வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும்

வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும் என அமைச்சர் மனோ தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளிட்டுள்ள முகநூல் பதிவில் என் நண்பர் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே பகிரங்கமாக அரசியல் பேசுவதை நிறுத்த வேண்டும். அவர் ஒரு முன்னாள் அரசியல்வாதி. இன்னாள் அரச அதிகாரி. அவரது கருத்துகள் தேவையற்ற...

விசேட அதிரடிப் படையினரை பயன்படுத்துவது பாரிய சமூக விளைவுகளை ஏற்படுத்தும்: ஸ்ரீகாந்தா

யாழில் இடம்பெறும் குற்றச்சாட்டுக்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினரை பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. அது பாரிய சமூக விளைவுகளை ஏற்படுத்துமென தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். யாழ்.மாவட்டத்தில் இடம்பெறும் குற்றச் செயல்களைக் கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படையினரைப் பயன்படுத்துமாறு, வடமாகாண சிரேஷ்பிரதி பொலிஸ்மா அதிபருக்கும் யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன்...
Ad Widget

வேகமாக சென்ற முச்சக்கர வண்டி விபத்து: மூவர் படுகாயம்!!

யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சேரி ஒழுங்கையுடாக வந்த வாகனத்துடன் முச்சக்கர வண்டி ஒரு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கர வண்டியில் இருந்த முன்று நபர்கள் படுகாயத்துடன் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொஸிசார் தெரிவித்தனர். இச்சம்பவம் இன்று காலை 08.30 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றுள்ளது. முச்சக்கரவண்டி அதிவேகமாக பயனித்த காரணமாக இவ்...

இலங்கை காவல்துறைக்கு எதிராக 6 மாதங்களில் ஆயிரம் புகார்கள்

இலங்கையில் கடந்த 6 மாதக் காலப்பகுதியில் பொலிஸாருக்கு எதிராக ஆயிரத்திற்கும் அதிகமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஆணையத்தின் செயலாளர் ஆரியதாஸ குரே தெரிவித்தார். பொதுமக்களின் முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் இருத்தல், அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்தல் மற்றும் பக்கச்சார்பாக நடத்தல் ஆகியவை தொடர்பிலேயே அதிக முறைப்பாடுகள் கிடைப்பதாக அவர் மேலும் கூறியுள்ளார். பொலிஸாருக்கு எதிராக வைக்கப்பட்டுள்ள...

தமிழினியின் ‘ஒரு கூர் வாளின் நிழலில்’ சிங்கள மொழியில் வெளியானது

விடுதலைப் புலிகளின் அரசியல்துறை மகளிர் அணித் தலைவியாக இருந்த தமிழினி என்ற சுப்ரமணியம் சிவகாமி எழுதியதாகக் கூறப்படும் 'ஒரு கூர் வாளின் நிழலில்' என்ற நூலின் சிங்கள மொழியாக்கம் கொழும்பில் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. பிரபல சிங்கள திரைப்பட மற்றும் நாடகக் கலை இயக்குநரான தர்மஸ்ரீ பண்டார நாயக்க வெளியிட்டுள்ள இந்த நூலை, 'தியுனு அஸிபத்தக செவன...

சிறீலங்கா கடற்படையின் கடல்-வான் மீட்பு ஒத்திகை!

வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையுடன் இணைந்து சிறீலங்கா விமானப்படை கடல் வான் மீட்பு ஒத்திகை ஒன்றை மேற்கொண்டுள்ளது. ஹிங்குராகொடவை தளமாகக் கொண்ட சிறீலங்கா விமானப்படையின் 7ஆவது உலங்கு வானூர்தி அணியினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒத்திகையில், சிறீலங்கா விமானப்படையின் சிறப்புப் படையினர், விமான ஓட்டிகள், சுடுநர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்களும் பங்குபற்றினர். மீட்புப் பணிக்கான உயிர்காப்பு வீரர்கள் மற்றும்...

வடக்கு சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் வலசைப் பறவைகள் பற்றிய செயலமர்வு

வடமாகாண சுற்றாடல் அமைச்சின் ஏற்பாட்டில் வலசைப் பறவைகள் பற்றிய செயலமர்வும் வெளிக்களப் பயிற்சியும் யாழ் மாவட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் மே மாதம் இரண்டாவது வாரத்தின் இறுதி நாட்களில் சர்வதேச அளவில் உலக வலசைப் பறவைகள் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதன் முக்கியத்துவத்தை மாணவர்களுக்கு எடுத்துச்சொல்லி வலசைப் பறவைகள் பற்றிய அறிவூட்டலை ஏற்படுத்தும் நோக்குடன் வடக்கு...

