- Tuesday
- August 11th, 2026
வறுத்தலைவிளான் அமெரிக்க மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலை நேற்று புதன்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரி.சித்தார்த்தன், வலிகாமம் கல்வி வலய பணிப்பாளர் எஸ்.சந்திரராஜா, வலி.தெற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் எஸ்.சுகிர்தன் ஆகியோர் திறந்து வைத்துள்ளனர். இந்த திறப்பு விழாவில் பெற்றோர்கள் அதிபர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். கடந்த வருடம்...
முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்யுமாறு கோரி பெற்றோர் நேற்று ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டம் நேற்று காலை 9.30 அளவில் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் ஆரம்பிக்கப்பட்டு வலயக்கல்வி அலுவலகம் வரை இடம்பெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெற்றோர், வலயக் கல்விப்பணிப்பாளரிடம் நிவர்த்தி செய்யப்பட வேண்டிய குறைபாடுகளை எடுத்துக் கூறியதுடன் மகஜர் ஒன்றையும் கையளித்தனர். அத்துடன்...
யாழ்ப்பாணம் இப்போது போதைப்பொருட்கள் கடத்தல் மையமாக மாற்றப்பட்டுள்ளது. தினமும் நூற்றுக்கணக்கான கிலோ கஞ்சா போதைப்பொருட்கள் இங்கு கடத்தி வரப்படுகின்றன. எனவே, இக் கடத்தலைத் தடுப்பதற்கு கரையோரங்களில் வாழ்கின்ற பொதுமக்களே எமக்கு கூடுதலாக உதவ வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்தார். யாழ். சென் பற்றிக்ஸ் வீதியில் உள்ள சென். றோக்ஸ் சனசமூக...
இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பது தான் முக்கியமானது. அதற்கு பின்னரே அபிவிருத்தி நடவடிக்கைகள். தீர்வு காணவேண்டும் என்பதற்காக தான் நாங்கள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுகின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் கடந்த 23 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை நடைபெற்ற போது, அதில் கலந்துகொண்டு...
குற்றச்செயல்கள் தொடர்பில் தமிழில் முறைப்பாடு செய்வதற்கு வழிசமைத்துக் கொடுக்குமாறு, அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன், பொலிஸ் மா அதிபர் பூஜித்த ஜயசுந்தவிடம் கோரிக்கையொன்றை விடுத்துள்ளார். அண்மைக் காலமாக, யாழ்ப்பாண மாவட்டத்தில் குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றன. இச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களைக் கைது செய்வதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் பொலிஸ் மா அதிபரிடம், அமைச்சர் கோரியுள்ளார்.
ஹொரவப்பொத்தான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரி (ஓ.ஐ.சி) யின் மகள், கலன்பிந்துனுவெவ பிரதேத்தில் வைத்து இனந்தெரியாத நபர்களினால் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பலியான பெண்ணின்,தாயும் காயமடைந்துள்ளதாகவும் அவர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
"தமிழக முதல்வராக மீண்டும் ஜெயலலிதா பதவியேற்றமை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களுக்கு மட்டுமன்றி இலங்கையில் உள்ள அனைத்துத் தமிழர்களுக்கும் சாதகமானது. எனவே, இலங்கையில் நீண்டகாலமாகத் தொடரும் இனப்பிரச்சினைக்கு நிரந்தர அரசியல் தீர்வு கிடைக்க மைத்திரி தலைமையிலான இலங்கை அரசுக்கும், நரேந்திர மோடி தலைமையிலான இந்திய மத்திய அரசுக்கும் ஜெயலலிதா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கவேண்டும்."- இவ்வாறு வலியுறுத்தியுள்ளது...
காங்கேசன்துறை நடேஸ்வர கல்லூரி, நடேஸ்வர கனிஷ்ட வித்தியாலயம் என்பன வரும் ஜூன் 2 ஆம் திகதி தொடக்கம் சொந்த இடத்தில் இயங்கும் என அதிபர் பொ.அமிர்தலிங்கம் தெரிவித்துள்ளார். யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து சுமார் 26 வருடங்களாக இயங்காது இருந்த இந்த இரு பாடசாலைகளும் தெல்லிப்பழையில் தற்காலிகமாக இயங்கி வந்தன. இந்நிலையில் கடந்த மார்ச் 12 ஆம்...
இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், பாதிப்புகளிலிருந்து விடுபட்ட பின்னர் இயற்கை அனர்த்தத்தை மறந்துவிடுகின்றனர் எனபதை சபையின் கவனத்துக்குக் கொண்டுவந்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அனர்த்தங்களைத் தவிர்க்க - பாதிப்புகளைக் குறைக்க - மக்களைப் பாதுகாக்க நிபுணர்களின் ஆலோசனைகளைப் பெற்று திட்டங்களை வகுக்கவேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். நாட்டின் நலன்கருதி இதுபோன்ற விடயங்களில் நாம் அனைவரும் ஒன்றாக...
வடக்கு மாகாணத்துக்கு பொருத்து வீடுகள் வழங்கப்படமாட்டாது என்றும், கல் வீடுகளே வழங்கப்படும் என்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாடாளுமன்றில் உறுதியளித்தார். இயற்கை அனர்த்தம் குறித்து நாடாளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விசேட அமர்வில் நடைபெற்ற சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தின்போதே இராஜாங்க அமைச்சர் மேற்கண்டவாறு உறுதியளித்தார். விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக்...
வௌ்ளம் மற்றும் மண் சரிவினால் பாதிக்கப்பட்ட அரச ஊழியர்களுக்கு மூன்று மாத சம்பளத்தை கடனாக வழங்குவதற்கு அவதானம் செலுத்தப்படுவதாக அரச நிர்வாக அமைச்சு தெரிவித்துள்ளது. இது சம்பந்தமாக நிதியமைச்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாக அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கூறினார். நேற்று பிற்பகல் குறித்த அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர்...
