- Tuesday
- August 11th, 2026
வட மாகாண சபையினால் தயாரிக்கப்பட்ட அரசியல் தீர்வுத்திட்ட யோசனை, மக்களுக்கும் சென்றடையும் வகையில் நேற்றயதினம் (24) ஊடகவியலாளர்களுக்கு கையளிக்கப்பட்டது. புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கான வேலைத்திட்டங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற நிலையில், அதில் தமிழ் மக்களின் அபிலாஷைகளை உள்ளடக்கும் வகையிலான தீர்வுத்திட்ட யோசனையொன்று, கடந்த ஏப்ரல் மாதம் வட மாகாண சபையில் நிறைவேற்றப்பட்டிருந்தது. குறித்த தீர்வுத்திட்ட...
இலங்கையில் ஏற்ப்பட்ட யுத்தத்தினால் ஏற்ப்பட்ட பாதிப்பு கொஞ்சமல்ல. பல மக்கள் இதனால் புலம்பெயர்ந்து வெளிநாடுகளுக்கு சென்று விட்டனர். அந்த வகையில் இலங்கைக்கும், இந்தியாவுக்கும் நடுவில் அமைந்துள்ள தீவு புங்குடுதீவு. உவர் நிலமான இந்த தீவில் 1990 களில் 20 ஆயிரம் மக்கள் வாழ்ந்துள்ளனர். இங்குள்ள பலர் தங்கள் நிலங்களை விட்டு யுத்தத்தால் அங்கு வாழ முடியாத...
ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றமும் யாழ் இலக்கியக் குவியமும் இணைந்து நடாத்தும் வலைப்பதிவர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29-05-2016) மாலை 3.45 க்கு புதிய உயர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. மருத்துவர் சோதிதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் திரு.சித்தாந்தன் ( ஆசிரியர் மறுபாதி சஞ்சிகை) அவர்கள் “இணையத்தில் இலக்கியப்படைப்புகள்” என்னும் தலைப்பிலும், “வலைப்பதிவுத் தொழில் நுட்பங்கள்”...
யாழ். மாவட்டத்தில் அதிகரித்துள்ள வாள்வெட்டு உள்ளிட்ட குற்றச்செயல்கள் உடன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்படும் என பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தர உறுதியளித்துள்ளார். சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மீள்குடியேற்றம் புனர்வாழ்வு மற்றும் இந்து சமய அலுவல்கள் அமைச்சில் நேற்று செவ்வாய்க்கிழமை பொலிஸ் மாஅதிபர் பூஜித ஜயசுந்தரவிற்கும் அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் மற்றும் அகில இந்து மாமன்றத்தின் தலைவர் கந்தையா...
நாட்டில் பல பேரழிவுகளை இவ்வளவுகாலமும் பதுக்கிவைத்திருந்த கடவுளை பாரிய நிதிமோசடிகளை விசாரணைசெய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுமுன் நிறுத்தவேண்டுமென சிறீலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்ஷ தனது முகப்புப் புத்தகத்தில் பதிவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடும் இவ்வாறே அமைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார். கெலிஓயா கரமட ஸ்ரீ வேலுவனாராம விகாரையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர்...
அதிகாரப் பகிர்வினை அர்த்தமாக்கும் செயற்பாடுகளில் வடக்கு ஆளுநர் றெஜினோல்ட் குரே செயற்படும் நிலையில், அதற்குப் பாதகமாக யாரையும் கருத்துக்கள் எதனையும் வெளியிடவேண்டாம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண நகரின் அபிவிருத்தி தொடர்பில் நேற்று ஆளுநர் அலுவலகத்தில் கூட்டமொன்று நடைபெற்றது. இக்கூட்டத்தினை தமிழரசுக் கட்சியைத் தவிர அனைத்துக் கட்சிகளும் புறக்கணித்திருந்தன என்பதும்...
மிருகபலிக்கு தடை விதித்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தினால் விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையுத்தரவை இரத்துச் செய்ய முடியாது என மல்லாகம் நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.யூட்சன், நேற்று செவ்வாய்க்கிழமை (24) தெரிவித்தார். யாழ்ப்பாணத்திலுள்ள ஆலயங்களில் இடம்பெறும் மிருகபலியை தடுத்து நிறுத்துமாறு கோரி, இலங்கை சைவ மகா சபை, யாழ். மேல் நீதிமன்றத்தில் இவ்வருட ஆரம்பத்தில் மனுவொன்றை தாக்கல்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரும் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன், கிழக்கு மாகாண சபை அமர்வில், முதன்முறையாக நேற்றையதினம் பங்கேற்றார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான ஜோசப் பரராஜசிங்கத்தை படுகொலை செய்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்டு அவர், விளக்கமறியலில்...
முள்ளிவாய்க்காலில், மே 18ஆம் திகதி, முதன்முறையாக நினைவுதினம் அனுஷ்டிக்கப்பட்டது. அந்த நினைவுதின அனுஷ்டிப்பு, விடுதலைப் புலி அமைப்பின் உயிரிழந்த உறுப்பினர்களுக்கானது அல்ல என்று, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப்பட்டியல் எம்.பியான அங்கஜன் இராமநாதன் தெரிவித்தார். அது, யுத்தத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கான துக்க அனுஷ்டிப்பாகும் என்றும் அவர் கூறினார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில்,...
விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனின் இளைய புதல்வரான பாலச்சந்திரன், தமிழீழ தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளரான இசைப்பிரியா ஆகியோர் இறுதிப் போரின்போது படுகொலை செய்யப்பட்டனர் எனக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதில் பரணகம ஆணைக்குழுவுக்குச் சிக்கல்நிலை ஏற்பட்டுள்ளது. "இந்தச் சம்பவம் தொடர்பில் இதுவரை இருவரிடம் மாத்திரமே வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆணைக்குழுவைக் கலைப்பதற்குரிய நடவடிக்கையும்...
வட மாகாண சுகாதார அமைச்சரிடம் இருந்து புனர்வாழ்வு, மகளிர் விவகார துறைகளை தாம் திரும்பப் பெற்றுக்கொண்டமை குறித்து முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் விளக்கமளித்துள்ளார். குறித்த துறைகளை தம்மால் நிர்வகிக்க முடியாத நிலையிலேயே அவை சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடம் வழங்கப்பட்டன. இந்நிலையில் தற்போதுள்ள செயலாளர் மற்றும் அதிகாரிகள் இந்த துறைகளிலேயே நியமனம் பெற்றுள்ளமையால் அப்பதவிகளை தாம் மீண்டும் பொறுப்பேற்கிறார்...
இலங்கையில் தற்போது நிலவும் தென்மேற்குப் பருவப்பெயர்ச்சி காலநிலை மூன்று மாதங்களுக்கு நீடிக்குமென்பதால் நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யுமென்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சீரற்ற காலநிலையால் பாதிப்புக்குள்ளான மக்கள் இயல்பு வாழ்க்கையை நோக்கி படிப்படியாகத் திரும்பிக்கொண்டிருக்கின்றனர். வெள்ளநீர் வழிந்தோடும் நிலையில் வீடுகளைத் துப்புரவாக்கும் பணியில் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இலங்கை செஞ்சிலுவைச் சங்கமும் தமது தொண்டர்களை...
காணாமல்போனோர் தொடர்பான விவகாரத்தைக் கையாள்வதற்கு இலங்கை அரசு அமைக்கவுள்ள தனிப் பணியகம் குறித்தான ஆரம்பகட்ட வரைவுநகல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, அதிலுள்ள 90 சதவீதமான சிபாரிசுகளுக்கு அக்கட்சி பச்சைக்கொடி காட்டியுள்ளது. அத்துடன், சில பரிந்துரைகளை மாற்றியமைக்குமாறும் கூட்டமைப்பு யோசனை முன்வைத்துள்ளது என்று இராஜதந்திர வட்டாரங்களிலிருந்து அறியமுடிந்தது. இலங்கையில், இடம்பெற்றது எனக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும்...
