- Monday
- August 10th, 2026
முல்லைத்தீவு முள்ளியவளை 4ம் வட்டார புதறிகுடா குளத்திற்கு அருகில் நேற்றுக் காலை 11மணியளவில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவரின் பையினுள் இருந்த வங்கி புத்தகத்தின்படி யாழ் நெல்லியடியை சேர்ந்த 74 வயதான TS சிவபாதன் என்பவருடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது. மரணத்தில் மர்மம் இருப்பதாகவும் விசாரணைகள் தொடர்வதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் 27 ஆம் திகதி யாழ். மருத்துவ பீடத்தில் (கூவர் கேட்போர் கூடம்) காலை 9 மணிக்கு நீரிழிவு நோயாளர்களுக்கான பாதப் பராமரிப்பு மற்றும் பாதணிகள் உபயோகம் சம்பந்தமான விளக்கங்கள் வழங்கப்படவுள்ளன. இந்தியாவில் இருந்து வருகைதரும், பாதபராமரிப்பில் சிறப்புத்தேர்ச்சி பெற்ற வல்லுநர்களால் நீரிழிவு நோயாளர்களுக்கான கருத்தரங்கு நடத்தப்பட உள்ளது. பாத பராமரிப்புபற்றி அறிந்து கொள்ள விருப்பமுடைய...
நாட்டின் பல பாகங்களிலும் மீண்டும் இன்று திங்கட்கிழமை முதல் மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டில் பெய்துவந்த அடை மழை கடந்த மூன்று தினங்களாக சற்று குறைவடைந்து காணப்பட்டதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், வட மேல், தெற்கு, மத்திய, மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களுக்கு விசேடமாக இன்று திங்கட்கிழமை மழை பெய்யும்...
சாவகச்சேரி பகுதியில் வீட்டுத்திட்டப் பயனாளிகளாக தெரிவுசெய்யப்பட்டவர்கள் வீடுகளைப் பெற்றுக் கொள்வதில் பல சிரமங்களை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொண்டவர்கள், தற்போது வசிக்கும் வீட்டின் முன்னால் குடும்பமாக எடுத்த புகைப்படத்தை வழங்குமாறு பிரதேச செயலகத்தால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன்,வீட்டுத்திட்டப் பணிகளுக்கான பணத்தை வைப்பிலிடுவதற்காக பயனாளிகளின் தேசிய சேமிப்பு வங்கி கணக்கு இலக்கம் போன்றனவற்றை வழங்குமாறும் வலியுறுத்தப்பட்டுள்ளதாக பயனாளிகள் தெரிவிக்கின்றனர்....
வல்வெட்டி இந்து தமிழ் கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் 14 வயது மாணவனை, தொண்டைமானாறு கடற்கரையில் வைத்து இரவு நேரத்தில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில், வல்வெட்டி மொடேர்ன் கல்வி நிலைய உரிமையாளர் தவக்குமார், லண்டனில் இருந்து வந்தவரான சுரேஸ்குமார் மற்றும் மூவர், வல்வெட்டித்துறைப் பொலிசாரால் நேற்றுமுன்தினம் அதிகாலை கைது செய்யப்பட்டனர். இவர்கள் பருத்தித்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட...
யாழ்ப்பாணத்தில் பல பகுதிகளில் ஏமாற்றி லட்சக்கணக்கில் கொள்ளையில் ஈடுபட்ட இளம் பெண்ணொருவர் சுன்னாகம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 22 வயது மதிக்கத்தக்க, சொந்த முகவரியற்ற குறித்த இளம் பெண் பல்வேறு இளைஞர்களை தொடர்பு கொண்டு காதல் வலையில் வீழ்த்தி எட்டு லட்சத்திற்கு மேற்பட்ட பணம், நகைகளை கொள்ளையிட்டு தலைமறைவானார். இதன்காரணமாக குறித்த பெண்ணினால் பாதிக்கப்பட்டவர்கள்...
வவுனியா ஆராச்சிபுரம் பகுதியில் 14 வயது சிறுமியை கொடூரமாக பாலியல் துஷ்பிரயோகப் படுத்திய ஒருவரை காவற்துறை கைது செய்துள்ளது. குறித்த நபர் , சிறுமியை கைப்பேசி அழைப்பின் மூலம் அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கியுள்ளதாக அறியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட சந்தேக நபர், மட்டக்களப்பு பிரதேசத்தினை சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டது. சந்தேக நபர்மன்னார் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்....
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ திருமண பந்தத்தில் இணைந்து கொள்ளாமைக்கான காரணத்தை விளக்கியுள்ளார். முன்னாள் அமைச்சர் சீ.பி.ரட்நாயக்கவின் மகன் அபீத ரட்நாயக்க – திலினி சாபா ஆகியோரின் திருமண நிகழ்வு அண்மையில் ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்ற போது, நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான சம்பாஷனையின் போது இந்த விடயத்தை விளக்கியுள்ளார்....
தலைநகர் கொழும்பை மூழ்கடித்துள்ள வெள்ள நீர்மட்டம் குறையாத காரணத்தால் கொழும்பு வெள்ளக்காடாகவே தொடர்ந்தும் காணப்படுகின்றது. இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களுக்குள் அடைபட்டு பெரும் அவலத்துடனேயே வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். வெள்ளப்பாதிப்பு இடம்பெற்றுள்ள பிரதேசங்களில் கவலையை ஏற்படுத்தும் வகையில் திருட்டு மற்றும் மோசடிச் சம்பவங்கள் இடம்பெறுவதாகவும், சுமார் 5 ஆயிரம் பேரளவில் தொற்றுநோய் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. வெள்ள நீர்மட்டம்...
பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய முறையில் நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார். பேரிடர் நிவாரணங்கள் குறித்து ஊடகம் ஒன்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும்போதே அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டினார். பேரிடர் தொடர்பில் நான் எவர் மீதும் குற்றம் சுமத்த முடியாது. எனினும் உரிய முறையில் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்படவில்லை எனத் தெரிகிறது....
நெடுந்தீவு ஐக்கிய இராச்சியக் கிளையின் ஏற்பாட்டில் குமுதினி படுகொலை நினைவாக அண்மையில் நெடுந்தீவில் தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவீல் இருந்து குறிகட்டுவான் நோக்கிச் சென்று கொண்டிருந்த குமுதினி படகில் பயணம் செய்தவர்கள் மீது கடற்படையினர் மேற்கொண்ட தாக்குதலில் 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது 31ஆவது ஆண்டு நினைவையொட்டி...
இந்த மாதம் முழுவதும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் லலித் சந்திரபால இந்த தகவலை வெளியிட்டுள்ளார். தற்போதைய காலநிலையின் அடிப்படையில் இந்த மாதம் முழுவதிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவித்துள்ளார். இடியுடன் கூடிய மழை பெய்யாவிட்டாலும் ஓரளவு தொடர்ச்சியாக மழை பெய்யும் என...
ஸ்ரீலங்காவில் நிலவும் சீரற்ற காலநிலையைக் கணிப்பிடுவதற்கு 500 கோடி ரூபா செலவில் அமெரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்டு நிறுவப்பட்டுள்ள உயர் தொழிநுட்பமிக்க இயந்திரம் செயலிழந்துள்ளதாக வானிலை அவதான நிலைய பணிப்பாளர் லலித் சந்திரபால தெரிவித்தார். காலநிலை நிலைமை குறித்து ஆராய்வதற்காக கடந்த 2011 ஆம் ஆண்டு 500 கோடி ரூபா செலவில் இயந்திரமொன்று கொண்டுவரப்பட்டு கொன்கல மலையில் நிறுவப்பட்டுள்ளது....
சிறீலங்கா இராணுவத்தினரும் விடுதலைப்புலிகளின் போராளிகளும் ஒன்றிணைவதே எனது எதிர்பார்ப்பாகும் என வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். அத்துடன் சிங்கள இராணுவத்துடன் முன்னாள் போராளிகளும் தமிழ் இளைஞர்களும் இணைய முன்வரவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி இராணுவ ஒத்துழைப்பு மையத்தின் ஏற்பாட்டில் வெசாக் தின நிகழ்வு நேற்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இதன்போது யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட 29...
யாழில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய 5 பேர் கொண்ட கும்பலின் விளக்கமறியலை எதிர்வரும் யூன் மாதம் 3ஆம் திகதி வரை நீடித்து யாழ். நீதவான் நீதிமன்ற நீதவான் எஸ்.சதீஸ்கரன் வெள்ளிக்கிழமை (20) உத்தரவிட்டார். கடந்த 8ஆம் திகதி யாழ். குற்றத்தடுப்பு பிரிவினரால் யாழ். நகர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட 5 பேர் கொண்ட...
வட மாகாண சபை தயாரித்த அரசியல் தீர்வு திட்டம் சனிக்கிழமை (21) மாலை எதிர்க்கட்சி தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனிடம் கையளிக்கப்பட்டது. எதிர்க் கட்சி தலைவரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்த வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், வட மாகாண சபை எதிர்க்கட்சி தலைவர் சி.தவராசா ஆகியோர் உட்பட மாகாண...
மேல், வட மேல், தெற்கு, மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் இன்று (22) மழை பெய்யக் கூடும் என வளி மண்டளவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் கிழக்கு மாகாணத்தில் மழை பெய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. புத்தளம், கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதியில் மழை அல்லது...
இலங்கையில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இந்தியா மீட்பு அணிகளையும் உதவிப் பொருட்களையும் அனுப்பிவைத்துள்ளது. இந்தியக் கடற்படையின் கப்பல்களான, ஐஎன்எஸ் சுனைனா மற்றும் ஐஎன்எஸ் சுட்லேஜ் ஆகிய கப்பல்களிலும் இந்திய விமானப்படையின் சி-17 போக்குவரத்து விமானத்திலும் இந்தியா உதவிப் பொருட்களையும் மீட்பு அணிகளையும் அனுப்பியுள்ளது. இரண்டு கப்பல்களும் 30 தொடக்கம்...
சிறீலங்காவில் ஏற்பட்ட சீரற்ற காலநிலைகாரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் யப்பான் விமானமொன்று நேற்று இரவு கொழும்பு கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய செய்தியாளர் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப் பொருட்களுடன் கடந்த வெள்ளி இரவு 8.45 மணியளவில் குறித்த விமானம் கட்டுநாயக்கா விமானநிலையத்தை வந்தடைந்தது. இதில், மக்களுக்கான உடனடித் தேவைகளான போர்வைகள், தண்ணீர்...
Loading posts...
All posts loaded
No more posts
