சிவாஜிலிங்கத்தைக் கைது செய்யக் கோருகிறார் பிரசன்ன ரணதுங்க!

விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கு பகிரங்கமாக அழைப்பு விடும் வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கத்தை கைது செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க கோரியுள்ளார். இராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறுகையில் ,...

பிரபாகரனுக்கு உயிர் கொடுக்க முனைகிறார் விக்கி! அமைச்சர் ராஜித குற்றச்சாட்டு

பிரபாகரனுக்கு மீண்டும் உயிர்கொடுக்கும் செயலையே வடமாகாண முதலமைச்சர் விக்கினேஸ்வரன் மேற்கொள்கின்றார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், யுத்தம் முடிவடைந்து ஏழு ஆண்டுகளாகியும் இன்னும் வடக்கில் பழைய நிலைமைகளும் அதே சிந்தனையுமே மக்கள் மத்தியில் உள்ளது. அவர்களின் மனங்களில் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி எம்முடன் இணைத்துக்கொள்ள நாம் பல...
Ad Widget

சனல்-4 தொலைக்காட்சி உண்மை–மங்களசமரவீர!

சிறீலங்காவில் இடம்பெற்ற போரின்போது மனித உரிமை மீறல்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான கொடூரங்கள் இடம்பெற்றதை உறுதிப்படுத்திய சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொளி உண்மையானது என சிறீலங்கா அரசாங்கம் முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளது. 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு ஒரு சில மாதங்களில் வெளியான சனல்-4 தொலைக்காட்சி சேவை வெளியிட்ட காணொளி...

புகையிரதப் பாதைகளில் நடப்பவர்களுக்கு அபராதம்!

புகையிரதப் பாதைகளில் நடப்பவர்களுக்கு எதிராக இன்று திங்கட்கிழமையிலிருந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. ரயில் பாதைகளில் நடந்துசெல்பவர்களினால் கடந்த காலங்களில் அதிகளவான உயிராபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. அத்துடன், ரயில் பயணங்களின்போது அதற்கான பயணச்சீட்டு இன்றி பயணிப்போருக்கு இன்று முதல் 3000 ரூபா அபராதம் விதிக்க தீர்மானித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா...

இந்திய அரசின் அழுத்தத்தினால் கச்சதீவு அந்தோனியார் ஆலயக் கட்டுமானப்பணி நிறுத்தப்படவில்லை!

கச்சதீவில் புதிய தேவாலயக் கட்டுமானப் பணிகள் இந்திய அரசின் அழுத்தத்தினால் நிறுத்தப்பட்டுள்ளது என வெளியான செய்தியில் உண்மையில்லையென சிறீலங்காக் கடற்படை தெரிவித்துள்ளது. இந்திய அரசாங்கத்தின் அழுத்தத்தினால் கச்சதீவு தேவாலயக் கட்டுமானப் பணிகள் இடைநிறுத்திவைக்கப்பட்டுள்ளதாக சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்த்தன சண்டே ரைம்ஸ் நாளிதழுக்கு செய்தி வெளியிட்டிருந்தார். ஆனால், இது தொடர்பில் கடந்த...

சுபநேரத்தில் கொலை: பூசாரி கைதானார்

ளத்சிங்கள ஹல்வத்துரே பத்திரகாளியம்மன் கோவில் பொறுப்பாளரான ஏ.ஏ. சோமதாஸவை (80) படுகொலைசெய்தனர் என்ற குற்றச்சாட்டில், அந்தக் கோவிலின் பூசாரியும் மட்டக்குளியைச் சேர்ந்த பழைய இரும்புகளைச் சேகரிக்கும் ஒருவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தக் கொலையைச்செய்வதற்கு சுபநேரம் பார்க்கப்பட்டதாகவும் அந்நேரத்திலேயே சாக்கொன்றினால் அவருடைய முகத்தை மூடிய சந்தேகநபர்கள், கழுத்தைத் திருகி அவரைப் படுகொலைசெய்துள்ளனர். படுகொலைசெய்யப்பட்டவர் ஒன்பது பிள்ளைகளின் தந்தையாவார். இந்தப்...

2 பேர் மரணம்; மூவர் மாயம்; 7,090 பேர் பாதிப்பு

வீதிகளில் காட்டாறு கரைபுரண்டது தலைகாட்ட விடாது பேய் மழை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுப்பு 30 வீடுகளின் கூரைகள் அள்ளுண்டன நாட்டில் நிலவுகின்ற சீரற்ற வானிலை காரணமாக, இதுவரையிலும் இருவர் மரணமடைந்துள்ளனர், நால்வரைக் காணவில்லை மற்றும் 1,871 குடும்பங்களைச் சேர்ந்த 7,090 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று, அனர்த்த முகாமைத்துவ மத்தியநிலையம் அறிவித்துள்ளது. ஏப்ரல் மாதம் 22ஆம்...

