கார்த்திகை நன்னாளில் காண்பிய விரிப்பு காணவிருக்கும் நல்லூரன் வடக்கு வாசல் வளைவின் ஊடாக செல்லும் இரட்டை திருக்கை வண்டி ஏற்றிய நெல்பெட்டகத்தில் அடியார்களும் நெல் இடலாம்.
நாளை மறுதினம் வியாழக்கிழமை (06.08.2026) ஆடிக் கார்த்திகை நன்னாளில் காண்பிய விரிப்பு காணவிருக்கின்றது. குறித்த காண்பிய விரிப்பு முன்னர் அன்று காலை 10.30 மணிக்கு சட்டநாதர் சிவன் கோவிலிருந்து சமய அனுஷ்டானங்களுடன் நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்தை ஏற்றிய இரட்டை திருக்கை காளை மாட்டு வண்டில் மங்கள வாத்தியங்கள் முழங்க சட்டாநாதர் வீதிவழியாக முடமாவடிச் சந்தியினை அடைந்து வளைவை நோக்கிப் புறப்படும்.
வளைவை நோக்கி வரும் அந்த மாட்டு வண்டியில் உள்ள நெல் பெட்டகத்தில், அடியவர்கள் தமது நெல் மணிகளை பக்தியுடன் சமர்ப்பிக்கலாம்.
அதனைத் தொடர்ந்து தெய்வேந்திர முகூர்த்தமாகிய நண்பகல் 12.00 மணிக்கு எம்பெருமானுக்காக அழைத்து வரப்பட்ட நெல் மணிகள் நிரம்பிய பெட்டகத்துடன் வரும் காளை மாட்டு வண்டில் முதன்முறையாக புதிய வளைவின் ஊடாகச் செல்லும்.
அந்த மங்கள நிகழ்வின் மூலம் ‘நல்லூரான் வடக்கு வாசல் வளைவு’ காண்பிய விரிப்புக் காணும்.
அதனைத் நெல் பெட்டகம் நல்லூரானின் திருவடிகளில் சமர்ப்பிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும்.
