Ad Widget

வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டம்; பிரதி ஒன்றை வழங்குமாறு கோரிக்கை

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வடக்கு மாகாண சபையின் அரசியல் தீர்வுத்திட்டத்தின் பிரதி ஒன்றை வழங்குமாறு கிழக்கு மாகாண ஆளுனர் ஒஸ்ரின் பெர்னாண்டோ வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வடக்கு மாகாணசபையின் தீர்வுத்திட்டம் கடந்த மாதம் 22 ஆம் திகதி சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது.

குறித்த தீர்வுத்திட்டம் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டு உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவிருந்தது.

இதற்கிடையில் கடந்த மாதம் 28 ஆம் திகதி வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தீர்வுத்திட்டத்தை அரசமைப்பு நிர்ணய சபையின் தலைவரும் சபாநாயகருமான கரு ஜயசூரியவிடம் கையளித்திருந்தார்.

இந்தநிலையில் கடந்த வாரம் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்னாண்டோ, வடக்கு முதலமைச்சரைத் தொடர்பு கொண்டு வடக்கு மாகாண சபையின் தீர்வுத்திட்டத்தின் பிரதி ஒன்றைத் தனக்குத் தருமாறு கோரியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இதுவரை தீர்வுத்திட்டப் பிரதி கிழக்கு மாகாண முதலமைச்சருக்கு வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts