Ad Widget

சிறீலங்கா கடற்படையின் கடல்-வான் மீட்பு ஒத்திகை!

வல்வெட்டித்துறைக் கடற்பரப்பில் சிறீலங்கா கடற்படையுடன் இணைந்து சிறீலங்கா விமானப்படை கடல் வான் மீட்பு ஒத்திகை ஒன்றை மேற்கொண்டுள்ளது.

ஹிங்குராகொடவை தளமாகக் கொண்ட சிறீலங்கா விமானப்படையின் 7ஆவது உலங்கு வானூர்தி அணியினால் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒத்திகையில், சிறீலங்கா விமானப்படையின் சிறப்புப் படையினர், விமான ஓட்டிகள், சுடுநர்கள் மற்றும் தொழிநுட்பவியலாளர்களும் பங்குபற்றினர்.

மீட்புப் பணிக்கான உயிர்காப்பு வீரர்கள் மற்றும் படகுகளை சிறீலங்கா கடற்படை வழங்கியிருந்தது.

கடலில் ஆபத்தை எதிர்கொள்பவர்களைப் பாதுகாக்கும் இந்நடவடிக்கை இராணுவத்தினருக்கும் பொதுமக்களுக்கும் பயன்படும் என இராணுவம் அறிவித்துள்ளது.

பலாலி விமானப்படைத் தள கட்டளை அதிகாரி, குறூப் கப்டன் எஸ்.டி.ஜி.எம்.சில்வா மற்றும் 7ஆவது உலங்குவானூர்தி அணியின் கட்டளை அதிகாரி விங் கொமாண்டர் தனிப்புலியாராச்சி ஆகியோரின் மேற்பார்வையில் இந்த ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒத்திகையின்போது கடலில் தத்தளித்தவர்களை இந்த விமானப்படையினர் கெலிகொப்டரில் மீட்டு சிதம்பராக் கல்லூரி மைதானத்தில் இறக்கிய காட்சியினை பெருமளவான மாணவர்களும், ஊர்மக்களும் பார்வையிட்டனர்.

navy-reasale-2

navy-reasale-1

Related Posts