- Tuesday
- March 3rd, 2026
புதுவருட தினத்தையொட்டில், ஏப்ரல் 13 மற்றும் 14ஆம் திகதிகளில், நாடளாவிய ரீதியில் உள்ள மதுபானசாலைகள் அனைத்தும் மூடப்படும் என்று மதுவரித்திணைக்களம் அறிவித்துள்ளது.
கிராம சேவையாளர்களை அவர்களது கடமையை மேற்கொள்ளவிடாது இடையூறு விளைவித்த இராணுவத்தினரைக் கண்டித்து முல்லைத்தீவு மாவட்ட கிராம சேவையாளர்களால் நேற்று திங்கட்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதன்போது இனிமேல் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்துமாறும் கிராம சேவையாளர்களால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொக்குத்தொடுவாய் வடக்கில், தென்னிலங்கை மீனவர்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியாமல் வாடிகள் அமைத்து தொழில் நடவடிக்கையில்...
வடமாகாண சபை அமைச்சர்கள் நால்வரையும் நீக்கி புதியவர்களை நியமிக்குமாறு கோரி பெற்றுக்கொள்ளப்பட்ட கையெழுத்து அடங்கிய விண்ணப்பம் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வடமாகாண பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தலைமையில் அறுவர் அடங்கிய குழு இன்று மாலை 5.30க்கு முதலமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தது. இதன்போதே குறித்த விண்ணப்பம் கையளிக்கப்பட்டுள்ளதாக அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். இந்தக்...
சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடி பொருட்கள் மீட்க்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி திருவையாறு பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். 23 வயதுடைய விஜயகுமார் கேதீஸ்வன் என்ற நபரே பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட சம்பவத்துடன் ஏற்கனவே கைது செய்யப்பட்ட...
முல்லைத்தீவு கொக்கிளாய் பகுதியில் நேற்று மாலை சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடும் நோக்குடன் வாடிகளை அமைக்க வந்த முப்பதுக்கும் மேற்பட்ட சிங்கள மீனவர்களுக்கும் கொக்கிளாய் கிராம வாசிகளுக்கும் இடையில் முறுகல் நிலை ஒன்று ஏற்றப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவம் குறித்து தெரிய வருவதாவது, நேற்று மாலை 5 மணியளவில் இராணுவத்தின் அனுசரணையுடன் தென்னிலங்கையை சேர்ந்த...
மத்திய அரசாங்கத்தின் மீள்குடியேற்ற மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வட மாகாணசபை முட்டுக்கட்டையாக செயற்படுகிறது என்று சிறைச்சாலை மறு சீரமைப்பு புனர்வாழ்வு, மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் குற்றம்சாட்டியுள்ளார். வடக்கு கிழக்கில் யுத்தத்தால் வீடுகளை இழந்த மக்களுக்கு 65,000 வீடுகளை அமைப்பதற்கு மீள் குடியேற்ற அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த வீடமைப்புத் திட்டத்திற்கு...
நாரஹேன்பிட்டியில் கூரியர் நிறுவன தலைமையகம் ஒன்றில் மீட்கப்பட்ட புலிகளின் உயர் மட்டத் தலைவர்கள் பயன்படுத்தும் தொப்பி தொடர்பிலான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. லண்டனுக்கு அனுப்பப்பட இருந்த குறித்த தொப்பி விடுதலைப் புலிகளின் புலனாய்வுப் பிரிவுக்கு பொறுப்பாக இருந்த பொட்டு அம்மானினால் பயன்படுத்தப்பட்டதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இது தொடர்பில் சில தகவல்கள் விசாரணையாளர்களுக்கு கிடைத்துள்ள நிலையில் அதனை உறுதி...
நாடு முழுவதும் 1800 குடும்ப நல சுகாதார அதிகாரிகளுக்கான வெற்றிடங்கள் நிலவுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த வெற்றிடங்களை நிரப்பும் வகையில் முதல் கட்டமாக 750 பேரை சேவையில் இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கண்காணிப்பு மற்றும் பயிற்சிப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் சுனில் டி அல்விஸ் தெரிவித்துள்ளார். இதுவரை விஞ்ஞான...
இறுதிக்கட்டப் போரின் போது இலங்கை இராணுவத்தால் தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட பாரிய அழிவுகள் தொடர்பில் சுமார் ஒரு வருடத்திற்கு முன்னரே ஐக்கிய நாடுகள் சபை அறிந்து வைத்திருந்தமை குறித்த தகவல் அம்பலமாகியுள்ளது. இறுதிக்கட்ட போரின் இறுதி நாட்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டது தொடர்பில் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஐக்கிய...
புங்குடுதீவு மாணவியின் கொலை வழக்குத் தொடர்பில் 13ஆவது சந்தேகநபரை கைது செய்யவுள்ளதாக குற்றப்புலனாய்வு பொலிஸார் நீதிமன்றத்தில், இன்று திங்கட்கிழமை (11) தெரிவித்தனர். குறித்த வழக்கு, நீதவான் ஏ.எம்.எம்.றியால் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, முன்னதாக கைது செய்யப்பட்ட 10 சந்தேகநபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். இதன்போது, 'கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள 12 சந்தேகநபர்களுக்கு மேலதிகமாக 13ஆவது...
ஆனைக்கோட்டை, கூழாவடியில் இராணுவ முகாம் அமைந்துள்ள பொதுமக்களின் காணியை இராணுவ முகாமின் நிரந்தர தேவைக்காக சுவீகரிப்பதற்காக இன்று திங்கட்கிழமை (11) மேற்கொள்ளப்படவிருந்த நிலஅளவை பணியை தடுத்து நிறுத்த ஆர்ப்பாட்டம் செய்த மக்களை, இராணுவ சிப்பாய் ஒருவர் அச்சுறுத்தும் வகையில் வீடியோ எடுத்தார். அலைபேசி ஒன்றில் உரையாடிக்கொண்டு, பிறிதொரு அலைபேசியை மதிலில் வைத்து, ஆர்ப்பாட்டம் செய்த அனைவரையும்...
புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்குத் தொடர்பில், சந்தேகநபர்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகள் மற்றும் அசௌகரியங்கள் தொடர்பில், நீதிமன்றத்தில் மட்டுமே கருத்துத் தெரிவிக்க முடியும், அதனைவிடுத்து, வெளியே கருத்து தெரிவிக்க முடியாது, அவ்வாறு கருத்து தெரிவித்தால் அது தொடர்பில் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியால் சந்தேகநபர்களுக்கு கடும் எச்சரிக்கை...
யாழில் சுவீகரிக்கப்படவிருந்த காணிகளை சுவீகரிக்காது தடுத்து நிறுத்துமாறு வட மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் யாழ். அரசாங்க அதிபர் அலுவலகத்தினை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். யாழ். ஆணைக்கோட்டை, கூழாவடி இராணுவ முகாம் பகுதியிலுள்ள ஐந்து தனிநபர்களுக்கு சொந்தமான 16 ஏக்கர் பரப்பளவு காணிகளை இன்று திங்கட்கிழமை நில அளவையாளர்கள் அளப்பதற்கு முற்பட்டனர். இந்தநிலையில்,...
தமிழ் சிங்கள புதுவருட தினத்தினை முன்னிட்டு ஏப்ரல் 15 ம்திகதி வெள்ளிக்கிழமையும் தேசிய பொது விடுமுறை என உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. ஏற்கனவே 13ம் 14ம் திகதியும் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது
முச்சக்கர வண்டியொன்றில் கூடிய சத்தத்துடன் பாடலை ஒலிக்கச் செய்துகொண்டு சென்ற சாரதிக்கு மூவாயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்ட சம்பவம் பதுளையில் பதிவாகியுள்ளது. பதுளை, தெய்யனாவலையைச் சேர்ந்த ஏ.ஐ.ஆர் ஆனந்த என்பவருக்கே இவ்வாறு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. குறித்த நபருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு நேற்று முன்தினம் பதுளை நீதவான் நீதிமன்றத்தில் பதில் நீதிபதி எஸ். சத்தியமூர்த்தி முன்னிலையில்...
வடமகாணத்தில் தொடரும் அதிக வெப்பநிலை காரணமாக பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். இன்று காலை 9.00 மணியில் இருந்து 11.00 மணிவரைக்கு கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைகளில் 100க்கு மேற்பட்ட சிறுவர்கள் வெளிநோயாளர் பிரவில் சிகிச்சை பெற்றுள்ளனர். மேலும் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள், வெளிநோயாளர்கள் என பலர் வெளிநோயாளர் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். தொடர்ந்து...
பொலிஸ் கான்ஸ்டபிள் சேவைக்கு பத்தாயிரம் வெற்றிடங்கள் நிலவுவதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக பொலிஸ் சேவையை சிறந்த முறையில் முன்னெடுப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் செயலளார் ஆரியதாச குரே மேலும் குறிப்பிட்டுள்ளார். இதற்கமைய சிவில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் 2500 பேரை சேவையில் அமர்த்துவதற்கு துரித நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்....
கலாசார நிகழ்வு ஒன்றுக்காக தொன்மை மிக்க பூநகரி கோட்டையின் சில பகுதிகளை இராணுவத்தினர் நேற்று உடைத்துள்ளனர். நேற்று மாலை 5.30 மணியளவில் கோட்டையின் சில பகுதிகளை உடைத்து தங்களது நிகழ்வு ஏற்பாட்டு ஒழுங்குகளை மேற்கொண்டுள்ளமையை அவதானிக்க முடிந்தது. நூற்றாண்டு பழமை வாய்ந்த பூநகரி-வாடியடிச் சந்திப் பகுதியில் அமைந்துள்ள குறித்த கோட்டையின் சில பகுதிகளே இராணுவத்தினரால் உடைக்கப்பட்டுள்ளது....
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச கொள்வனவு செய்த பெறுமதிமிக்க மலர்வலயங்கள் தொடர்பிலான நிதி முறைகேடு குறித்த விசாரணைகளை சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகள் தடுத்ததாக குற்றம்சுமத்தப்பட்டுள்ளது. மகிந்த ராஜபக்ச, பொதுமக்களின் வரிப்பணங்களின் மூலம் பெறுமதி மிக்க மலர்வலயங்களை கொள்வனவு செய்துள்ளார். இதன்போது அவர் மலர்வலயங்களின் பெறுமதியை காட்டிலும் அதிக விற்பனை விலைகளிலேயே அதற்கான ரசீதுகளை பெற்றுள்ளார்....
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி உள்நுழையும் இந்திய மீனவர்கள் தொடர்பிலும் சம்பூர் அனல் மின் நிலையம் தொடர்பிலும் கூட்டமைப்பு மௌனம் காக்க காரணம் இந்தியாவில் உள்ள தமது குடும்பத்திற்கு பாதிப்பு ஏற்படக் கூடாது என்ற காரணத்தால் தான் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். ஊடக அமையத்தில்...
Loading posts...
All posts loaded
No more posts
