவர் 33 ஆண்டுகளாக இராணுவத்தில் பல்வேறு பதவிகளை வகித்து வந்தார். இறுதிப்போரின்போது...
சிறிலங்கா வந்துள்ள ஐ.நாவின் சிறப்பு அறிக்கையாளர் ஜுவான் மென்டஸ் நேற்றுமுன்தினம் வவுனியாவில் இயங்கும் இராணுவத்தினரின் ஜோசப் சித்திரவதை முகாமுக்குள் சென்று சோதனை நடாத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வன்னிப் படைகளின் தலைமையகமாக இயங்கும் ஜோசப் முகாமில் கடந்த காலங்களில் பலர் இரகசியமாகத் தடுத்துவைத்து படுகொலைகள் செய்யப்பட்டதாகவும், இன்னமும் சித்திரவதைகள் தொடர்வதாகவும் அடிப்படையில் அது ஒரு சித்திரவதை முகாம்...
தனியார் பேருந்துக் கட்டணங்கள் விரைவில் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரட்ண தெரிவித்துள்ளார். அரசாங்கத்தினால் பெறுமதிசேர் வரி (வற்) அதிகரிக்கப்பட்டுள்ளதாலேயே இந்த நிலமை உருவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். ஒன்றிணைந்த தொழிற் சங்கங்களினால் மருதானை சனசமூக நிலையத்தில் ஒழுங்குசெய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் தேர்த்திருவிழாவின் போது மின்சாரம் தாக்கி ஒருவர், வியாழக்கிழமை (05) உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். தண்ணீர்ப்பந்தலில் ஏற்பட்ட மின் கசிவால் 7 பேர் மின்சார தாக்கத்துக்கு உள்ளாகினர். இதில் எஸ்.சொர்ணகுமார் (வயது 42) என்ற 1 பிள்ளையின் தந்தையே உயிரிழந்துள்ளார். சடலம், பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது....
வல்வெட்டித்துறை, கம்பர்மலை பகுதியிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் மேற்படி பிரதேசத்தைச் சேர்ந்த ஸ்ரீரங்கநாதன் சர்வேஸ்வரன் (வயது 31) என அடையாளம் காணப்பட்டுள்ளது. புதன்கிழமை (04) மாலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர். குறித்த நபர் தற்கொலை செய்து கொண்டாரா?...
படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற 12 பேர் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை விசேட விமானத்தில் இலங்கைக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்களில் பெண் ஒருவரும் இரண்டு சிறுவர்களும் 9 ஆண்களும் அடங்குகின்றனர். பெண் ஒருவரும் அவரது இரண்டு பிள்ளைகளும் கணவரும் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு ஏற்கெனவே சென்று திருப்பி அனுப்பிய நிலையில் அவர்கள் மீண்டும் கடந்த ஏப்ரல்...
அதிக வெப்பம் நிலவுகின்றமையினால் காலை 11.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையிலான காலப்பகுதிக்குள் பாடசாலை மாணவர்களை வகுப்பறையை விட்டு வெளியே செல்வதற்கு அனுமதிக்க வேண்டாமென ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. அதிக வெப்பமானது, பாடசாலை மாணவர்களை எவ்விதத்தில் பாதிக்கின்றது என ஆராயுமாறு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் முன்னர் கேட்டுக்கொண்டிருந்தார். கல்வி அமைச்சு, சுகாதார அமைச்சு,...
முன்னாள் போராளிகளின் திடீர் கைது நடவடிக்கைகளைக் கண்டித்து அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் 'சிங்க லே' அமைப்பினர் புகுந்து குழப்பம் விளைவித்துள்ளனர். பொலிஸார் முன்பாகவே சிங்கலே அமைப்பினர், போராட்டக்காரர்களுக்கு நேரடியாக அச்சுறுத்தல் விடுத்தமை அங்கு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியது. காணாமல்போனவர்களினுடைய குடும்பங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் அம்பாறையில் நேற்றுக் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ்மா...
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்காக முன்னெடுக்கப்படவுள்ள 65 ஆயிரம் பொருத்து வீட்டுத் திட்டம் தொடர்பில் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கும் - தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பிக்களுக்குமிடையிலான சொற்போர் உக்கிரமடையத் தொடங்கியுள்ளது. மாதிரி வீடு அமைக்கப்பட்டது முதலே இந்த முறுகல்நிலை இருந்து வருகின்றது. குறித்த வீடமைப்புத் திட்டத்துக்கு முட்டுக்கட்டைகள் இடம்பெறுகின்றன. இருந்தாலும் திட்டம் முன்னெடுக்கப்படும் என்று அமைச்சர்...
தமிழர் விடுதலை இயக்கத்தின் (telo) முன்னாள் தலைவர் ஸ்ரீ சபாரத்தினத்தின் 30 வது ஆண்டு நினைவஞ்சலி எதிர்வரும் 8ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தமிழர் விடுதலை இயக்கத்தின் உப தலைவர் ஹென்றி மகேந்திரன் அறிவித்துள்ளார். யாழ். நகரப் பகுதியில் உள்ள யு.எஸ் விருந்தினர் விடுதியில் நேற்று வியாழக்கிழமை நண்பகல் பத்திரிகையாளர்களை சந்தித்தே இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்....
