Ad Widget

கிடுகு வீடாக இருப்பினும் மின் இணைப்பு வழங்கவேண்டும்!

யாழ் மாவட்டத்தில் மின்சார வசதிகள் இல்லாத சுமார் 8000 ஆயிரம் பேருக்கு எதிர்வரும் மூன்று மாதத்துக்குள் மின்சார வசதிகள் பெற்றுக்கொடுக்கப்படவேண்டும். இல்லையேல் கிராம அலுவலர்களே அதற்கான பொறுப்பாளிகள் ஆவர் என மிக்சக்தி பிரதி அமைச்சர் அஜித்.பீபெரேரா தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையின் வடபிராந்திய அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற (வெள்ளிக்கிழமை) அனைவருக்கும் மின்சாரம் நிகழ்ச்சித் திட்டத்தில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்,

இருள் அகன்று முழுநாடும் ஒளி பரப்பும் இத்திட்டத்தின் கீழ் ஒரு இலட்சத்து இருபதினாயிரம் பேருக்கு மின்சார வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவுள்ளது. யாழ்ப்பாணத்தில் எண்ணாயிரம் குடும்பங்கள் மின்சார வசதியின்றி வாழ்கின்றனர். ஒரு வீட்டில் ஒரு குடும்பம் வசித்தால் அந்த வீட்டுக்கு கட்டாயம் மின்சார வசதி ஏற்படுத்திக்கொடுக்கவேண்டும்.

இதனை நிறைவுசெய்ய கிராம அலுவலர்கள் தமது பகுதியில் மின்சார வசதியற்று இருக்கும் குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான விண்ணப்பங்களை பூர்த்திசெய்யவேண்டியது கிராம அலுவலர்களின் கடமையாகும்.

அப்படி எதிர்வரும் மூன்று மாங்களுக்குள் கிடுகு வீடாக இருந்தாலும் சரி மின்சார வசதி வழங்கப்படவேண்டும். இல்லையேல் அதற்கு பொறுப்பாளிகள் கிராம சேவகர்களே. ஆகவே அனைவருக்கும் மின்சாரம் வழங்குவதற்கு கிராம சேவர்கர்கள் முனைந்து செயற்படவேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மேலும் இதற்கு முற்பணம் செலுத்தத்தேவையில்லை. ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா மூன்று இலட்சம் மின்சார சபையால் செலவு செய்யப்படும் எனவும் தெரிவித்தார்.

Related Posts