- Monday
- August 10th, 2026
தமிழீழ வைப்பகத்தின் தங்க நகைகளை மீட்கும் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத்தின் அனுமதியுடன் காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து தங்க நகைகளை மீட்கும் பணியை ஆரம்பித்துள்ளனர். கேப்பாப்புலவு லூர்த்துமாதா வீதியில் உள்ள தமிழீழ வைப்பகத்தின் தலைமைச்செயலகம் அமைந்துள்ளது. 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற யுத்தத்தின்போது இந்தத் தலைமைச் செயலகத்துக்கு முன்னால் உள்ள காணியின் கிணற்றுக்குள் தங்க நகைகளைப் போட்டு...
கைதுசெய்யப்படும் முன்னாள் போராளிகள் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்களா என்பது தொடர்பில் மீள் பரிசீலனை செய்யப்படும் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜெயவீர தெரிவித்துள்ளார். அரசாங்கத் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்ட போராளிகள் மீண்டும் கைதுசெய்யப்படுவதற்கான காரணம் என்ன என...
வடமாகாண சபை மற்றும் தமிழ் மக்கள் பேரவையால் முன்வைக்கப்பட்ட அரசியல் தீர்வு யோசனைகளுக்கு, இனவாதசாயம் பூசாது, அவற்றை அரசாங்கம் சாதகமாகப் பரிசீலிக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்தார். அரசியல் ரீதியாக ஒரு தீர்வைக் காணமுடியாத நிலையே, நாட்டில் தற்பொழுது காணப்படுகிறது. நிலைத்திருக்கக் கூடிய...
பணிஸ் மற்றும் மாலுப்பாணின் விலைகள், ஐந்து ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, அகில இலங்கை பேக்கரி உரிமையாளர் சங்கத்தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்தார். வற் வரி அதிகரிப்பினால் பாண் தவிர்ந்த ஏனைய, தின்பண்டங்களின் விலைகளை அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வற் வரி அதிகரிப்பாலும் டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளமையாலும், பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்குப் பயன்படுத்தப்படும் மாஜரின் மற்றும்...
இந்திய விளையாட்டு வீரர் ஒருவர் தங்கிருந்த ஹோட்டல் அறைக்கு ஒரு பெண் சென்றுள்ளார். அவர் அங்கு, விடியும்வரை தங்கிருந்தார்' என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை (04), வாய்மூல விடைக்கான வினாக்கள் நேரத்தின் போது எஸ்.எம்.மரிக்கார் எம்.பி கேட்டிருந்த கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 2010ஆம் ஆண்டு...
யாழ்ப்பாணத்தை மட்டுமன்றி முழு நாட்டையும் பரபரப்படையச் செய்திருந்த புங்குடுதீவு வித்தியா பாலியல் வல்லுறவு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் தடுத்துவைக்கப்பட்டுள்ள 9 சந்தேக நபர்களையும் யாழ்.மேல்நீதிமன்றத்தில் எதிர்வரும் 11 ஆம் திகதி முன்னிலைப்படுத்துமாறு நீதிபதி இளஞ்செழியன் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் மேல் நீதிமன்றத்தில் விசேட மனு ஒன்றை நீதிபதி...
"புனர்வாழ்களிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் தொடர்ச்சியாகக் கைதுசெய்யப்படுவதால் மக்கள் மத்தியில் அச்சநிலை உருவாகியுள்ளது. எனவே, கைதுக்கான காரணத்தை அரசு உடனடியாகத் தெளிவுப்படுத்த வேண்டும்." இவ்வாறு பிரதான எதிர்க்கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் நேற்று வலியுறுத்தியது. நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற நுண்நிதியளிப்புச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்புமீதான விவாதத்தில் உரையாற்றுகையிலேயே கூட்டமைப்பின் வன்னி மாவட்ட எம்.பியும் குழுக்களின்...
போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மக்களுக்கான 65 ஆயிரம் வீடமைப்புத் திட்டத்தை முன்னெடுப்பதற்கு பல முட்டுக்கட்டைகள் காணப்படுகின்றபோதிலும் அதை திட்டமிட்ட அடிப்படையில் முன்னெடுப்போம் என்று சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை 65 ஆயிரம் வீட்டுத் திட்டத்தின் நிலைவரம் தொடர்பில் டக்ளஸ் தேவாந்தன்...
ஐக்கிய அமெரிக்க வைத்தியசாலைகளில் இலங்கை தாதியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இலங்கை வௌிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. வௌிநாட்டு ஊழியர்களை இணைத்துக் கொள்ளும் அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுடன் இது குறித்த ஒப்பந்தம் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த ஒப்பந்தம் ஐந்து வருடங்களுக்கு செல்லுபடியாகும் எனவும், இதன்மூலம் 30,000க்கும் மேற்பட்ட இலங்கையர்களுக்கு வேலை வாய்ப்பு...
எரிந்துகொண்டிருந்த அடுப்புக்கு மண்ணெண்ணெய் ஊற்றியபோது, தீக்காயங்களுக்குள்ளாகிய பெண்ணொருவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (03) அனுமதிக்கப்பட்டுள்ளார் என, யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம், அபூபக்கர் வீதியைச் சேர்ந்த பிரபாகரன் தயாபதி (வயது 40) என்பவரே தீக்காயங்களுக்குள்ளானார். எரிந்து கொண்டிருந்த அடுப்புக்கு மேலதிகமாக மண்ணெண்ணெய்யை ஊற்றியதில் உடலில் தீ பற்றியதால் தீக்காயங்களுக்குள்ளாகிய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
ஜனநாயக தமிழ்த் தேசிய முன்னணி, இன்று புதன்கிழமை அங்குரார்பணம் செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்வில் பிரபா கணேஷன், ஆனந்த சங்கரி, டக்ளஸ் தேவானந்தா உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.