தனியார் வைத்தியசாலைகளில் அதிக பணம் அறவிடுதாக குற்றச்சாட்டு

தனியார் வைத்தியசாலைகள் மற்றும் இரசாயன ஆய்வுகூடங்கள் என்பன VAT வரியினை சாட்டிக் கொண்டு நோயாளிகளிடம் கூடுதலான பணம் அறவிடுவதாக குற்றச்சாட்டு ஒன்று மக்களிடையே எழுந்துள்ளது. VAT வரி திருத்தத்திற்குள் மறைந்துகொண்டு, தனியார் வைத்தியசாலைகள் மற்றும் இரசாயன ஆய்வுகூடங்களில், நோயாளர்களிடம் அதிக பணம் அறவிடப்படுவதாக இலங்கை வைத்திய இரசாயனகூட ஆய்வுகள் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது. 15 வீதத்தால்...

பாடசாலை சீருடைக்கான வவுச்சரின் பெறுமதி அதிகரிப்பு

பாடசாலை சீருடைக்கான வவுச்சர் பெறுமதியை மேலும் 100 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக கல்வி அமைச்சசர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார். இதன் பிரகாரம் 400 ரூபாயாக இருந்த சீருடைக்கான வவுச்சரின் பெறுமதியை 500 ரூபாயாக அதிகரிக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார். சீருடைக்கான வவுச்சர் அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து கோடிக்கணக்கான ரூபாய் பணம் மீதப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்மூலம் வவுச்சரின் பெறுமதி அதிகரிப்பதற்கு முடிந்துள்ளதாகவும் அமைச்சர்...

யாழில் பாரியளவில் வெசாக் கொண்டாட்டங்கள்!!

யாழ்ப்பாணத்தில் எதிர்வரும் 21ம் திகதி வெசாக் கொண்டாட்டங்களை பாரியளவில் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கொழும்பில் நேற்று நடத்திய செய்தியாளர் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுனர் ரெஜினோல்ட் குரே இது தொடர்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். யாழ். துரையப்பா விளையாட்டரங்கு தொடக்கம் நாகவிகாரை வரை வெசாக் வலயம் அமைக்கப்படும் எனவும் வடக்கில் 12 விகாரைகளில் வெசாக் நிகழ்வுகள் இடம்பெறவுள்ளதாகவும்...

ஒரு வருடமாகியும் நீதி கிடைக்கவில்லை!-வித்தியாவின் தாய்

புங்குடுதீவு மாணவி வித்தியா கூட்டு வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு நேற்றுடன் ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில் அவரது இல்லத்தில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது. இந்த நிலையில், தமது மகளின் கொலை தொடர்பாக, வித்தியாவின் தாயார் கருத்து தெரிவிக்கையில்- எனது மகளுக்கு இந்த கொடூரமான சம்பவம் நிறைவடைந்து ஒருவருடம் கடந்துள்ள நிலையிலும் எனது மகளுக்கு நீதி...

கிடுகு வீடாக இருப்பினும் மின் இணைப்பு வழங்கவேண்டும்!

யாழ் மாவட்டத்தில் மின்சார வசதிகள் இல்லாத சுமார் 8000 ஆயிரம் பேருக்கு எதிர்வரும் மூன்று மாதத்துக்குள் மின்சார வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். இல்லையேல் கிராம அலுவலர்களே அதற்கான பொறுப்பாளிகள் ஆவர் என மிக்சக்தி பிரதி அமைச்சர் அஜித்.பீபெரேரா தெரிவித்துள்ளார். இலங்கை மின்சார சபையின் வடபிராந்திய அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற (வெள்ளிக்கிழமை) அனைவருக்கும் மின்சாரம் நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு...

அரசு தவறினால் தீர்வை வென்றிட தமிழ் மக்கள் போராட்டம் நடாத்துவார்கள்

தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவினால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதிக்கும் அவரின் தலைமையின் கீழ் இயங்கும் அரசாங்கத்துக்கும் இனப்பிரச்சனைக்கான தீர்வு என்ன என்பது தெரிந்திருக்க வேண்டும். அத்தகைய அரசியல் தீர்வைக் கொண்டு வர அவர்கள் முன்வரத் தவறினால் தமக்கான அரசியல் தீர்வு என்ன என்பதை தமிழ் மக்களே தீர்மானித்து அதை வென்றெடுப்பதற்கான அரசியல் போராட்டத்தை ஆரம்பிப்பார்கள். இவ்வாறு...

