Ad Widget

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு 8பேர் அடங்கிய குழு நியமிப்பு!

வடக்கு மாகாணசபையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை ஒழுங்குபடுத்துவதற் காக எட்டுப்பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 18ஆம் திகதி வடக்கு மாகாணசபையால் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கடைப்பிடிக்கப்படவுள்ளது.

கடந்த வருடத்தைப்போன்று முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வு அமைதியான முறையில் நடைபெறுமெனவும், இதற்கான ஒழுங்குகளை மேற்கொள்வதற்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்தக் குழுவில் வடக்கு மாகாண சபை அமைச்சர்களான, குருகுலராஜா, ப. சத்தியலிங்கம், பா. டெனீஸ்வரன் மற்றும் ஆளும் கட்சி உறுப்பினர்களான து. ரவிகரன், க. சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழுவினர் இன்று முற்பகல் 11.00மணியளவில் முதலமைச்சர் அலுவலகத்தில் ஒன்றுகூடி கலந்துரையாடல் ஒன்றை நடாத்தவுள்ளனர்.

அத்துடன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுக்கு வடக்கு மாகாணசபையைச் சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் 5,000 ரூபா வழங்குவது எனவும் வடக்கு மாகாணத்தின் ஆளும் கட்சியினர் நேற்று முன்தினம் தீர்மானம் ஒன்றையும் நிறைவேற்றியுள்ளனர்.

Related Posts