தாயையும் குழந்தையையும் காணவில்லை

ஈச்சமோட்டை, சுண்டுக்குளி பகுதியைச் சேர்ந்த தாயும் அவரது பெண் குழந்தையையும் காணவில்லையென அவர்களது உறவினர்களால் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (11) முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மோகன்ராஜ் ஜனாகி (வயது 23) மற்றும் மோகன்ராஜ் சுருதிகா (வயது 3 ½ ) ஆகிய இருவருமே காணாமல்போயுள்ளனர்.

கடந்த 10ஆம் திகதி வீட்டை விட்டு வெளியே சென்றவர்கள் இதுவரையில் வீடு திரும்பவில்லையென முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts