Ad Widget

வடமாகாண சபையின் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி எங்கே?

இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட மக்களுக்காக முள்ளிவாய்க்காலில் நினைவுத் தூபி அமைப்பது தொடர்பில், வடமாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதற்கான குழுவும் நியமிக்கப்பட்டபோதும் அங்கே இன்னமும் நினைவுத்தூபி அமைக்கப்படவில்லை. இது குறித்து மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

முள்ளிவாய்க்காலில் படுகொலைசெய்யப்பட்ட மக்களின் நினைவாக நினைவுத்தூபி அமைக்கப்படும் என கடந்த வருடம் முள்ளிவாய்க்கால் நினைவுதினத்தின்போது தெரிவிக்கப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில் முள்ளிவாய்க்கால் நினைவுதினம் வரப்போகின்றது. ஆனால் அங்கே நினைவுத்தூபி அமைக்கப்படவில்லை.

அத்துடன் வடக்கு மாகாண சபையால் பிரதி அவைத் தலைவர் உட்பட 11பேர் அடங்கிய குழுவொன்று இதற்காக நியமிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்தக்குழு அங்கு நினைவுத் தூபி அமைக்கப்பட்டதா அல்லது அமைக்கப்படவில்லையா? என்ற எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.

இதுவரை நினைவுத் தூபி அமைக்கப்படாததற்கான காரணம் என்ன? அல்லது முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைக்கப்படுவதற்காக நியமிக்கப்பட்ட குழுவினர் இயங்கா நிலையால் இருக்கின்றார்களா எனப் பலரும் கேள்வியெழுப்புகின்றனர்.

Related Posts