Ad Widget

மே 18 அஞ்சலி நிகழ்வு முள்ளிவாய்க்காலில்

எதிர்வரும் 18ம் திகதி யுத்தத்தால் உயிரிழந்த தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்த தயாராகி வருவதாக, வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரனின் தலைமையில் வெல்லமுள்ளிவாய்க்கால் கடற்பகுதியில் இந்த நிகழ்வு இடம்பெறவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன்நிமித்தம் கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்கள் அடங்கிய குழுவொன்றும் அமைக்கப்பட்டுள்ளதாக சிவாஜிலிங்கம் மேலும் கூறியுள்ளார்.

நேற்று யாழ் ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

இதனை வடமாகாணத்தின் துக்க நாளாக அனுஸ்டிக்க இருப்பதாகவும், இதற்கு வடமாகாண சபை முழு அளவிலான ஆதரவினை தந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

நாளை (இன்று) 12ம் திகதி தொடக்கம் 18 ஆம் திகதி வரை கடந்த போர் காலத்தின் போது முள்ளிவாய்காலில் உயிர் நீத்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட வேண்டும்.

மேலும் கிழக்கு மாகாணத்திலும் மே மாதம் 15ம் திகதியன்று மாலை 06.00 மணியளவில் திருகோணமலை வெளிக்கடை தியாகிகள் நிலையத்திலும் உயிர் நீத்த தமிழ் மக்களுக்கான நினைவேந்தல் இடம்பெறும்.

எனவே அன்றைய தினம் நல்ல காரியங்கள், கொண்டாட்டங்கள் மற்றும் உற்சவங்களை தவிர்த்து, துக்க தினமாக அனுஸ்டிக்க வேண்டும் என்றும் சிவாஜிலிங்கம் தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Posts