- Tuesday
- August 11th, 2026
இளவாலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கடந்த வருடம் பெண்ணொருவரின் தங்கச்சங்கிலியை அறுத்தெடுத்த ஏழாலை பகுதியைச் சேர்ந்த நபருக்கு, 1 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து, மல்லாகம் மாவட்ட நீதிமன்ற முன்னாள் நீதிவானும் தற்போதைய யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், தீர்ப்பளித்தார். அத்துடன், முதலாவது திருட்டு குற்றச்சாட்டுக்கு 1,000 ரூபாய் அபராதம் விதித்தார். இரண்டாவது...
அரநாயக்கவில் ஏற்பட்ட மண்சரிவால் உயிரிழந்தவர்கள், நாட்டின் ஏனைய பகுதிகளில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வடமாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அனுதாபம் தெரிவித்தார். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடமாகாண சபையில் நேற்று வியாழக்கிழமை (26) நடைபெற்றது. இதன்போது, தமிழக முதல்வராக மீண்டும் தெரிவு செய்யப்பட்ட ஜெயலலிதாவுக்கு, முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வாழ்த்துக் கூறினார்....
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் ஒரு வருடம் புனர்வாழ்வு பயிற்சிகளை நிறைவு செய்த முன்னாள் போராளிகள் 8 பேர் நேற்று வியாழக்கிழமை அவர்களின் குடும்பத்துடன் இணைத்துவைக்கப்பட்டனர். இந்நிகழ்வில் புனர்வாழ்வு ஆணையாளர் நாயகப் பணிமனை புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் எல்.டீ. எம். சி. ஜானக ரத்னாயக்கா, வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு பணிப்பாளர் எம். எ. ஆர்....
சரித்திர பிரசித்தி பெற்ற நயினாதீவு ஸ்ரீ நாக பூசணி அம்மன் ஆலயத்தினது வருடாந்த மகோற்சவம் எதிர்வரும் மாதம் 6 ஆம் திகதி திங்கட்கிழமை நண்பகல் 12 மணியளவில் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து பதினாறு தினங்கள் உற்சவங்கள் ஆலயத்தில் இடம்பெறவுள்ளது. 14 ஆம் திகதி செய்வாய்க்கிழமை 108 சங்குகளால் அம்பாளுக்கு பால் அபிஷேகமும் 15 ஆம் திகதி...
நாடளாவிய ரீதியிலுள்ள பல்கலைக்கழகங்களின் 80,000 ற்கு மேற்பட்ட மாணவர்களுக்கு மடி கணனிகளை வழங்கும் அரசாங்கத்தின் செயற்திட்டம் நேற்று(26) பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ நிகழ்வில் மாணவர்களுக்கு மடிகணனிகள் பிரதமரால் கையளிக்கப்பட்டன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் வரவு செலவு திட்ட வாக்குறுதிக்கமைய...
பெட் ஸ்கேன் (PET scan) இயந்திரத்தைக் கொள்வனவு செய்ய, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை மக்களின் உதவியை நாடத் தீர்மானித்தது. இதன்பொருட்டு மனுஷத் தெரணவுடன் கைகோர்த்த குறித்த வைத்தியசாலையின் முயற்சிகளுக்கு சிறந்த பலன் கிட்டியுள்ளது. குறிப்பாக, தன் பெயரைக் குறிப்பிட விரும்பாத மனிதநேயம் மிக்க ஒருவர் சுமார் மூன்றரை கோடி ரூபாயை இதற்காக வழங்கியுள்ளமை விஷேட அம்சமாகும்....
இம்முறை (2016ம் ஆண்டுக்கான) கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை விண்ணப்பங்களை அனுப்புவதற்கான காலஎல்லை நீடிக்கப்பட்டுள்ளது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தங்கள் காரணமாகவே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக, பரீட்சைகள் ஆணையாளர் டப்ளியூ.எம்.என்.ஜே.புஸ்பகுமார வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, குறித்த கால எல்லை எதிர்வரும் (ஜூன்) 10ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன், தி.மு.க தலைவர் கருணாநிதி 13-வது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து சம்பந்தன் அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவொரு சாதாரண சாதனையல்ல. எல்லோராலும் பாராட்டப்பட வேண்டிய ஒரு சாதனையாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். மேலும், ஆட்சியை கைப்பற்றாவிட்டாலும் பலமான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றிருக்கின்றீர்கள்....
இலங்கையில் சிறுநீரக நோயாளிகளுக்கான சிறப்பு வைத்தியசாலையொன்றை நிர்மாணிக்கும் பொருட்டு, 600 மில்லியன் யுவான்களை (சீன பணம்) சீனா வழங்கியுள்ளது. நேற்று குறித்த நிதி வழங்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான இருதரப்பு ஒப்பந்தத்தில் சீனாவிலுள்ள இலங்கைத் தூதுவர் கருணாசேன கொடித்துவக்கு இலங்கையின் சார்பாக கையெழுத்திட்டுள்ளார். 2015ம் ஆண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் சீன ஜனாதிபதி ஷீ ஜின்...
பாடசாலையில் கறாத்தே கற்பதற்கு பெற்றோர் அனுமதிக்காமையால் மாணவன் ஒருவன் தற்கொலை செய்ய முயன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தரம் 6 கல்வி கற்கும் யாழ்ப்பாணம், அளவெட்டி தெற்கை சேர்ந்த யதீஸ் தேனினியன் எனும் மாணவனே இவ்வாறு தற்கொலை செய்து உயிரிழந்தவராவர். குறித்த மாணவனை பாடசாலையில் கறாத்தே பயிலுவதற்காக பெற்றோரிடம் கடிதம் வாங்கி...
நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை(24-05-2016) கிழக்குப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட 1ம் வருடத்தில் கல்வி பயிலும் இலட்சியமுர்த்தி சுமேஸ்காந்த் என்ற மாணவர் மீது சிங்கள மாணவர்கள் கண்முடித்தனமாக தாக்குதல் நடாத்தியுள்ளனர். தாக்குதலில் காயமடைந்த குறித்த மாணவர் மட்டக்களப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த யுத்த காலத்தில் வாகரையிலும், முள்ளிவாய்க்காலிலும் இன அழிப்புக்கு உள்ளான மக்களை நினைவுகூரும் செயற்பாட்டில்...
தமக்கு நிரந்தர நியமனத்தை வழங்குமாறு கோரிக்கை விடுத்து சமூக சுகாதாரத் தொண்டர்கள, வடமாகாண சபையின் முன்பாக இன்று வியாழக்கிழமை (26) ஆர்ப்பாட்டம் செய்தனர். வடமாகாண சபையின் மாதாந்த அமர்வு நடைபெற்ற வேளையில் அங்கு வந்த முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்களின் கவனத்தை ஈர்க்கும் பொருட்டு அவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். ஆர்ப்பாட்டம் தொடர்பில் கருத்து...
கணவனின் அம்மாவுடைய (மாமி) ஏ.டி.எம் அட்டையை திருடி, 1 இலட்சத்து 89 ஆயிரம் ரூபாய் பணத்தை வங்கியில் இருந்து எடுத்த மருமகளை நாளை வெள்ளிக்கிழமை (27) வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் பெருமாள் சிவகுமார், புதன்கிழமை (25) உத்தரவிட்டார். பருத்தித்துறை, தும்பளையிலுள்ள கணவனின் தாயார் வீட்டுக்குச் கடந்த 18 ஆம் திகதி...
உடுப்பிட்டி கிழக்குப் பகுதியில் உள்ள வீடொன்றில் வசித்துவந்த வயோதிபப் பெண்ணொருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அதேபகுதியைச் சேர்ந்த, 32 வயதான, ஒரு பிள்ளையின் தந்தையே சந்தேகத்தின்பேரில் நேற்றுக் காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர். சுப்பிரமணியம் அசுபதி (வயது 64) என்ற வயோதிப் பெண், கடந்த...
யாழ். மாவட்டத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பிரதி பொலிஸ் மா அதிபர் இன்று தனது கடமைகளை உத்தியோகபூர்வாமாக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். மாத்தல மாவட்டத்தின் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக இருந்த சஞ்சீவ தர்மரத்தன யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக பதவியுயர்வு பெற்றுள்ளார். யாழ். பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் தனது கடமைகளை பொறுப்பேற்ற பிரதிப்...
குருணாகல் மாவட்டத்தில் வாரியபொல பிரதேசத்தில் ஓட்டோ சாரதி ஒருவருக்கும், யுவதி ஒருவருக்கும் இடையில் இடம்பெற்ற சண்டை முகப்புத்தகம் உள்ளிட்ட சமூக இணைப்பு தளங்களில் அதீத பிரசித்தி அடைந்து வருகின்றது. சேட்டை செய்த ஓட்டோ சாரதியை செருப்பால் அடிக்கின்றார் இந்த யுவதி. இச்சண்டைக்கு வாரியபொல சண்டை – 2 என்று ஊடகவியலாளர்கள் பெயரிட்டு உள்ளனர். ஏற்கனவே சில...
தொடர்ந்து 3 வருடங்களாக யாழ் இந்துக்கல்லூரியின் 2005 உயர்தர மாணவர்கள் பல கல்விக்கான செய்ற்றிட்டங்களை குறிப்பாக வன்னிப்பகுதியில் யுத்ததினால் கடுமையாக பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மற்றும் பாடசாலைகளுக்கு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் 2016ம் ஆண்டுக்கான கல்விக்கான செயற்றிட்டத்தின் முதற்க்கட்டமாக கடந்த மாசி (09.02.2016)மாதம் தெரிவு செய்யப்பட்ட உயர்தர மற்றும் சாதாரணதர மாணவர்களுக்கான கடந்த கால வினாத்தாள்கள்...
இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான பஸ் கடலேரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட 14 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். யாழ். மண்டைதீவுக்கு அண்மித்த கடலேரி பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த விபத்துச் சம்பவத்தில் சாரதி உட்பட பஸ்ஸில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளனர்....
காணாமல் போனோர் தொடர்பான அலுவலகம் ஒன்றை நிறுவ அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட இந்த யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளதாக, உள்விவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கடந்த காலங்களில் காணாமல் போனதாக கூறப்படும் அல்லது கண்டுபிடிக்க முடியாதவர்கள் என கருதப்படும் நபர்கள் பற்றிய தகவல்களை அவர்களது உறவினர்கள் பெற்றுக் கொள்வதே, இதன் நோக்கம் என, குறித்த...
தீவிர வானிலை மாற்றங்களால் பல பயிர்கள், விலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு விஷத்தன்மை கொண்டதாக மாறி வரும் நிலை அதிகரித்து வருவதாக ஐ.நா எச்சரித்துள்ளது. வறட்சி மற்றும் அதிகப்படியான வெப்ப நிலை ரசாயன கலவைகளின் குவிப்புக்கு வழிவகை செய்கிறது என வெளிப்படுத்திய ஆய்வு ஒன்றை சுட்டிக்காட்டி ஒரு புதிய அறிக்கையை ஐ.நா வெளியிட்டிருக்கிறது. குறிப்பாக கோதுமை, சிறு...
Loading posts...
All posts loaded
No more posts