வடக்கிலிருந்து இராணுவத்தை வெளியேற்றி பொலிஸ் அதிகாரத்தை தாருங்கள்! வன்முறைகளுக்கு முடிவு கட்டுகிறோம்!!

யாழ்ப்பாணத்தில் அதிகரித்துள்ள வன்முறைகளை தடுக்க வட மாகாண சபை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லையே என முதலமைச்சர் விக்னேஸ்வரனிடம் கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் தெரிவித்தவை வருமாறு:- வடக்கில் ஆயிரக்கணக்கான இராணுவத்தினரும் கடற்படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர். அவ்வாறு இருந்தும் இங்கு வன்முறைகள் தொடர்ந்து இடம்பெறுகின்றன என்றால், ஏதோ ஓர் இடத்தில் பிரச்சினை...

அனர்த்தம் ஏற்படின் உடன் அறிவிக்கவும்!

சீரற்ற காலநிலை காரணமாக அவசர அனர்த்த நிலைமைகள் ஏற்படின் உடனடியாக அறியத்தருமாறு, அரசாங்க பாதுகாப்பு பிரிவு மக்களிடம் கோரியுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பிரிவின் மேலதிக பணிப்பாளர், பிரிகேடியர் கே.ஜெ.ஜெயவீரவின் கையெழுத்துடன் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு கூறப்பட்டுள்ளது. மேலும், இதன் பொருட்டு விஷேட தொலைபேசி இலக்கங்களும் வழங்கப்பட்டுள்ளன. இராணுவம் - 011 2 434 251...

முள்ளிவாய்க்கால் படுகொலை வார நிகழ்வு பருத்தித்துறையில் அனுஷ்டிப்பு!

முள்ளிவாய்க்கள் இனப்படுகொலை வாரத்தின் 4ஆம் நாள் நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை பருத்தித்துறை தெய்வேந்திர முனையில் மாகாணசபை உறுப்பினர் ச.சுகிர்தன் தலைமையில் இடம்பெற்றது. இதில் பிரதான சுடரினை மாகாணசபை உறுப்பினர் க.தர்மலிங்கம் ஏற்றி வைத்தார். தொடர்ந்து ஏனைய சுடர்களை முன்னாள் நகரசபை உறுப்பினர்கள் மதனி, தீபன், கரவெட்டி பிரதேச சபை உறுப்பினர் குகதாஸ், பருத்துறை பிரதேச சபை...

பல்கலைக்கழகங்களுக்கு ஒன்லைனில் விண்ணப்பிப்பது கட்டாயம்

அடுத்த வருடம் தொடக்கம் ஒன்லைன் ஊடாக பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்று உயர் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. தபால் மூலம் விண்ணப்பிப்பதனால் ஏற்படும் நேர தாமதத்தை கருத்திற் கொண்டு குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக உயர் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் அமைக்கப்பட்டுள்ள அறிவகம் மற்றும் அதனுடன் தொடர்புபட்ட நிலையங்களினூடாக இலவசமாக விண்ணப்பிக்க முடியும் என்றும்...

கிளிநொச்சியில் சிசுவை நீரோடையில் வீசிச் சென்ற பெண் கைது

கிளிநொச்சி - தர்மபுரம் - புளியம்பொக்குன பகுதியில் பிறந்து ஒரேநாளான சிசுவொன்றை நீரோடையில் வீசிச் சென்ற பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். அதிக இரத்தப் போக்கு காரணமாக மாங்குளம் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த வேளையே இவர் கைதாகியுள்ளதாக, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதேவேளை, பிறந்த போது குழந்தை இறந்திருந்தமையால் அதனை நீரோடையில் வீசியதாக, குறித்த பெண், பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்....

கட்டுநாயக்கவில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் கொச்சின், மத்தலவுக்கு அனுப்பி வைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வேண்டிய மூன்று விமானங்கள் இந்தியாவின் கொச்சின் மற்றும் மத்தல ஆகிய விமான நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சீரற்ற காலநிலையே இதற்குக் காரணம் என தெரியவந்துள்ளது.

7 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

சீரற்ற காலநிலை காரணமாக ஏழு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. இதன்படி, இன்று முற்பகல் 11.40 தொடக்கம் 24 மணித்தியாலங்களுக்கு இந்த அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலையத்தின் மண்சரிவு முகாமைத்துவ பிரிவின் பணிப்பாளர் ஆர்.எம்.எஸ் பண்டார குறிப்பிட்டுள்ளார். பதுளை, மொனராகலை, குருநாகல், இரத்தினபுரி,...

மே 18 தமிழ் இன அழிப்பு நாள் நினைவேந்தல் 2016

ஸ்ரீலங்கா அரசினால் தமிழ் மக்கள் மீது புரியப்பட்ட இன அழிப்பு யுத்தத்தில் கொல்லப்பட்ட தமிழ் மக்களை நினைவு கூரும் நிகழ்வு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் எதிர்வரும் 18ம் திகதி புதன்கிழமை இரண்டு இடங்களில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முள்ளிவாய்கால் கிழக்கில் - பி.ப 3.30 மணி (புனித சின்னப்பர் ஆலய வீதியால் செல்லும்...

வலசைப் பறவைகளின் வருகை வடக்கு மண்ணுக்கு வரப்பிரசாதம்

பூமியின் வடக்குப்பகுதியில் பனிபடிய ஆரம்பிக்கும்போது அப்பிரதேசங்களில் வாழுகின்ற பறவைகள் இரைதேடுவதற்காக வெப்பப்பிரதேசங்களை நோக்கி கூட்டம் கூட்டமாகக் குடிபெயர்கின்றன. குளிர்விலகும்போது தங்கள் சொந்த இடங்களுக்கு பாதை தவறாமல் திரும்பிச்செல்கின்றன. வலசை போகும் இந்தப் பறவைகள் வந்து தங்கிச் செல்லும் இடமாக இலங்கையில் வடக்கு மாகாணத்தில் பல இடங்கள் உள்ளன. இது வடக்கு மண்ணுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதம்...

தமிழின அழிப்பு நினைவுநாள், ஒற்றுமையாய் நினைவு கூறுவோம்

ஐ, நா. சபையின் மனிதவுரிமை அமைப்புக்கள் மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் என்பன வெளியேற்றப்பட்ட பின்னணியில் நவீன உலக ஊடகத்துறை இருளில் வைக்கப்பட்டு, சர்வதேச நாடுகள் பார்த்திருக்க வன்னி மண்ணில் நடத்தப்பட்டஅந்தக் கொடூரம், பின்னர் காணொளிகளகக் கசிய, சனல் 4 போன்ற ஊடகங்களின் வெளியீடுகள் அவற்றை தெளிவாகப் போர்க்குற்றங்களாக நிரூபித்து ஆவணத் தொடர்கள் வெளியிட, ஐ....

வட்டுக்கோட்டைத் தீர்மானத்திலிருந்து தாம் விலகிவிட்டதாக அறிவித்துள்ளார் சம்பந்தன்

தனித் தமிழீழமே தமிழ் மக்களின் பிரச்சனைக்கு இருக்கும் ஒரே தீர்வு என்ற நிலைப்பாட்டை வலியுறுத்திய வட்டுக்கோட்டை தீர்மானத்திலிருந்து தாம் நகர்ந்துவிட்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவரருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இந்தியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடன் இணைந்து நேற்று கும்பமேளா நிகழ்வில் கலந்துகொண்டுள்ள இரா.சம்பந்தன் இந்தியாவின் முன்னணி பத்திரிகையான த ஹிந்து பத்திரிகைக்கு...

பிரபாகரன் போன்ற ஒருவர் இனி வரவே முடியாது! வடக்கு ஆளுனர்

பிர­பா­கரன் போன்ற ஒருவர் இனிமேல் வரவே முடி­யாது என வட­மா­காண ஆளுநர் ரெஜினோல் குரே தெரி­வித்தார். அர­சாங்கத் தகவல் திணைக்­க­ளத்தில் நடை­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப் பில் கலந்­து­கொண்­டி­ருந்த போதே வட­மா­காண ஆளுநர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். இதுதொடர்பில் அவர் மேலும் கூறு­கையில், தமிழ் மக்­க­ளைப்போல் எவரும் யுத்த கஷ்­டங்­களை அனு­ப­வித்­தி­ருக்க மாட்­டார்கள். இழப்­புகள் என்றால் என்ன, வலி...

விசாரணைக்குத் தயாரா? சந்திரிகாவுக்கு சிவாஜிலிங்கம் சவால்!

நவாலி, செம்மணி, நாகர்கோவில் படுகொலைகள் குறித்த விசாரணைகளுக்குத் தயாரா என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவிடம் சவால் விடுத்துள்ளார் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம். தமிழினப் படுகொலை வாரத்தின் மூன்றாம் நாள் அஞ்சலி நிகழ்வு நேற்றய தினம் நவாலி சென்பீற்றஸ் தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டு வீச்சு தாக்குதலில் பலியானோருக்காக அமைக்கப்பட்ட நினைவிடத்தில் இடம்பெற்றது. அஞ்சலி நிகழ்வை...
Loading posts...

All posts loaded

No more posts