Ad Widget

வித்தியா வழக்கு – சந்தேகநபர்களுக்கு எச்சரிக்கை

புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்குத் தொடர்பில், சந்தேகநபர்கள் தங்களுக்குள்ள பிரச்சினைகள் மற்றும் அசௌகரியங்கள் தொடர்பில், நீதிமன்றத்தில் மட்டுமே கருத்துத் தெரிவிக்க முடியும், அதனைவிடுத்து, வெளியே கருத்து தெரிவிக்க முடியாது, அவ்வாறு கருத்து தெரிவித்தால் அது தொடர்பில் நீதிமன்றம் கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும் என, ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.எம்.றியால் சந்தேகநபர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்தார்.

புங்குடுதீவு மாணவியின் படுகொலை வழக்கில் 10 சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு, இன்று நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

சந்தேகநபர்களும் அவர்கள் சார்ந்தவர்களும் தங்களுக்கான பிரச்சினைகளையும் அசௌகரியங்களையும் நீதிமன்றத்தில் தெரிவிக்க முடியும். அதனைவிடுத்து, நீதிமன்றத்துக்கு வெளியே கருத்து தெரிவிப்பதை தவிர்க்க வேண்டும் என குறிப்பிட்ட அவர், இந்த வழக்கு தொடர்பான விசாரணையை எதிர்வரும் 25ம் திகதி வரை ஒத்திவைத்தார்.

2015ம் ஆண்டு மே மாதம் 13ம் திகதி வன்புணர்வுக்குட்படுத்தி, படுகொலை செய்யப்பட்ட புங்குடுத்தீவு மாணவியின் கொலை வழக்குத் தொடர்பில் இதுவரையில் 12 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதில், 10 சந்தேகநபர்களின் வழக்கு தனியாகவும் இரு சந்தேகநபர்களின் வழக்கு தனியாகவும் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts