வடமாகாண சபையின் நினைவேந்தல் நிகழ்வு

வட மாகாணசபை ஏற்பாடு செய்துள்ள நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்காலில் இன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் முதலமைச்சர் அலுவலகத்தால் செய்திக் குறிப்பொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. '2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி இலங்கை தமிழரின் வரலாற்றில் மறக்க முடியாத நாள். சர்வதேச யுத்த விதிகளைப் புறந்தள்ளி கொத்துக் கொத்தாக எமது உறவுகளைக் கொன்றொழித்த இறுதி நாள்....

11.9 கிலோகிராம் கஞ்சாவுடன் இருவர் கைது

மாதகல் பகுதியில் 11 கிலோ 900 கிராம் கஞ்சாவை உடமையில் வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்களை செவ்வாய்க்கிழமை (17) கைது செய்துள்ளதாக இளவாலை பொலிஸார் தெரிவித்தனர். 35, 38 வயதுடைய சந்தேக நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டனர். மாதகல் பகுதியில் உள்ள வீட்டில் கஞ்சா விற்பனை இடம்பெறுவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேகநபர்கள் கைது...
Ad Widget

மழையால் சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள்

வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜீத் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். 'இடர் முகாமைத்துவ அமைச்சர் அநுர பிரியதர்ஷன யாப்பாவின் கோரிக்கைக்கு அமைய, அந்த அமைச்சால் பெற்றுக்கொடுக்கப்படும் தகவல்களை கொண்டு, முற்றாக சேதமடைந்த வீடுகள் புதிதாக நிர்மாணிக்கப்படும்' என சஜீத் பிரேமதாஸ...

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு உயரிய சபையில் அஞ்சலி

முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த எமது உறவுகளுக்கு இந்த உயரிய சபையில், அனைவரின் சார்பாகவும் அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்' என்று நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும் எம்.பி.யுமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில், ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு...

முள்ளிவாய்க்கால் பேரவல நாள் இன்று! இழந்த உறவுகளுக்கு தரணி எங்கும் நினைவுகூரல்!!

முள்ளிவாய்க்காலில் மனிதப் பேரவலம் நடந்த 7 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்று புதன்கிழமை வடக்கு - கிழக்கான தமிழர் தாயகத்திலும், தரணி எங்கும் நினைவு கூரப்படுகின்றது. பிரதான நினைவேந்தல் நிகழ்வுகள் பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் மண்ணில் இடம்பெறவுள்ளன. இவற்றுக்கான ஒழுங்குகளை வடக்கு மாகாண சபை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள்...

குறைநிரப்பு பிரேரணை மீதான வாக்கெடுப்பு உரிய வகையில் இடம்பெறவில்லை!

நிதி அமைச்சின் குறைநிரப்பு பிரேரணையை அங்கீகரிப்பதற்கான வாக்கெடுப்பு உரிய வகையில் இடம்பெறவில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேற்படி வாக்கெடுப்பின்போது குளறுபடி இடம்பெற்றது என எதிரணியால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு குறித்து விசாரிப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் எம்.பி. தலைமையில் நால்வரடங்கிய குழுவை சபாநாயகர் அமைத்தார். இந்நிலையில் விசாரணைக்குழுவின் அறிக்கை நேற்று சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட்டது இதையடுத்து கட்சித் தலைவர்கள் கூட்டம்...

தமிழின விடுதலைக்கு உயிர்கொடுத்த அனைவருக்காகவும் பிரார்த்திப்போம்! – முள்ளிவாய்க்காலில் அணிதிரளுமாறு மாவை எம்.பி. அழைப்பு

"போரில் உயிர்ப்பலியானோருக்கு மட்டுமல்ல, தமிழின விடுதலைக்கு உயிர்கொடுத்த அனைவருக்குமாக இன்று மே 18இல் ஒன்றுகூடி பிரார்த்திக்க வேண்டும். அதற்கு வன்னி மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் பொருத்தமான இடமாகும் என எண்ணுகின்றோம். எனவே, மே 18இல் அனைவரும் எமது விடுதலை என்ற இலக்கை அடைவதற்கும், இழந்த உயிர்களின் ஆத்ம சாந்திக்காகவும், ஆன்ம ஈடேற்றத்துக்கும் ஒன்றுபட்டு தம் திடசங்கற்பத்தை வெளிப்படுத்துவதே...

யுத்த வெற்றி விழா இனிமேல் கொண்டாடப்பட மாட்டாது!

யுத்த வெற்றி விழா கடந்த காலங்களில் இடம்பெற்றது போன்று இனிமேல் கொண்டாடப்பட மாட்டாது அதற்கு பதிலாக படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு மற்றும் கலாச்சார வைபவம் மாத்திரமே இடம்பெறும் என்று பாதுகாப்புச் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி தெரிவித்தார். யுத்தத்திற்கு பின்னர் நாட்டில் தற்பொழுது ஏற்பட்டுள்ள நல்லிணக்கத்தை கருத்திற் கொண்டே தற்போதைய அரசாங்கம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டு...

ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக மீளப்பெற வேண்டும்

வட மாகாண சபையையும், வட மாகாண முதலமைச்சரையும், அரசியல் தீர்வுக்கு அடிப்படையாக முன்வைக்கப்பட்டுள்ள இணைப்பாட்சி முறையையும் விமர்சித்துள்ள வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடனடியாக மீளப்பெற வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் என்.ஸ்ரீகாந்தா தெரிவித்துள்ளார். இதில் எவ்வித சமரசத்திற்கும் இடமில்லையென அவர் மேலும் தெரிவித்துள்ளார். யாழில்...

கிளிநொச்சியில் பல இடங்கள் வெள்ளக்காடு!

கிளிநொச்சியில் நேற்று முன்தினம் தொடக்கம் தொடர்ச்சியாகக் கனமழை பெய்து வருவதனால் மக்கள் வாழ்விடங்கள் பலவற்றுக்குள் மழை வெள்ளம் புகுந்துள்ளது. இதனால் பல குடும்பங்கள் இடம்பெயர்ந்து பொதுநோக்கு மண்டபங்களிலும் பாடசாலைகளிலும் தஞ்சமடைந்துள்ளார்கள். கிளிநொச்சி மாவட்டத்தின் பன்னங்கண்டி, சிவபுரம், பெரியபரந்தன், பொன்நகர், உருத்திரபுரம், அக்கராயன், ஆனைவிழுந்தான், மருதநகர், உமையாள்புரம், ஆனந்தபுரம் கிழக்கு, புளியம் பொக்கணை, முரசுமோட்டை, கோரக்கன்கட்டு, நாவற்கொட்டியான்,...

சுங்க அதிகாரிகளை ஏமாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்பி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் உண்மையான பெறுமதியை காட்டாமல் குறைந்த பெறுமதியை காட்டி அதிசொகுசு வாகனம் ஒன்றை இறக்குமதி செய்துள்ளதாககுற்றம் சுமத்தப்பட்டுள்ளது. சுங்க அதிகாரிகளை கோடிட்டு இலங்கையின் ஆங்கில செய்தித்தாள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. எனினும் இந்த உறுப்பினர் யார் என்ற தகவலை செய்தித்தாள் குறிப்பிடவில்லை. பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்டு Land Rover Diesel...

கரவெட்டியில் மினி சூறாவளி!

யாழ்ப்பாணம் கரவெட்டியில் நேற்று மாலை 4.15 மணியளவில் மினி சூறாவளி வீசியுள்ளது. கடந்த சில நாட்களாக நாட்டில் பெய்துவரும் கனமழை மற்றும் காற்றினைத் தொடர்ந்து நேற்று மாலை 4.15 மணியளவில் அல்வாய்ப் பகுதியில் சூறாவளி தாக்கியுள்ளது. இதனால் பல வீடுகள் சேதமடைந்துள்ளன என அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

உயிர்நீத்த எமது உறவுகளுக்கு உணர்வோடு அஞ்சலி செலுத்துவோம்!

உயிர்நீத்த எமது உறவுகளுக்கு உணர்வோடு அஞ்சலி செலுத்த அனைத்து மக்களையும் அணிதிரளுமாறு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாணவர் ஒன்றியம் அழைப்புவிடுத்துள்ளது. இந்நிகழ்வு மே – 18ஆம் திகதி யாழ் பல்கலைக்கழக முன்றலில் காலை 10.00 மணிக்கு இடம்பெறும் எனவும் பல்கலைக்கழக ஒன்றியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், யுத்த விதிகளை மீறி தனி...

சிறுமி வன்புணர்வு: சந்தேகத்தில் வயோதிபர் கைது

11 வயதுடைய சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் வயோதிபர் (வயது 64 வயது) ஒருவர், வவுனியா பொலிஸாரால் திங்கட்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். வவுனியா, கலாபோபஸ்வேவ, நந்திமிஸ்ரகம பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த சிறுமியை பக்கத்து வீட்டில் வசித்து வந்த 64 வயது முதியவர் ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை...

அவசர உதவிக்கு உங்கள் பகுதி பொலிஸாரை தொடர்பு கொள்வது எவ்வாறு? முழு விபரம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்கள் உதவிகளைப் பெற பொலிஸார் விஷேட இலங்கங்களை அறிமுகப்பட்டுள்ளனர். எனவே பாதிக்கப்பட்ட மக்கள் தாம் இருக்கும் இடங்களைப் பற்றி உடன் அறியத்தருமாறு கோரப்பட்டுள்ளது. இதன்படி பொலிஸ் தலைமையகத்தால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில், 01. 119 பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவு 02. பொலிஸ் மா அதிபர் உதவிப் பிரிவு -...

பாதிக்கபட்டவர்களுக்காக 24 மணித்தியாலமும் சுகாதார உதவி

சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ, 24 மணித்தியாலங்களும் இயங்கும் விஷேட சேவைகளை மேற்கொள்ளவுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. அமைச்சர் ராஜித்த சேனாரத்னவின் பணிப்புரைக்கு அமைய இந்த நடவடிக்கைகளை மேற்கொள்வதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் பாலித்த மஹிபால தெரிவித்துள்ளார்.

தாகத்தால் தவிக்கும் பூநகரி மக்கள்!

கிளிநொச்சி-பூநகரிப் பிரதேசத்தில் தொடர்ந்துவரும் குடிநீர்ப் பற்றாக்குறையால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளதாகவும், இந்த நிலையைப் போக்க உரிய அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை பூநகரி கமக்கார அமைப்பின் தலைவரும் சமாதான நீதவானுமான செல்வராஜா முன்வைத்துள்ளார். இந்த விடயம் தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில், பூநகரிப் பிரதேசத்திற்குட்பட்ட ஞானிமடம், நல்லூர், செட்டியகுறிச்சி, சித்தன்குறிச்சி,...

முல்லைத்தீவில் மழையுடன்கூடிய சுழல்காற்று!

முல்லைத்தீவு மாவட்டத்தில் தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் அங்கிருக்கும் பல பகுதிகளில் மக்களின் இயல்புவாழ்க்கை முற்றுமுழுதாக பாதிக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. பல நாட்களாக கடும் வெப்பத்தினால் வாடிய மக்கள் தற்போது பெய்துவரும் கடும்மழையினால், தமது அன்றாட வாழ்க்கையை மேற்கொள்ளமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அத்துடன் நேற்றைய தினம் கடும் மழையுடன் கூடிய சுழல்காற்று...

மழை வீழ்ச்சி குறைவடையும்!! ஆனால் காற்று தொடர்ந்து வீசும்!!

நாட்டின் வளிமண்டலத்தில் காணப்பட்ட தாழமுக்க நிலை தற்போது நாட்டில் இருந்து விலகிச் செல்வதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதனால் மழை வீழ்ச்சி குறைவடைய வாய்ப்புகள் இருப்பதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. எனினும் காற்று தொடர்ந்து அதிகரித்து வீசும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை கேகாலை – தெஹியோவிட்ட - ஹல்தொட்டை – டெனிஸ்தோட்டம் பகுதியில் மண்சரிவு ஒன்று ஏற்பட்டதில்...

மாதகல் கடலில் பிடிபட்ட தங்கத்தில் 8 கிலோவைச் சுருட்டியது கடற்படை!

இந்தியாவுக்கு கடத்தப்பட்டுக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் மாதகல் கடலில் வைத்து கைப்பற்றப்பட்ட 45 கிலோ தங்கத்தில் 8 கிலோ தங்கம் மாயமானது குறித்து நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. குறித்த 45 கிலோ தங்கத்தை கடற்படையினர் சுங்கப்பிரிவினரிடம் கையளித்த பின்னர் 12 மணித்தியாலத்திற்குள் அதில் 8 கிலோ தங்கத்தினை மீள எடுத்துச் சென்றதாக...
Loading posts...

All posts loaded

No more posts