வௌ்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக முற்றாக மற்றும் பகுதியளவில் சேதமடைந்த வீடுகள், பொருட்களுக்கு ஒரு இலட்சம் ரூபா முதல் 25 இலட்சம் ரூபா வரை நஸ்டஈடு வழங்கப்படவுள்ளதால், தமது பகுதிகளுக்கு சொந்தமான கிராம சேவகர்களை சந்தித்து பதிவு செய்து கொள்ளுமாறு அரசாங்கம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் தர்ஷணி...
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் புகைப்படத்தை தனது முகப்புப் புத்தகத்தில் பதிவேற்றிய வந்தாறு மூலையைச் சேர்ந்த முகாமைத்துவ பீடம் 2ஆம் வருட மாணவன் மீது சிங்கள மாணவர்கள் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். லட்சியமூர்த்தி சுமேஸ்காந் என்ற 23 வயதுடைய மாணவன் மீது சிங்கள மாணவர்கள் சிலர் செவ்வாய்க்கிழமை மாலை தாக்குதலை நடாத்தியுள்ளனர். தாக்குதலுக்குட்பட்ட குறித்த மாணவன் செங்கலடி வைத்திசாலையில்...
முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் முக்கிய சாட்சிகளில் ஒருவரான வைத்தியர் வரதராஜனுக்கு அமெரிக்கா அரசியல் தஞ்சம் வழங்கியுள்ளது. வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொன்று குவிக்கப்பட்டனர். முள்ளிவாய்க்கால் யுத்தம் நடைபெற்றவேளை அங்குள்ள வைத்தியசாலைகளில் பணியாற்றிய வைத்தியர்களுள் வைத்தியர் வரதராஜனும் ஒருவர். இறுதிப்போர் நடைபெற்றுக்கொண்டிருந்த சமயம் மே மாதம் 15ஆம் திகதி இராணுவத்தினரிடம் சரணடைந்த வைத்தியர் வரதராஜன்...
உயர்நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்துள்ள வழக்கொன்றில் தன்னை ஆஜராகுமாறு அழைப்பாணை கிடைத்துள்ளதாகத் தெரிவித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இது நாடாளுமன்ற சிறப்புரிமையை மீறும் நடவடிக்கையாகும் என்றும் சபாநாயகரின் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்த முடியாதென்றும் கூறினார். நாட்டில் நிலவிய அசாதாரண காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட நாடாளுமன்ற அமர்வு, இன்று பிற்பகல் 1 மணிக்கு, சபாநாயகர்...
கணவரை பொல்லினால் தாக்கி கொலை செய்து தனது பிள்ளைகள் இரண்டினை வீட்டில் தனியாக விட்டு தப்பி சென்ற பெண்ணை தேடி காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கடந்த 19 ஆம் திகதி இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறின் பின்னர் குறித்த பெண் கணவரை இவ்வாறு தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் அவர் வீட்டை விட்டு தப்பி சென்றுள்ளார்.தமது தந்தை இறந்ததை அறியாத...
மேல், வட மேல், தென், மத்திய மற்றும் சப்ரகமுவ ஆகிய மாகாணங்களில் மழை பெய்யலாம் என வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 02.00 மணிக்குப் பின்னர் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இதேவேளை, புத்தளம் தொடக்கம் மன்னார் மற்றும் காங்கேசன்துறை...
அராலி மாவத்தை விளையாட்டு மைதானத்திலுள்ள கிணற்றிலிருந்து செவ்வாய்க்கிழமை (24) மாலை, 16 வயது மாணவனில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸார் தெரிவித்தனர். இம்முறை கல்வி பொதுத் தராதர சாதரண தர பரீட்சைக்கு தோற்றவிருந்த, அராலி தெற்கைச் சேர்ந்த ஜெ.ஜெசிந்தன் என்ற மாணவனே சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இம்மாணவன், கடந்த 23 ஆம் திகதி வீட்டைவிட்டுச் சென்றிருந்த நிலையில்...
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் தந்தையார் சின்னத்துரை சிவஞானம், இன்று புதன்கிழமை காலமானார். மண்டைதீவு அல்லைப்பிட்டியில் பிறந்த இவர் 1950களில் வன்னியை நோக்கிய படித்தவாலிபர் திட்ட குடியேற்றத் திட்டங்களினூடாக கிளிநொச்சி வட்டக்கச்சியில் குடியேறினார். நெடுந்தீவைப் பூர்வீகமாகக் கொண்ட கந்தையா கதிராசிப்பிள்ளையின் மகளாகிய இலட்சுமியை வாழ்க்கைத் துணையாக ஏற்று வட்டக்கச்சியில் வாழ்ந்து வந்தார். மனைவியின் பிரிவிற்கு பின்னும்...
தமிழ் மக்கள் பேரவை புலம் பெயர் தமிழ் மக்களுக்கு ஒரு வேண்டுகோள் ஒன்றினை விடுத்துள்ளது. அதன் முழுவடிவம் வருமாறு.. புலம்பெயர் உறவுகளுக்கு தாயகத்திலிருந்து ஒரு அன்பான வேண்டுகோள். முள்ளிவாய்க்காலில் தமிழின அழிப்பின் பின் தாயக அரசியல் ஒரு சரணாகதி அரசியலாக மாறி வந்த தருணத்தில், தமிழ் இனத்தின் இருண்ட எதிர்காலம் கண்களில் தெரியவே தாயகத்தில் தமிழ்...
Loading posts...
All posts loaded
No more posts
