- Sunday
- October 4th, 2026
ஓற்றுமை என்பதும் ஒற்றையாட்சி என்பதும் வேறுபட்டவை, இதனை மக்கள் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும் என்று வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ‘புதிய அரசியல் சாசனம் தயாரிப்பதற்காக மக்களின் கருத்துக்களை அறிவதற்கு நியமிக்கப்பட்ட குழு, அரசாங்கத்திடம் கையளித்துள்ள இறுதி அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகள் தொடர்பில் கருத்து வெளியிட்ட போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ‘ஓற்றையாட்சி...
"இலங்கை அரசு போர்க்குற்ற விசாரணையை தாமதப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றது. இந்த விடயத்தை இலங்கை வரும் ஐ.நா.வின் விசேட அறிக்கையாளரிடம் அழுத்தம் திருத்தமாக நேரில் தெரியப்படுத்தவுள்ளோம். அத்துடன் போர்க்குற்ற விசாரணையை உடன் ஆரம்பிப்பதற்கு இலங்கை அரசுக்கு ஐ.நா. அழுத்தம் வழங்க வேண்டும் என்பதையும் இதன்போது வலியுறுத்தவுள்ளோம்.'' - இவ்வாறு சிவில் சமூகத்தினர் தெரிவித்தனர். இலங்கைக்கு வருகைதரும் ஐ.நாவின்...
பழைய ஆட்சியில் மக்களுக்கு நடந்த பல சம்பவங்கள் தற்போது இடம்பெறுவதில்லை, எனினும் அது எமது மக்களின் பிரச்சினைக்கு முடிவு அல்ல, எமது பிரச்சினைக்கு முடிவு வரவேண்டும் எமது மக்களுக்கு நிரந்தரமான, நியாமான தீர்வு வரவேண்டும், என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். யாழில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கருத்து...
வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சின் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி இம்முறை வவுனியாவில் நடைபெற்றுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (03.06.2016) வவுனியா கலைமகள் மகாவித்தியாலயத்தில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் யூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இவ்வருடத்தில் இருந்து மே 30...
தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினியின் கணவர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளதாக ஆங்கில இணையம் செய்தி வெளியிட்டு உள்ளது. இந்த இணையத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது தமிழ் புலம்பெயர் சமூகத்தின் ஒரு தரப்பினர் தமக்கு அச்சுறுத்தல் விடுத்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார். தமிழினியின் ஓர் போர்வாளின் நிழலில் நூல்...
யாழ்.மாவட்டத்தில் பிரதேச சுகாரதார பணிமனையின் கீழ் உள்ள சுகாதார தொண்டர்கள் 820 பேருக்கு நிரந்தர நியமனம் வழங்குவதற்கான அனுமதியை அரசாங்கம் வழங்கியுள்ளது. யாழ் மாவட்டத்தில் உள்ள சுகாதார தொண்டர்கள் தமது நிரந்தர நியமனம் தொடர்பில் நேற்று வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன் போதே வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே இவ்வாறு தெரிவித்துள்ளார்....
கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் பெண் சட்டத்தரணியின் குடும்பத்துக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் வெளியான செய்தி தொடர்பாக தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் அறிக்கையை பெற்று, நீதிமன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் நீதவான் ஏ.ஏ.ஆனந்தராஜா வியாழக்கிழமை (04) உத்தரவிட்டுள்ளார். கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்ற பெண் சட்டத்தரணி ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில், அவரது கணவர்...
கிளிநொச்சியில் உள்ள பெண் சட்டத்தரணி ஒருவருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தும் வகையில் இணையத்தளங்களில் வெளியாகிய செய்தி தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 'கிளிநொச்சியில் உயர்பதவியில் இருக்கும் பெண் சட்டத்தரணி ஒருவருக்கு அபகீரத்தியை ஏற்படுத்தும் வகையில் அவரது கணவர் தொடர்பாகவும் அவரது குடும்பத்துக்கு அவப்பெயரை உருவாக்கவும் நீதிமன்றை அவமதிக்கும் வகையிலும் வெளியான செய்தி...
அனைவரும் வாக்காளர்களாக பதிவு செய்ய வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் இளைஞர்கள் பலர் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு அதிகம் விரும்புகின்றனர். இதனால் வடக்கில் நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைவடைகிறது. வாக்காளர்களாக பதிவு செய்யாமல் இருந்தால் இந்த எண்ணிக்கை மேலும் குறைவடைந்து செல்லும். இதனால் பல்வேறு பாதிப்புக்களை எதிர்நோக்க வேண்டி வரும்...
வடமாகாண அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு தொலைபேசிமூலம் கொலை அச்சுறுத்தல் விடுத்து 12 இலட்சம் கப்பம்கோரிய நபர் நேற்று (வெள்ளிக்கிழமை) வவுனியா காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த 20ஆம் திகதி வட மாகாண சுகாதார அமைச்சரின் தொலைபேசிக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து 12 இலட்சம் கப்பம் கோரியதாக வவுனியா காவல்துறையில் முறைப்பாடொன்றை சத்தியலிங்கம் பதிவுசெய்திருந்தார். இதனையடுத்து வவுனியா காவல்துறையினரால் இரண்டு...