டென்மார்க் பாராளுமன்றவளாகத்தில் கஜேந்திரகுமார் ஆற்றிய உரை

டென்மார்க் பாராளுமன்ற வளாகத்தில் டேனிஸ் தமிழ் அமைப்புக்களின் ஒன்றியம் நடத்திய சர்வதேச சட்டங்களும், மனித உரிமை மீறல்களும் என்னும் வரலாற்றுப்புகழ் மிக்க மாநாடு 11.05.2016 சனிக்கிழமை முற்பகல் 09.15ற்கு ஆரம்பித்து 12.00 மணிவரை சிறப்பாக நடந்தேறியது. சிறீலங்காவில் நடைபெற்ற, நடைபெற்று வரும் மனித உரிமை மீறல்கள், திட்டமிட்ட குடியேற்றங்கள், நில அபகரிப்புக்கள் போர்க்குற்றங்கள் போன்றன தொடர்பாக...

குற்றச்செயல்களை நியாயப்படுத்தும் வடக்கு ஆளுநர்!

வடக்கு மாகாணத்தில் முன்னரும் பல்வேறு குற்றச் செயல்கள் நடைபெற்றதாகவும் போர் நடைபெற்றுக்கொண்டிருந்ததனால் ஊடகங்கள் அதற்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை எனவும் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கொழும்பில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் நாட்டில் ஏனைய மாகாணங்களை விட வடக்கு மாகாணத்திலேயே குற்றச் செயல்கள் அதிகளவில் நடைபெறுகின்றன என வடக்கு மாகாண முதல்வர் தெரிவித்திருந்த...

தமிழ் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்கள் இல்லாத நிலை வேண்டும்

கடந்த காலங்களைப் போன்று யுத்த வெற்றி விழாக்கள் இனி நமது நாட்டில் கொண்டாடப்படமாட்டாதென அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானமானது வரவேற்கத்தக்கது. அதேபோன்று தமிழ்ப் பகுதிகளில் யுத்த வெற்றிச் சின்னங்களாகக் கருதப்பட்டு, பராமரிக்கப்பட்டு, பாதுகாத்து வரக்கூடிய அனைத்தையும் அகற்றவும் அரசாங்கம் முன்வர வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். இது...

இரு கோவில்களின் விக்கிரகங்கள் மணலினுள் புதைப்பு

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோரக்கர் கோவில் கிராமத்தில் அமைந்துள்ள அகோரமாரியம்மன் கோவிலிலும் அதே வளாகத்தில் அமைந்துள்ள பழம்பெரும் பிள்ளையார் கோவிலிலும் இருந்த விக்கிரகங்கள் இனந்தெரியாதோரால் தகர்த்து எடுக்கப்பட்டு அவ்விக்கிரகங்கள் தலைகீழாக மண்ணில் புதைக்கப்பட்ட சம்பவம் கடந்த வியாழக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. இதேவேளை, பிள்ளையார் கோவிலுக்கு அருகில் அமைந்துள்ள நாகதம்பிரான் கோவிலில் இருந்த நாகதம்பிரானின் ஏழு...

பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை

அரசாங்கத்தின் 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் அமைக்கப்படும் பொருத்து வீடுகள் தொடர்பில் எனக்கு திருப்தியில்லை. நீண்டகாலத்துக்கு பாவிக்கும் வகையில் அது இல்லை என மின்சக்தி பிரதி அமைச்சர் அஜீத் பீ.பெரேரா தெரிவித்தார். இலங்கை மின்சார சபையின் வட பிராந்திய காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (13) இடம்பெற்ற அனைவருக்கும் மின்சாரம் நிகழ்ச்சித் திட்டதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...

ராஜீவ் கொலை நேரடி சாட்சி போட்டோகிராபர் ஹரிபாபு உயிருடன்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்துவிட்டன. 'படுகொலைக்குக் காரணமானவர்கள்' என சி.பி.ஐயால் சொல்லப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்டோர், தங்களது விடுதலையை எதிர்நோக்கிக் காத்துக் கிடக்கிறார்கள். ராஜீவ்காந்தி படுகொலையின் மிக முக்கிய ஆவணம் என ஜெயின், வர்மா கமிஷன் விசாரணைகளில் குறிப்பிடப்பட்டது சம்பவ...

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு எதிராக மஹிந்த அணி போர்க்கொடி!

"நாட்டை சூறையாடிய பயங்கரவாதிகளை மே 18இல் நினைவுகூர வடக்கு மாகாண சபை எடுத்துள்ள தீர்மானத்திற்கு அரசும் இணக்கப்பாடு தெரிவித்துள்ளது. இதனை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது." - இவ்வாறு மஹிந்த அணியான பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மே 18ஆம் திகதி முள்ளிவாய்காலில் வடக்கு மாகாண சபை நினைவேந்தல்...
Loading posts...

All posts loaded

No more posts