நாடாளுமன்ற வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவு நினைவேந்தல்!

முள்ளிவாய்க்காலில் படுகொலை செய்யப்பட்ட மக்களின் ஆத்மசாந்திப் பிரார்த்தனை, கடந்த வியாழக்கிழமை சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் சிலர் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், மாவை சேனாதிராசா, சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரட்ணசிங்கம், சிறிநேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத்தில்...

கொழும்பில் மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை – மக்கள் மத்தியில் அச்சம்!

கொழும்பில் சிலநாட்களாகத் தொடர்ந்துவந்த சீரற்ற காலநிலையால் மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகிய நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை வானம் சற்று வெளித்திருந்தது. இன்று மீண்டும் மழையுடன் கூடிய காலநிலை நிலவி வருகின்றது. வங்களா விரிகுடாவில் நிலைகொண்டுள்ள ‘ரோனு’ சூறாவளி தற்போது காங்கேசன்துறையிலிருந்து 1000 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ள நிலையில் அது தற்போது நாட்டைவிட்டு நகர்ந்துகொண்டிருக்கின்றது. இந்நிலையில் நாட்டில் தொடர்கின்ற...
Ad Widget

உயிரிழந்த கடற்றொழிலாளர்களின் விவரங்கள் திரப்படுகின்றன

தொழிலின் போது கடலில் உயிரிழந்த கடற்றொழிலாளர்கள் பற்றிய விவரங்களை வடமாகாண கூட்டுறவு அமைச்சு, கூட்டுறவுத் திணைக்களத்தினூடாகத் திரட்டிவருகிறது. கடலில் தொழில் செய்யும்போது உயிரிழந்த கடற்றொழிலாளர்களின் குடும்பங்களுக்கு வடமாகாண கூட்டுறவு அமைச்சு வாழ்வாதார உதவுதொகையாக ஒரு இலட்சம் ரூபாய் வழங்குவதற்குத் தீர்மானித்திருந்தது. இதற்கமைய கடலில் உயிரிழந்த கடற்றொழிலாளர்கள் தொடர்பான விவரங்கள் திரட்டப்படுகின்றன. கடலில் இறந்த கடற்றொழிலாளர்களின் குடும்பங்கள்,...

ஒபாமாவின் வெசாக் வாழ்த்து

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா மற்றும் இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி ஆகியோர் வெசாக் தினத்தை கொண்டாடும் இலங்கை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

யாழ் சிறைச்சாலையில் 08 கைதிகள் விடுவிப்பு

யாழ் சிறைச்சாலையில் இருந்து வெசாக் பண்டிகையை முன்னிட்டு எட்டு கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக யாழ் சிறைச்சாலையின் பிரதம அதிகாரி இந்திரகுமார் தெரிவித்துள்ளார். இவர்களை இன்று முற்பகல் 11.30 மணியளவில் விடுதலை செய்திருந்தனர். மேலும் விடுதலை செய்யப்பட்டவர்கள் சிறு குற்றங்களுக்காக தண்டப்பணம் செலுத்தாதன் காரணமாக சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்து வந்த எட்டு பேரையே இன்றைய தினம் விடுதலை...

இமயமலையின் உச்சிக்கு சென்ற முதலாவது இலங்கை பெண்

உலகில் மிக உயரமான இடமான இமய மலையில் ஏறிய முதலாவது இலங்கை பெண்ணாக ஜெயன்தி குருஉதும்பல சாதனை படைத்துள்ளார். இன்று காலை இமய மலையின் உச்சிக்கு அவர் சென்றடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி இமய மலை ஏறிய பெண்ணாக அவர் வரலாற்றில் இடம் பிடித்துள்ளார். அத்துடன் ஜெயன்தி குருஉதும்பலவுடன் சேர்ந்து இமய மலை எறுவதற்கு...

புனித வெசாக் பண்டிகை இன்று

புனித வெசாக் பண்டிகை தினம் இன்று(21) அனைவராலும் பக்தி பூர்வமாகவும், மகிழ்ச்சியுடனும், சாந்தி சமாதானத்துடனும், அனுஷ்டிக்கப்படுகின்றது.

நற்குணங்கள் மிகுந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்ப உதவும் ஆன்மீக அணுகுமுறை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வெசாக் தின செய்தி.. வெசாக் நிகழ்வினை, புத்த பெருமான் போதித்தவாறு அன்பு, பரிவிரக்கம், கருணை, மனஅமைதி ஆகிய நான்கு பிரம்மங்கள் ஊடாக உத்வேகம் பெறும் நற்குணங்கள் மிகுந்த சமூகமொன்றைக் கட்டியெழுப்புவதற்கான பாரிய ஆன்மீக அணுகுமுறையாக மாற்றிக் கொள்வது எமது நோக்கமாகக் காணப்பட வேண்டும். புத்தபெருமான் போதித்த தர்மத்திற்கு ஏற்ப வாழ்வதனைப்...

யாழில் நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணி

அனர்த்த பாதிப்புக்குள்ளானவர்களுக்கான நிவாரணப் பொருட்கள் சேகரித்தலும் விநியோகத்தலுக்குமான பொறிமுறை யாழ் மாவட்ட செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயலாளரினால் எமக்கு அறிவுறுத்தப்பட்டதற்கமைவாக நிவாரணப் பொருட்களை சேகரித்தல், விநியோகித்தலுக்கான நிலையம் யாழ்மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளது எனவும் நன்கொடைகளை வழங்க முன்வரும்...

பாதிக்கப்பட்ட மக்களுக்கு துரித நிவாரணம் வழங்கப்படவேண்டும்

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துரிய நிவாரணத்தை உடன் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவேண்டுமென எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இலங்கையில் தற்போது நிலவுகின்ற சீரற்ற காலநிலை, மண்சரிவு மற்றும் வெள்ளப்பெருக்கு என்பன காரணமாக உயிரிழந்த, பொருட்கள் சேதமடைந்த மற்றும் இடம்பெயர்ந்த குடும்பங்களைச்...

குளங்களின் நீர் பற்றாக் குறை தொடர்பாக ஆராயப்படுகின்றது

'குளங்களின் நீர் பற்றாக்குறை தொடர்பாக விவசாய அமைச்சருடனும் மத்திய அமைச்சுக்களுடனும் பேச்சுவார்த்தைகள் நடத்தி வருகின்றோம். இக்குளங்களைப் புனரமைத்தல் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குளங்களை ஒன்றாக இணைத்து நீர் மட்டங்களைக் கூட்டுதல், அதன் மூலம் இரண்டு போக பயிர்ச் செய்கைகளுக்கான நீரைத் தேக்கி வைத்தல் ஆகிய திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது. இவ்வாராய்ச்சிகள் முடிவடைந்ததும் உங்கள் குளங்கள்...

கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

இளவாலையில் 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சாவுடன் 48 வயதுடைய நபரை பொலிஸார் நேற்று கைதுசெய்துள்ளதுடன் 10 கிலோகிராம் கேரள கஞ்சாவையும் கைப்பற்றியுள்ளனர். பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 7 கஞ்சா பொதிகளை கைப்பற்றியதுடன் அந்நபரையும் கைதுசெய்துள்ளனர்.

சீரற்ற காலநிலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை தொடரும்!

இலங்கையில் நிலவிவரும் சீரற்ற காலநிலை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ‘ரோனு’ சூறாவளி காரணமாக நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் வானிலை அதிகாரி மொஹமட் சாலிஹீன் தெரிவித்துள்ளார். அத்துடன் கடற்பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யுமெனவும், காற்றின் வேகம் மணிக்கு 70 தொடக்கம் 80கிலோமீற்றராகக்...

யாழ்ப்பாண டி.ஐ.ஜி.க்கு இடமாற்றம்

யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜி.ஏ.பெரேரா கொழும்பு பொலிஸ் வாகனப் பிரிவுக்கான பிரதிப் பொலிஸ்மா அதிபராக இடமாற்றப்பட்டுள்ளார். இவர் கடந்த ஒருவருடமாக யாழ்.மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக கடமையாற்றியிருந்தார். யாழ்.மாவட்டத்துக்கான புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக, மாத்தளை மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த சஞ்சீவ தர்மரத்தன நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ்...

மின்சாரம் தடைபட்டால் 1987 க்கு அறிவிக்கவும்

மின் இணைப்புகளில் சேதங்கள் ஏற்பட்டிருந்தால், அவ்விடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் 1987 என்ற அவசர அழைப்பு இலக்கத்துக்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு மின்வலுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

220 பேர் தொடர்பில் இதுவரை தகவல் இல்லை

இயற்கைப் பேரனர்த்தத்தினால் இலட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியாகியுள்ளதுடன் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதேவேளை, ஆகக்குறைந்தது 173 பேர் காணாமல் போயுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது. இதேவேளை, 414,627 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் அந்த மத்திய நிலையம் அறிவித்துள்ளது. மலையகத்தில் மண்சரிவுகளும், தாழ்நிலப்பிரதேசங்களில் வெள்ளமும் சூழ்கொண்டுள்ளன. இதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றுமுழுதாகப் பாதிப்படைந்துள்ளது....

பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் நன்றி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் நன்றி தெரிவித்துள்ளார். சீரற்ற காலநிலையினால் பாதிப்புகளை எதிர்நோக்கியுள்ள மக்களுக்கு உதவிகளை வழங்கி வரும் முப்படையினர் மற்றும் பொலிஸ் பிரிவுக்கும் ஜனாதிபதி இவ்வாறு தமது நன்றிகளை தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசு முன்னெடுத்து வரும் வேலைத்திட்டம் தொடர்பில் விடுத்துள்ள விசேட அறிக்கை ஒன்றிலேயே ஜனாதிபதி இதனை...

இரண்டு போர்க்கப்பல்களில் இந்தியாவின் உதவி!!

இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு, இரண்டு போர்க்கப்பல்களில் இந்தியா அவசர உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது. கொச்சியியில் உள்ள இந்தியக் கடற்படையின் தென்பிராந்தியத் தலைமையகத்தில் இருந்து, ஐஎன்எஸ் சுகன்யா என்ற ஆழ்கடல் ரோந்துக் கப்பல் மற்றும், ஐஎன்எஸ் சுற்லேஜ் என்ற கப்பலில் ஆகியவற்றில், இந்தியாவின் அவசர உதவிப் பொருட்கள் அனுப்பி வைக்கப்படுவதாக இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது....

தற்போது இலங்கையில் உள்ள மிகவும் மோசமான பயங்கரவாதி வட மாகாண முதலமைச்சரே!!

தற்போது இலங்கையில் உள்ள மிகவும் மோசமான பயங்கரவாதி வட மாகாண முதலமைச்சரேயாகும் என ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைவர் ஒமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் அத்திட்டிய மிஹிந்து செத் மதுரவில் நடைபெற்ற படைவீரர் நினைவு நிகழ்வில் பங்கேற்ற போது இதனைத் தெரிவித்துள்ளார். எமது படைவீரர்களின் யுத்த வெற்றியை மலினப்படுத்தக் கூடாது.ஒட்டுமொத்த இலங்கையர்களுக்காகவுமே...

ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் வடக்கு முதலமைச்சருடன் சந்திப்பு

2.1 மில்லியனுக்கு சூழலுக்கு ஏற்புடையதற்ற வீட்டினை கட்டுவது குறித்து தமக்கும் புரியவில்லை என ஐக்கிய இராச்சியத்தின் உயர் ஸ்தானிகர் டேவிட் டலி நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட உயர் ஸ்தானிகர் டேவிட் டலி வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்து கலந்துரையாடினார். இந்த சந்திப்பு குறித்து கருத்து தெரிவித்த வடமாகாண முதலமைச்சர், அந்த...
Loading posts...

All posts loaded

No more posts