சாவகச்சேரி பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட நாவற்குழி பகுதியில் நீண்டகாலமாக தமிழ் மக்கள் வாழ்ந்த நிலத்தை அந்த மக்களுக்கு வழங்குங்கள் என முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் விடுத்திருந்த வேண்டுகோளையும் பொருட்படுத்தாமல் அந்த நிலத்தில் படையினருக்கான குடியிருப்பு அமைக்கும் முயற்சிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அங்கு வாழ்ந்த தாம் அச்சுறுத்தி வெளியேற்றப்பட்டதாகவும் மக்கள் குறிப்பிடுகின்றனர். நாவற்குழி பகுதியில் தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கு...
தமிழர் பிரதேசங்களில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருக்கும் நிலங்களை மீளக் கையளிக்கமுடியாது எனக் கூறுவதற்கு இராணுவத்தினருக்கு எந்தவொரு உரிமையும் கிடையாது என தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். அரசாங்கம் மக்களின் சொந்த நிலங்களை விடுவித்து அவர்களை அவர்களது காணிகளில் குடியமர்த்த மறுக்குமானால் நாம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தில் முறையிடுவதுடன், மக்கள் போராட்டத்தை...
இலங்கை அரசாங்கத்தால் அமைக்கப்படவுள்ள நல்லிணக்கப் பொறிமுறை குறித்து ஆராய்வதற்காகவும், இனிவரும் காலங்களில் பிரச்சனைகள் ஏற்படாதிருப்பதை உறுதிப்படுத்துவது தொடர்பான ஐநாவின் சிறப்பு அறிக்கையாளர் பப்லோ டி கிரிப் அடுத்த வாரமளவில் சிறீலங்காவுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது. ஐநா மனித உரிமைகள் பேரவையின் 32ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி நடைபெறவுள்ளதால் இந்த அமர்வில் சிறீலங்கா தொடர்பாக...
பொறுப்புக்கூறுவதற்கான உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகள் இடம்பெறுவதை சிறீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று சிறீலங்காவின் தொழிற்பயிற்சி மற்றும் அபிவிருத்தி அமைச்சர் மகிந்த அமரசிங்க தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் இதுபற்றித் தெரிவிக்கையில், விசாரணைப் பொறிமுறையில் வெளிநாட்டு நிதிபதிகளை அனுமதிக்காவிடினும், மகிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தைப்போல் வெளிநாட்டு நிபுணர்களின் உதவியை சிறீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளும். காணாமற்போன செயலகம் ஏற்கனவே...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் 18 ஆம் திகதி யாழ்ப்பாணம் வருகிறார். இதன்போது காங்கேசன்துறை நடேஸ்வரக் கல்லூரியில் இருந்து 'தல்சவன' ஹோட்டல் வரையான சுமார் 400 ஏக்கர் காணிகள் உரிமையாளர்களிடம் கையளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்போது இந்திய அரசாங்கத்தால் புனரமைக்கப்பட்ட துரையப்பா பொது விளையாட்டரங்கை அவர் கையளிப்பார் எனத் தெரிகிறது. மேலும் அன்று சர்வதேச யோகா...
வடமாகாண மக்களின் மனம் அறியாது நிலை அறியாது உறுப்பினர்கள் பலர் செயற்பட்டு வருகின்றார்கள். செய்ய வேண்டிய வேலைகள் இருக்கும் போது சிறுபிள்ளைத்தனமான பல நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள். அமைச்சர்களைப் பற்றி அவதூறுகளை எடுத்து விளம்பவே சபையைப் பாவிக்கப் பார்க்கின்றார்கள். பல நன்மைகளை எதிர்பார்த்து மக்கள் இருக்கின்றார்கள். அதற்காகப் பாடுபடாது எதிர்மறையான காரியங்களிலேயே சிலர் தம் காலத்தைக்...
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் செயிட் ராட் அல் ஹூசைனை தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் சந்தித்து கலந்துரையாடவுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன்போது 29 ஆவது அமர்வில் ஸ்ரீலங்கா தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றங்கள் தொடர்பாக .நா...
வடக்கில் யுத்ததினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் மீள்குடியேற்றப்படாத நிலையில், இடம்பெயர்ந்த சிங்கள, முஸ்லிம் மக்களை அங்கு மீள்குடியமர்த்தும் அரசாங்கத்தின் யோசனைக்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக நாடாளுமன்றத்திலும் தமது எதிர்ப்பை வெளியிடவுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்தார். யுத்தத்தினால் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த...
எதிர்வரும் காலங்களில் தேசிய கீதம் தமிழில் பாடப்படவேண்டுமென்ற கோரிக்கையை முன்வைப்பதாக வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், இந்த நிகழ்வுக்கு நான் அழைத்துவரப்பட்டதன் பின்னர் இங்கே தமிழில் தேசிய கீதம் பாடப்பட்டது. இதனை நான் கேட்டுக்கொண்டிருந்தபோதே என்...
நோர்வே நாட்டின் பிரதிநிதிகள் குழுவொன்று யாழ் குடா நாட்டுக்கான விஜயத்தினை நேற்று முன்தினம்(01) மேற்கொண்டு இவ்விஜயத்தின் போது யாழ் பாதுகாப்பு படைகளின் கட்டளைத் தளபதியுடன் சந்திப்பு ஒன்றையும் மேற்கொண்டது. பலாலியில் அமைந்துள்ள யாழ் கட்டளைத் தளபதியின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நேற்று முந்தினம்(01) இடம்பெற்ற இந்நிகழ்விலேயே நோர்வேயின் வெளிவிவகாரங்களுக்கான இராஜாங்க செயலாளர் திரு.டோர் ஹட்ரெம் மற்றும் இலங்கைக்கான...
Loading posts...
All posts loaded
No more posts