வவுனியா உக்கிளாங்குளத்தில் பாடசாலை மாணவியான ஹரிஸ்ணவி (வயது - 13) பாலியல் துண்புறுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கடந்த நிலையில் இன்றுவரை விசாரணைகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன என்று தாயார் தெரிவித்துள்ளார். மருத்துவ அறிக்கைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர் எனவும், விசாரணைகள் பின் செல்வதால் குற்றவாளி தப்பிக்கக்கூடிய சந்தர்ப்பம் உள்ளது...
இந்து சமய அறநெறிக் கல்வி கொடி வாரத்தை ஆரம்பித்துவைத்து அதன் முதலாவது கொடியை சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு, புனர்வாழ்வளிப்பு, மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம்.சுவாமிநாதனுக்கு அணிவிக்கும் நிகழ்வு நேற்று செவ்வாய்க்கிழமை கொட்டாஞ்சேனை ஸ்ரீ பொன்னம்பலம்வானேஸ்வரர் கோவிலில் இடம்பெற்றது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் உமா மகேஸ்வரனினால் அதன் முதலாவது கொடி அமைச்சர்...
உலக வங்கியினால் 55 மில்லியன் அமெரிக்க டொலரில் யாழ் நகரை அபிவிருத்தி செய்வதற்கான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில், யாழ். மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் குறித்து நகர அபிவிருத்தி திணைக்களத்தினால், அரச மற்றும் பாராளுமன்ற, மாகாண சபை...
வடமாகாண சபையின் அரசியல் தீர்வு திட்ட முன்வரைபு ஊடகவியலாளர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்த வரைபு இன்று செவ்வாய்கிழமை காலை ஊடகவியலாளர்களிடம் வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்தினால் கையளிக்கப்பட்டுள்ளது. வடமாகாண சபையின் அரசியல் தீர்வு திட்ட வரைபு எதிர்கட்சி தலைவரிடம் கையளிக்கப்பட்ட நிலையிலேயே, ஊடகவியலாளர்களுக்கு அது தொடர்பில் தெளிவு படுத்தும் வகையில் கையளிக்கப்பட்டுள்ளது.
மாகாண மக்களுக்கும், மாகாண சபைக்கும் ஒத்துழைப்பு வழங்கவே முயற்சிக்கின்றேன். நான் வடமாகாணசபை தொடர்பாக விமர்சனங்களை முன்வைக்கவில்லை. இறுவட்டில் உள்ள ஒலிப்பதிவை கேட்டால் உண்மை விளங்கும் என வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் கூரே தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சிடம் இருந்து மீளப்பெறப்பட்ட 3 அமைச்சு துறைகளை வடமாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து முதலமைச்சர் உத்தியோகபூர்வமாக நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார்....
வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய தளபதிகளின் விபரத்தை இராணுவத்திடம் சரணடைய செல்ல முன்னரே புலிகளால் எரிக் சொல்ஹெய்ம் அவர்களுக்கு அனுப்பப் பட்டதாகவும், தற்போது இந்த விபரத்தை அண்மையில் ஐநா வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது. வெளியிடப்பட்ட 110 பேரின் பெயர் விபரங்கள் வருமாறு: ஆதவா ( செயற்பாடு தெரியாது) அகிலன் மாஸ்டர் (புலனாய்வுப் பிரிவு),...
யாழில் தொடர்சியாக அதிகரித்து வரும் பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடியை அதிகாரிகளும் மக்கள் பிரதிநிதிகளும் கண்டுகொள்ளாமல் உள்ளனர் என மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்ட பிரமிட் கட்டமைப்புசார் நிதி மோசடியொன்று யாழ்.குடாநாட்டில் நடைபெற்று வருவதாக பாதிக்கப்பட்ட நபர்கள் பலர் கவலை வெளியிட்டிருக்கின்றனர். தென்னிலங்கையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று இந்த நிதி...
Loading posts...
All posts loaded
No more posts
