- Monday
- August 10th, 2026
வங்காள விரிகுடாவில் நிலை கொண்டிருந்த ரோனு சூறாவளி காங்கேசன்துறைக்கு வடக்கே 900 கிலோமீ்ற்றர் தொலைவில் வடக்கு நோக்கி இலங்கையை தாண்டி செல்வதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நாட்டின் பலபாகங்களிலும் காற்றின் வேகம் அதிகரித்து காணப்படும் என்று வானிலை அவதான நிலையம் கூறியுள்ளது. இது மேலும் உக்கிரமடைந்து நாடு முழுவதும் பரவலான மழை...
இலங்கைத் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் நிபுணர் சீ.பி.திஸாநாயக்க எச்சரித்துள்ளார். இந்துமா சமுத்திரம் – அவுஸ்திரேலிய பூமித் தட்டுக்களில் உருவாகியுள்ள மாற்றம் காரணமாக எதிர்காலத்தில் இலங்கைத் தீவில் பாரிய நில நடுக்கம் ஏற்படக்கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இலங்கைக்கு 500 முதல் 700 கிலோ மீற்றர் தொலைவில் இந்த...
எதிர்வரும் திங்கட்கிழமை அரச ஊழியர்களுக்கு விடுமுறை வழங்குவது இல்லை என்று அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக அறியக்கிடைத்துள்ளது. சனி மற்றும் ஞாயிறு தினங்களில் வெசக் போய தினத்தை முன்னிட்டு எதிர்வரும் திங்கட்கிழமையும் அரச ஊழியர்களுக்கு விடுமுறையொன்றை வழங்குவது குறித்து அரசாங்கம் பரீசீலனை செய்திருந்தது. எனினும் தற்போது எதிர்பாராத வகையில் ஏற்பட்டுள்ள இயற்கைச் சீற்றம் காரணமான அனர்த்த காலநிலையைக் கருத்திற்கொண்டு...
புத்தர் பெருமானின் பிறப்பு, ஞானம் பெறுதல் மற்றும் இறப்பு உள்ளிட்ட முப்பெரும் நிகழ்வுகளை நினைவுகூரும் முகமாக உலகவாழ் பெளத்த மக்களால் விமரிசையாகக் கொண்டாடப்படுகின்ற திருநாளான புனித வெசாக் போயா தினமானது இலங்கையர்களான எம் அனைவருக்கும் மிகவும் முக்கிய சமய தினமொன்றாக விளங்குகின்றது. எதிர்க்கட்சித் தலைவர் என்ற வகையில் இலங்கை மக்களுக்கு இப்புனித போயா தினத்தில் வாழ்த்துவதற்கு வாய்ப்புக்...
தமிழக தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் முதலமைச்சராக பதவியேற்றவுள்ள செல்வி ஜெயலலிதாவுக்கு யாழ்ப்பாணத்தில் பட்டாசுகொளுத்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. அத்துடன் யாழ்ப்பாணம் - கல்வியங்காடு பகுதியில் அமைந்துள் எம்.ஜி.இராமசந்திரன் சிலைக்கு யாழ் எம்.ஜி.ஆர்.கோப்பாய் சுந்தரலிங்கம் மாலை அணிவித்து தீபம் ஏற்றி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். கோப்பாய் சுந்தரலிங்கம் எம்.ஜி.ஆர் இன் நெருங்கிய நண்பர் என்பதுடன் அவரது தீவிர ரசிகர்...
தமிழ்நாட்டு முதல்வராக மீண்டும் செல்வி ஜெயராம் ஜெயலலிதா தெரிவாகியதையடுத்து வடக்கு முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளதாவது, வருங்காலத்தில் செல்வி ஜெயலலிதா ஈழத் தமிழ் மக்களுக்கு பல நன்மைகளைச் செய்வார் என எதிர்பார்க்கின்றேன். தமிழ்நாட்டு மக்கள் மீண்டும் அவரையே முதலமைச்சராக்கியதிலிருந்து மக்கள் மத்தியில் அவருக்கிருந்த செல்வாக்கை எடுத்துக்காட்டுகின்றது. அதனால் அவர்...
இலங்கையில் நிலவி வரும் மோசமான காலநிலையால், பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மருத்துவ உதவிகள், தண்ணீர் சுத்திகரிப்பு வில்லைகள், படகுகள் போன்ற அவசர உதவிகள் தேவைப்படுவதாக இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. பல இடங்களிலிருந்து மக்களை வெளியேறுமாறு எச்சரிக்கை விடுத்தும் மக்கள் வெளியேறவில்லை எனவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்த்தம் தொடர்பில் கடந்த வியாழக்கிழமை...
'நான் கொழும்பில் பிறந்து வளந்தவன். அந்தவகையில் எனது தமிழ் உச்சரிப்பு என்பது வடக்கு மக்களின் தமிழ் உச்சரிப்புக்கு நிகரானதாக காணப்படுவதில்லை. இருந்தும் நான் தமிழில் பேசுகிறேன். எனது தமிழ் உச்சரிப்பு தொடர்பில் ஊடகங்கள் குற்றம் கண்டுபிடிக்கின்றார்கள்' என வடமாகாண ஆளுனர் ரெஜினல்ட் கூரே தெரிவித்தார். நீர்பாசனம் மற்றும் நீர் வள முகாமைத்துவ அமைச்சின் நீர்வள சபையின்...
வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் கூரேவின் பேச்சு, நடவடிக்கை வேறுவிதமாக இருக்கின்றது. அவர் அரசியல்வாதியாக இருந்தவர். மேல்மாகாண முதலமைச்சராகவும் இருந்தவர். அதனால், அனைத்தையும் அரசியல் ரீதியாக பார்க்கின்றார் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார். வடமாகாணத்திலுள்ள மீன்பிடியாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பான கலந்துரையாடல், யாழ். பொது நூலக மண்டபத்தில் வியாழக்கிழமை (19) நடைபெற்றது. அந்தக் கலந்துரையாடலின் பின்னர்...
தென்னிந்தியாவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் சூறாவளியாக மாறி காங்கேசன்துறைக்கு வடக்கே 400 கிலோமீ்ற்றர தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இது மேலும் உக்கிரமடைந்து நாடு முழுவதும் பரவலாம். ஆயினும் நாட்டின் வடபகுதிகளில் மழைவீழ்ச்சியின் அளவு வெகுவாக குறைவடைந்தே காணப்படும். எனினும் இச்சூறாவளியால் இலங்கையில் பெரிதளவான பாதிப்புக்கள் ஏற்படுத்தப்படா விடினும் காற்றின் பாதிப்புக்கள் காணப்படுமெனவும்...
இயற்கை அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உயிர்களை பாதுகாப்பதற்கே முதலிடம் வழங்க வேண்டும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை குறித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க நேற்று மாலை அலரி மாளிகையில் வைத்து விஷேட உரை ஒன்றை நிகழ்த்தியிருந்தார். இதன்போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். கொழும்பு மற்றும் அண்டிய பிரதேசங்களில் ஏற்பட்டுள்ள...
யாழ்ப்பாணம் காங்கேசன்துறைக்கு வடக்கேயுள்ள கடல்பகுதியில் 600 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் சூறாவளியாக மாற்றமடைந்திருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ள இந்த சூறாவளிக்கு 'ரோனு" என பெயரிடப்பட்டுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய வாய்ப்புகள் அதிகமாக காணப்படுகின்றன. இதேவேளை, மழை...
யாழில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக 1168 குடும்பங்களைச் சேர்ந்த 5047 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் ரவிகரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்.. யாழ்ப்பாண நகரப்பகுதி, நல்லூர், சண்டிலிப்பாய், வேலனை, உடுவில்,தெல்லிப்பளை,பருத்தித்துறை உள்ளிட்ட பல பகுதிகளையும் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த பகுதிகளிலுள்ள தற்காலிக...
களனி ஆற்றின் நீர்மட்டம் இன்னும் ஒரு அடி உயர்ந்தாலும் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது. களனி ஆற்றின் நீர்மட்டமானது இன்று காலை ஒரு அங்குலத்தினால் உயர்ந்துள்ளது. இதேவேளை நீர் குழாய்களில் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கு விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. அத்துடன் தற்காலிக...
தமிழீழ விடுதலைப் புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல்துறை பொறுப்பாளராக இருந்த எழிலன் உட்பட இறுதிப் போரில் சரணடைந்தவர்களின் விபரங்கள் எதிர்வரும் ஜுலை மாதம் 14ஆம் திகதி நிச்சயம் சமர்பிக்கப்பட வேண்டும் என்று முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முல்லைத்தீவு 58ஆம் படைத்தளத்தின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சாணக்ய குணவர்தன...
நாட்டில் இன்றும் கனமழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால தெரிவித்துள்ளார். காங்கேசன் துறைக்கு வடக்கே 500 கிலோ மீற்றர் தொலைவில் பலத்த காற்று வீசிவருகின்றது. இன்னும் 24 மணி நேரத்தில் அது சுறாவளியாக மாறி இலங்கையினூடாக பயணிக்கவுள்ளது. இதனால் மேற்கு , தெற்கு மற்றம் வடக்கிலும் மழை பெய்யக்கூடிய...
பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேரை யாழ். சிறுகுற்றத் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர். யாழ். நாவாந்துறை ஐந்து சந்தியில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் யாழ். ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்தவர்கள். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரைனட் 01 மற்றும் கத்தி, மோட்டார் சைக்கிள் 2 உட்பட பல பொருட்கள் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன....
அனைத்து பாடசாலைகளையும் நாளை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.சீரற்ற காலநிலை காரணமாக இந்த தீர்மானத்தை மேற்கொண்டதாக கல்வி அமைச்சர், அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
அல்வாய் கிழக்கு, வெள்ளுர்ப் பகுதியில் வசித்த இராசநாயகம் அஜந்தன் (வயது 20) என்ற இளைஞன், மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். குறித்த இளைஞன் தனது வீட்டில் இருந்தபோது நேற்று புதன்கிழமை (18) மாலை மின்சார தாக்கத்துக்கு இலக்காகியுள்ளார். பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை (19) அதிகாலை உயிரிழந்ததாக வைத்தியசாலை...
தொடர்ச்சியாக நிலவிவருகின்ற சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு இலட்சமாக அதிகரித்திருப்பதோடு, மூன்று இலட்சம் பேர் வரை இடம்பெயர்ந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமைய 94 ஆயிரத்து 775 குடும்பங்களைச் சேர்ந்த 4 இலட்சத்து மூவாயிரத்து 682 பேர்...
Loading posts...
All posts loaded
No more posts
