Ad Widget

மஹிந்தவின் உயிருக்கு தொடர்ந்தும் அச்சுறுத்தல் நிலவுகிறது

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வழங்கப்பட்ட இராணுவப் பாதுகாப்பு நீக்கப்பட்டமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச அதிருப்தி வெளியிட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இருந்த அரச தலைவர்களுக்கும் இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாரிய நிதிமோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக கோட்டாபய ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை முன்னிலையாகினார்.

இதன்பின்னர் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிட்டபோதே அவர் இவ்வாறு கூறினார்.

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு இராணுவப் பாதுகாப்பே வழங்கப்பட்டிருந்தது. மேலும் லக்ஷ்மர் கதிர்காமர், ஆனந்தசங்கரி ஆகியோரது குடும்பத்தினருக்கும்கூட இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

யுத்தம் உள்ளதா, இல்லையா என்பது அல்ல, ஆனால் உயிர் அச்சுறுத்தலுக்கு காரணமாக உள்ள காரணிகள் தொடர்ந்தும் உள்ளதா, இல்லையா என்பதையே பார்க்க வேண்டும். இந்த நிலையில் உயிர் அச்சுறுத்தல் தொடர்ந்து காணப்படுகின்றது – என்றார்.

Related Posts