Ad Widget

காங்கேசன்துறைக்கு வடக்கே தாழமுக்க சூறாவளி!

தென்னிந்தியாவில் நிலை கொண்டிருந்த தாழமுக்கம் சூறாவளியாக மாறி காங்கேசன்துறைக்கு வடக்கே 400 கிலோமீ்ற்றர தொலைவில் நிலைகொண்டுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இது மேலும் உக்கிரமடைந்து நாடு முழுவதும் பரவலாம். ஆயினும் நாட்டின் வடபகுதிகளில் மழைவீழ்ச்சியின் அளவு வெகுவாக குறைவடைந்தே காணப்படும். எனினும் இச்சூறாவளியால் இலங்கையில் பெரிதளவான பாதிப்புக்கள் ஏற்படுத்தப்படா விடினும் காற்றின் பாதிப்புக்கள் காணப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும் இந்த புயலுடன் இணைந்ததாக நாட்டின் தென்மேல் மாகாணங்களில் மழையினளவு அதிகரிக்கலாம். அத்துடன் இன்னும் ஓரிரு தினங்கள் மேல், வடமேல், சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் மழை பெய்வதுடன், கடலோரங்களில் காற்றுடன் மழையும் காணப்படுமென வானிலை அவதான நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Related Posts