Ad Widget

கொழும்பில் நீர் விநியோகம் தடைப்படும் அபாயம்!! நீரில் கச்சா எண்ணெய் கலந்திருப்பதாகவும் முறைபாடு!!

களனி ஆற்றின் நீர்மட்டம் இன்னும் ஒரு அடி உயர்ந்தாலும் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடைப்படுமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச்சபை தெரிவித்துள்ளது.

களனி ஆற்றின் நீர்மட்டமானது இன்று காலை ஒரு அங்குலத்தினால் உயர்ந்துள்ளது.

இதேவேளை நீர் குழாய்களில் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்கு விஷேட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன் தற்காலிக காவல் மையங்களுக்கும் ஏனைய பிரதேசங்களுக்கும் தண்ணீர் பவுசர் மூலம் நீர் வழங்கப்படவுள்ளது.

மேலும் நீரில் கச்சா எண்ணெய் கலந்திருப்பதாக பல முறைபாடுகள் தொலைபேசி மூலம் கிடைக்கப்பெற்றுள்ளது.

இது குறித்து உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன் மேலதிக முறைபாடுகளுக்கு 1939 என்ற அவசர எண்ணுக்கு அமைப்பு விடுக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts