நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் மூன்றாவது பிரிவில் திடீர் கோளாறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இரவு முதல் இவ்வாறு தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளதாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் கூறினார்.
மூன்றாவது பிரிவின் வெப்பத்தை சேமிக்கும் குழாயில் ஏற்பட்ட திடீர் கசிசே இதற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.
எவ்வாறாயினும் இதனால் மின் விநியோகத்தில் தடை ஏற்படமாட்டாது என்று அவர் மேலும் கூறினார்.
இதேவேளை நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முதலாவது பிரிவின் மின் உற்பத்தி இயந்திரம் திருத்தப் பணிகள் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஏற்பட்ட கோளாறு காரணமாக அதனை மீண்டும் இயங்க வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்த மின் கசிவை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை தற்போது ஆரம்பித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.