- Monday
- August 10th, 2026
மூன்று தசாப்த காலமாக நடைபெற்ற போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டமை மகிழ்ச்சியைத் தந்தாலும், அதனால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் கவலையளிக்கின்றன. பத்தரமுல்லையில் நாடாளுமன்ற மைதானத்தில் அமைந்துள்ள படைவீரர்களின் அஞ்சலி நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு உரையாற்றுகையில், மூன்று தசாப்த காலமாக தொடர்ந்த போர் முடிவுக்குக் கொண்டுவந்தமை மகிழ்ச்சியைத் தருகின்றது. ஆனால் இந்தப் போரில் கொல்லப்பட்ட...
இலங்கையில் தொடர்ந்து பெய்துவரும் கனமழையால், களனிகங்கையின் நீர்மட்டம் 7 மீற்றர்வரை உயர்ந்து பெருக்கெடுத்துப் பாய்வதால் கொழும்பு நகரின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதனால் களனி கங்கையின் கரையோரமாக உள்ள மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர். அதேவேளை, களனி கங்கையில் பெருக்கெடுத்த வெள்ளத்தினால், கொழும்பு நகரின் பகுதிகளான, வெல்லம்பிட்டிய, கொலன்னாவ, கொட்டிகாவத்தை, மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் வீடுகள்,...
முள்ளிவாய்க்கால் 7ஆம் ஆண்டு நினைவுதினத்தை எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் உட்பட தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினரும் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோர் புறக்கணித்துள்ளனர். முள்ளிவாய்க்கால் படுகொலையின் 7ஆம் ஆண்டு நினைவுதினம் தாயகத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் உணர்வுபூர்வமாகக் கடைப்பிடித்துவரும் வேளையில், இந்நிகழ்வின் பிரதான வைபமாக...
மூன்று தகாப்தமாக இடம்பெற்ற பயங்கரவாதத்தை தோற்கடித்து 07 ஆண்டுகள் நிறைவடைவதை நினைவு கூறுவது சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இராணுவத்தினரை கைது செய்வதற்காக அரசாங்கம் பயன்படுத்தும் போலியான மற்றும் கீழ்த்தரமான காரணங்கள் தொடர்பாக நீதிபதிகள் திறந்த நீதிமன்றங்களில் ஆச்சர்யம் வெளியிட்டுள்ளதாக மஹிந்த ராஜபக்ஷவின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வன்னியில் இடம்பெற்ற போர்...
மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள அரநாயக்க, எலங்கபிட்டிய பிரதேசத்திற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கண்கானிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டார். மண்சரிவால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை பார்வையிட்ட பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பாதிக்கப்பட்ட மக்களிடம் நலம் விசாரித்தார். மீட்புப் பணிகளை விரைவுபடுத்துமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதன்போது அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
அரநாயக்க பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மண்சரிவு அபாயம் தொடர்பில் நேரில் கண்டறிவதற்காக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்பகுதிக்குச் சென்றுள்ளார். நாட்டில் ஏற்ப்பட்டுள்ள சீரற்ற காலநிலையினால் மாவனல்ல, அரநாயக்க பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்குண்டவர்களது 14 சடலங்களும் புலத்கொஹுபிட்டிய மண்சரிவில் சிக்குண்டவர்களில் மூவரது சடலங்களும், இன்று புதன்கிழமை (18) காலை மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அனர்த்தத்திற்கு முகம் கொடுத்துள்ள மக்கள் எவராயினும் 1919 என்ற இலக்கத்திற்கு அழைப்பினையேற்படுத்தி தகவல் அறிவிக்கலாம் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. அனர்த்தங்கள் தொடர்பில் அறிவித்தும் அனர்த்தம் இடம்பெற்றுள்ள பகுதிகளுக்கு இதுவரையும் அரச அதிகாரிகள் எவரும் விஜயம் செய்யவில்லை எனில் அல்லது அரச அதிகாரிகள் எவரதும் உதவிகள் இன்னமும் உங்களுக்கு கிடைக்கவில்லை என்றால் “ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள்”...
நேற்று பாராளுமன்றில் உள்ள எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் முன்னாள் பிரதி இராஜாங்க செயலாளர் ரிச்சர்ட் ஆர்மிடேஜ் அவர்கள் எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தனை சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பின்போது இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் தனியார் காணிகளின் விடுவிப்பு, பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குதல், மற்றும் அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற...
முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை முன்னிட்டு பூரண கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மே 18 நாளான இன்று, வடக்கு மாகாணத்தில், முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் முழுமையான ஹர்த்தால் கடைப்பிடிக்கப்படும் என்று, வர்த்தக சங்கங்கள் அறிவித்தல் விடுத்தன. இதனையடுத்து, 'வன்முறைகள், படுகொலைகளுக்கு உள்ளாக்கப்பட்டு உயிர்நீத்த உறவுகளை விசுவாசமாகவும், நன்றியுணர்வாகவும் நினைவுகூர்ந்து அஞ்சலிப்பதை, தமது தேசியக்...
