இலங்கையில் ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகள் உறுதி செய்யப்பட வேண்டுமென இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அதுல் காசியப் தெரிவித்துள்ளார்.
ஓரினச் சேர்க்கையாளர்கள், பால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் உள்ளிட்ட தரப்பினரின் உரிமைகளை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்கத் தூதரகத்தில் வைத்து, ஓரினச் சேர்க்கையாளர் உரிமைகளுக்கான ஈகுவல் கிராவுன்ட் இலங்கை அமைப்பின் உறுப்பினர் ரொசானா கல்தேரவை, அமெரிக்கத் தூதுவர் சந்தித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.