களனி பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட மாணவர்கள் ஐவர் கிரிபத்கொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களால் தான் பலமுறை பகிடிவதைக்கு உள்ளாக்கப்பட்டதாக, மாணவி ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இராணுவ மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு, இன்று காலை காலமானார். தலையில் கடும் காயங்களுக்குள்ளான நிலையில் இராணுவ மேஜர் ஜெனரல் சுமித் மாணவடு, நேற்று முன்தினம் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். கட்டடம் ஒன்றின் நிர்மாண பணியின் போதே இவருடைய தலையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது. 2010ம்...
1983ம் ஆண்டு முதல் 2013ம் ஆண்டு வரையிலான காலப்பகுதியில் இலங்கையில் ஏற்பட்ட கலவரங்கள், யுத்தம் மற்றும் யுத்தப் பாதிப்புகள் காரணமாக காலங்காலமாக இலங்கையிலிருந்து சுமார் 3,04,269 பேர் அகதிகளாக இந்திய, தமிழ்நாட்டுக்குச் சென்றதாகவும், இதில் சுமார் 2,04,269 பேர் இதுவரையில் பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை திரும்பியுள்ளதாகவும், தமிழ்நாட்டில் இன்னும் முகாம்களில் - முகாம் பதிவில் சுமார்...
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு வெளியிடப்பட்டு அது உத்தியோகபூர்வமாக நோர்வே அரசிடம் கையளிக்கப்பட்டது. பேரவையின் செயற்பாட்டுக்குழு இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினரான சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் மாலை 02.00 மணியளவில் இலங்கைக்கான நோர்வே தூதுவர் ஷொபியொன் கோஸ்டாட்செசர் (Thorbjørn Gaustadsæther) இடம் நேரடியாகக் கையளித்தனர். இதனைத்தொடர்ந்து பேரவை உறுப்பினர்களுக்கும்...
யாழ்ப்பாணம் – திருநெல்வேலி பொதுச் சந்தையில் வியாபாரிகளுக்கான நீர் விநியோகம் சீராக இடம்பெறாமை, மின்சார வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படாமை , சந்தையிலுள்ள மலசலகூடங்கள் சுத்தமற்றுக் காணப்படுகின்றமை உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு உடனடியாகத் தீர்வு பெற்றுத் தருமாறு வலியுறுத்தி வியாபாரிகள் தமது இட வாடகையை வழங்க எதிர்ப்புத் தெரிவித்து நேற்றுச் செவ்வாய்க்கிழமை (04-05-2016) காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்....
தாயக மண்ணில் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட எமது உறவுகளை கூட்டாக நினைவு கூருவதற்காக முள்ளிவாய்க்காலிலும், வாகரையிலும் இடம்பெறும் நினைவேந்தல் நிகழ்வுகளிலும் அனைத்து மக்களையும் பங்குகொள்ளுமாறும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் அழைப்பு விடுத்துள்ளனர். அந்த அழைப்புச் செய்தியில்.. தமிழ் மக்கள் மீது ஸ்ரீலங்கா அரசு மேற்கொண்ட இனவழிப்பின் 07ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் தமிழ்த் தேசிய மக்கள்...
நல்லூர் சட்டநாதர் வீதியில் இனந்தெரியாத இருவர், இரண்டு இளைஞர்களை வாளால் வெட்டிய கொடூர சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு நடைபெற்றுள்ளது. குறித்த பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் நுழைவதற்காக இந்த இனந்தெரியாத நபர்கள் இரவு 9.20 மணியளவில் வீட்டின் முன் கதவினை கோடரியால் வெட்டியுள்ளனர். எனினும் வீட்டின் உள்ளே நுழைய முடியாத இனந்தெரியாத நபர்கள், வீட்டை உடைக்கும்...
10 ஆண்டுகளுக்கு பிறகு சூரியனை புதன் கோள் கடக்கும் அரிய நிகழ்வு எதிர்வரும் 9ம் திகதி நடக்கிறது. இதனை வெற்றும் கண்களால் பார்க்கக் கூடாது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்வை அன்றைய தினம் மாலை 4.15 முதல் மாலை 6.20 வரை வானில் பார்க்கலாம். புதன் கோளின் விட்டம் சூரியனை விடவும் சிறியதாக இருப்பதால் இந்த...
வடமாகாணத்தில் உற்பத்தி செய்யப்படும் பசுப்பாலில் 40 விழுக்காடு பால் வடக்கைவிட்டு தனியார் நிறுவனங்களால் வெளியே எடுத்துச்செல்லப்படுவதாக கால்நடை அபிவிருத்தித்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி கால்நடை உற்பத்தி சுகாதாரத் திணைக்கள அலுவலகத்தில் நேற்று புதன்கிழமை (04.05.2016) கால்நடை வளர்ப்பாளர்களுக்கு உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இது...
Loading posts...
All posts loaded
No more posts