வெடிக்க வைக்கக் கூடிய நிலையில் இருந்த 7 டைனமேட் வெடிகள் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் இன்று புதன்கிழமை தெரிவித்தனர். யாழ். குருநகர் இறங்குதுறைமுகப் பகுதியில் இன்று புதன்கிழமை காலை கடற்படையினரால் இவை மீட்கப்பட்டு, ஒப்படைக்கப்பட்டதாக கூறினார்கள். இறங்குதுறை பகுதியில் மீன்பிடி படகு ஒன்றின் கீழ், பொலித்தீனால் சுற்றிக் கட்டப்பட்ட நிலையில் குறித்த 7 டைனமேட் வெடிகளும்...
உலகில் இன்று ஏற்பட்டுள்ள வளர்ச்சியின் அடிப்படையில் பல மாற்றும் மிக விரைவான ஏற்பட்டு வருகின்றது. இவற்றுள்ள அதிகமானோர் இன்று ஏற்பட்டுள்ள வளர்ச்சியை மிகவும் பிழையான முறையில் சட்டவிரோத செயல்களுக்கு பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக ஒன்லைன் மூலம் அதிகமான மோசடிகள் இடம்பெற்று வருவதை நாம் கேள்விப்படுகிறோம். அந்த வகையில் இப்போதெல்லாம் கையடக்கத் தொலைபேசியூடாக அழைப்பு மற்றும் குறுந்தகவல்...
மாலபே மருத்துவக் கல்லூரியினை முற்று முழுதாக அரச மயப்படுத்த வேண்டுமென வடபிராந்திய அரச வைத்தியர் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. யாழ். ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே மேற்படி வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மாலபே தனியார் மருத்துவ கல்லூரி முகாமைத்துவ கல்லூரி என்ற பெயரில் தான் ஆரம்பிக்கப்பட்டது. மருத்துவ கல்லூரிக்கான அனுமதியினை இலங்கை...
தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத்திட்ட இறுதி வரைபு நேற்று செவ்வாய்கிழமை நோர்வே அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது. பேரவையின் செயற்பாட்டுக்குழு இணைப்பாளர் அலன் சத்தியதாஸ் மற்றும் அரசியல் உபகுழு உறுப்பினரான சட்டத்தரணி காண்டீபன் ஆகியோர் ஸ்ரீலங்காவிற்கான நோர்வே தூதுவர் ஷொபியொன் கோஸ்டாட்செசரிடம் இதனை கையளித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து பேரவை உறுப்பினர்களுக்கும் நோர்வே தூதுவர் அடங்கிய குழுவிற்குமிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது....
இராணுவத்தினரிடமிருந்து வடக்கு மக்கள் என்ன தேவைகளை பெற வேண்டுமோ அவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பூநகரி விக்கினேஸ்வரா மகாவித்தியாலயத்தின் கட்டிடம் ஒன்றை திறந்து வைத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடமாகாணத்திலிருந்து இராணுவத்தினரை வெளியேற்ற வேண்டும் மற்றும் கல்விச்செயற்பாட்டில் இராணுவம் தலையிடக் கூடாது...
சாவகச்சேரி மறவன்புலவுப் பகுதியில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்கள் தொடர்பிலான சந்தேக நபர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் சென்றிருக்கலாம் எனவும், அவர்கள் இந்தியாவுக்குத் தப்பிச் செல்வதற்கு சிவகரன் உதவி செய்திருக்கலாம் என்ற காரணத்தினாலேயே சிவகரன் கைது செய்யப்பட்டார் எனவும் சிறீலங்காவின் காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. இந்தச் செய்தி வெளியானதும் ஊடகப்பிரிவை நடைமுறைக்குக் கொண்டுவருவதற்காக புதிய...
கிளிநொச்சி உதயநகரில் 30வீட்டுத்திட்டத்தில் வசித்துவந்த 31 வயது இளைஞன் ஒருவர் நேற்று தற்கொலை செய்துள்ளார். சிவலிங்கம் சிவச்செல்வன் என்பவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார். இவருக்கு கடந்த யுத்தத்தின்போது மனநோய் ஏற்பட்டதாகவும், பின்னர் மனநோய்க்கான சிகிச்சை எடுத்துவந்ததாகவும் தெரியவருகின்றது. இந்நிலையிலேயே இவர் தனக்குத்தானே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என மரணவிசாரணையின்போது தெரியவந்துள்ளது என இவரது மரணவிசாரணையை விசாரணைசெய்த...
சுன்னாகம் நிலத்தடி நீரில் கழிவு ஒயில் கலக்கப்பட்டுள்ளது எனத் தொடரப்பட்ட வழக்கிற்கு எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் விசாரணை அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்கவேண்டுமென வடமாகாண பிரதம செயலாளருக்கு மல்லாக நீதிமன்ற நீதவன் ஏ.யூட்சன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அத்துடன் குறித்த வழக்கு விசாரணைக்கு வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் முன்னிலையாகவேண்டிய அவசியமில்லை எனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்....
நாடளாவிய ரீதியில் தற்போது நிலவி வரும் கடுமையான வெப்பம் காரணமாக, வடமாகாணத்திலுள்ள பாடசாலைகளை பகல் 12.30 மணியுடன் மூடுவது தொடர்பில் பல்வேறு தரப்பினரால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. வட மாகாணத்தில் நிலவும் கடுமையான வெப்பம் காரணமாக பாடசாலை கட்டடங்களுக்குள் இருந்து மாணவர்களால் கல்வி பயில முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக வன்னிப் பகுதியிலுள்ள பாடசாலைகள், இந்த வெப்பத்தால்...
Loading posts...
All posts loaded
No more posts
