யாழ்ப்பாணம் கோவில் வீதியில் அமைந்துள்ள நல்லூர் கந்தசுவாமி ஆலய வடக்கு வாசல் வளைவானது நாளைய தினம் வியாழக்கிழமை காண்பிய விரிப்பு காணவிருப்பதன் காரணமாகவும், அதற்குரிய பணிகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையிலும் இன்றைய தினம் புதன்கிழமை காலை 8 மணி முதல் நாளை வியாழக்கிழமை நண்பகல் 12 மணி வரை குறித்த பகுதியின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்படுமென யாழ் மாநகர சபையின் முதல்வர் மதிவதனி விவேகானந்தராஜா அறிவித்துள்ளார்.

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் பெருமையை மேலும் மெருகூட்டும் வகையில், ஆலயத்தின் வடக்கு திசையில் கோவில் வீதியில் அமைக்கப்பட்டுள்ள அலங்காரத் தோரண வாசலான ‘நல்லூரான் வடக்கு வாசல் வளைவு’, நாளைய தினம் வியாழக்கிழமை தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு காண்பிய விரிப்புக் காணவுள்ளது.
இதனை முன்னிட்டு, அன்று காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிருந்து சமய அனுஷ்டானங்களுடன், நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க வளைவை நோக்கிப் புறப்படும்.
அதனைத் தொடர்ந்து, தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு, நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாகச் செல்லும். அந்த மங்கள நிகழ்வின் மூலம் ‘நல்லூரான் வடக்கு வாசல் வளைவு’ காண்பிய விரிப்புக் காணும்.
இந்நிலையில் அதற்குரிய பணிகளை முன்னெடுப்பதற்கு ஏற்ற வகையில் இன்றைய தினம் காலை 8 மணி முதல் நாளை நண்பகல் 12 மணி வரை குறித்த பகுதியின் ஊடான போக்குவரத்து தடை செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
??????? ‘?????? ????? ?????’ ???????: ????? ???? ???????????? ???????????? ???? ???????????????!