அவசர நிலைமையை கருத்திற்கொண்டு அனைத்து அரச ஊழியர்களுக்குமான விடுமுறைகள் அனைத்தும் இரத்துசெய்யப்பட்டுள்ளன. தற்போது நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையை கருத்திற்கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான மரபணு அறிக்கை இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னர் படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பான வழக்கு விசாரணைகள் இன்றைய தினம் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது இதுவரை காலமும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமல் இருந்த மரபணு அறிக்கை இன்றைய தினம் பெரும்...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடுசெய்திருந்த முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முன்றலில் புதன்கிழமை (18) காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஒன்றியப் பிரதிநிதிகள், அனைத்துப் பீட மாணவர்கள், கல்விசார ஊழியர்கள் அனைவரும் சுடரேற்றி அஞ்சலி செலுத்தினர்.
உயிரிழந்த தமிழ் மக்களுக்கு அஞ்சலி செலுத்த வடக்கு மக்களுக்கு எந்தத் தடையுமில்லை. அமைதியாகவும் உணர்வுபூர்வமாகவும் வடக்கில் உயிர்நீத்த அனைவருக்கும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தமுடியும். இந்தச் செயற்பாடுகளில் பாதுகாப்புப் படையின் எந்தவொரு தலையீடும் இருக்காது எனவும் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்துள்ளார். எனினும் வடக்கில் அஞ்சலி செலுத்த முடிந்தாலும் விடுதலைப்புலிகளை நினைவுகூர்ந்தோ அல்லது புலித் தலைவர்களின் படங்களை வைத்து...
முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கு வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தியுள்ளார். எங்கள் பெருமைமிகு வரலாறின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதாக அவர் தெரிவித்தார். இன்று (புதன்கிழமை)...
சர்வதேச குற்ற விசாரணை நடத்துவதன் மூலமே உயிரிழந்தவர்களின் ஆத்மா சாந்தியடையும்' என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். வடமாகாண சபையின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு, முள்ளிவாய்க்கால் கிழக்கு பாடசாலையில் முள்ளிவாய்க்கால் முற்றம் எனப்படும் இடத்தில் இன்று புதன்கிழமை (18) காலை நடைபெற்றது. அதில் கலந்துகொண்ட முதலமைச்சர் இவ்வாறு கூறினார். தொடர்ந்து கூறுகையில், 'போர்க்குற்ற விசாரணை...
முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலையின் ஏழாம் ஆண்டு அஞ்சலி நிகழ்வுகள் ஆரமம்பமாகி இடம்பெறுகின்றது. வணக்க நிகழ்வை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் சுடரேற்றி ஆரம்பித்து வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள், வடமாகாண சபை உறுப்பினர்கள், பொது மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் ஆகியோர் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட மக்கள் பிரதிநிதிகள் விபரம். வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்...
கிளிநொச்சியில் 70 வருடங்களின் பின் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. இங்கு 373.2மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன், மன்னார் பகுதியில் பெய்த கடும் மழையுடன் கூடிய காற்றினால் பேசாலைப் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்து சுமார் 40 வரையான மீன்பிடிப்படகுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் சமூக விரோத செயற்பாடுகளுக்கு யார் காரணம்?அரசியல் தொடர்புகள் உண்டா? நாடாளுமன்றத்தில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி! யாழ் குடாநாட்டில் அண்மைக்காலமாக இடம்பெற்றுவருகின்ற பல்வேறு சமூக விரோத செயல்கள் தொடர்பில் காவலத்துறையினர் அண்மையில் 'ரொக் டீம்' என்றொரு குழுவினரைக் கைது செய்துள்ளதாகத் தெரியவரும் நிலையில், அக் குழு தொடரப்பாகவும், யாழ் குடா...
தமிழர் பிரதேசங்களில் எங்குமில்லாதவாறு யாழ்ப்பாணத்தில் உருவாகியுள்ள வாள்வெட்டுக் கலாசாரம் தொடர்பில் தமிழ்ப் பிரதிநிதிகள் எந்தக் கருத்தையும் கூறாமல் இருக்கின்றனர். மீண்டுமொரு ஆயுதக்குழுக்களின் செயற்பாட்டை யாழில் கொண்டு வருவதற்காகவா இவ்வாறான சமூக விரோதச் செயல்களுக்கு அவர்கள் துணைபோகின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன் தெரிவித்தார். யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை...
கடந்த இரண்டு நாட்களாக யாழ்ப்பாணத்தில் பெய்த மழையால், ஜே - 80 கிராமஅலுவலர் பிரிவைச் சேர்ந்த மீனாட்சிபுரம் கிராமம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம் ஏற்படும் போது நீர் பாய்ந்து செல்லக்கூடிய மதகு மற்றும் கால்வாய் என்பவற்றை மூடி யாழ்ப்பாணம் சிறைச்சாலை கட்டப்பட்டுள்ளமையால், தங்கள் கிராமத்தில் தேங்கிய வெள்ளம் பாய்ந்தோட முடியாமல் உள்ளதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்....
Loading posts...
All posts loaded
No more posts
