உலகிலே அதிக தற்கொலை இடம்பெறும் நாடுகளில் இலங்கை நான்காவது இடத்தில்!

தற்கொலை செய்துகொள்வோர் குறித்து உலக நாடுகளின் வரிசையில் இலங்கை நான்காவது இடத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச நாடுகளில் காணப்படும் மக்கள் தொகைக்கேற்ப ஒவ்வொரு நாட்டிலும் இடம்பெறும் தற்கொலை வீதம் ஒரு இலட்சத்திற்கு 11 வீதமானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் இதன் வீதம் ஒரு இலட்சம்பேருக்கு 28.8 வீதமானவர்கள்...

வடக்கில் இராணுவத்தினர் நிலைகொள்வதையே சுமந்திரனும் விரும்புகின்றார்!

வடக்கில் விசேட அதிரடிப்படையினரை பணியில் அமர்த்துவது தொடர்பாக வடக்கில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தவண்ணமேயுள்ளன. சில கட்டுக்கடங்காத நிலமை ஏற்படும்போது விசேட அதிரடிப்படையினரை பணியில் அமர்த்துவதில் தவறில்லையென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார். குற்றங்களைக் கட்டுப்படுத்துவதற்கு வடக்கில் பணியில் விசேட அதிரடிப்படையினரை பணிக்கமர்த்துமாறு யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்...
Ad Widget

உள்ளக கணக்காய்வு பிரிவை தவிர்ந்து எஞ்சியவர்கள் சோம்பறிகள்

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தின் உள்ளக கணக்காய்வு பிரிவுடன் சேர்த்து சில பிரிவுகள் மாத்திரமே வினைத்திறனுடன் செயற்படுவதாகவும் மாவட்டச் செயலக விளையாட்டுப் பிரிவு மற்றும் சமய கலாசாரப் பிரிவு என்பன படுமோசமான செயற்பாடுகளை வெளிப்படுத்தியுள்ளதாகவும், மாவட்டச் செயலகத்தின் வினைத்திறன் தொடர்பில் மதிப்பீடு செய்யும், செயற்றிறன் முகாமைத்துவ விளக்கப்படத்தின் மூலம் அறியமுடிகிறது. ஜப்பானின் 5 எஸ் முறையை பின்பற்றியமை,...

வெளிநாடுகளில் இறந்த நபர்களின் நெருங்கிய உறவினர்களைத் தேடுதல்!

லெபனான், தாய்லாந்து, சவூதி அரேபியா, ஜோர்தான் ஆகிய நாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் பிரிவிற்கு பின்வரும் பணிக்கமர்த்தப்பட்டுள்ள நபர்கள் வெளிநாடுகளில் இறந்துள்ளனர் என அறிவித்துள்ளன. 1) திருமதி. களுவாகே அசிலின் (கடவுச்சீட்டு இல N 3662097) அல்லது டிங்கிரியலாகே அசிலின் - லெபனான் 2) திருமதி. ஹேவா தொண்டில்லேகே அசிலின் (கடவுச்சீட்டு...

நம்பிக்கையில்லாப் பிரேரணை தோல்வி-மஹிந்த, த.தே.கூ வாக்களிக்கவில்லை

நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 94 மேலதிக வாக்குகளால் தோல்வியடைந்துள்ளது. குறித்த, பிரேரணைக்கு எதிராக 145 வாக்குகளும், ஆதரவாக 51 வாக்குகளும் கிடைக்கப் பெற்றன. 28 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினரால், குறித்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட்டது. இந்தநிலையில், இந்தப் பிரேரணை மீதான...

வித்தியாவின் தாயை மிரட்டியவர்களிற்கு விளக்க மறியல் நீடிப்பு

புங்குடுதீவு மாணவியின் தாயாரை மிரட்டிய இரு பெண்களையும் எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவு இட்டுள்ளார். ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் நேற்று புதன்கிழமை முற்படுத்திய வேளையிலையே அவர்கள் இருவரையும் எதிர்வரும் 22ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு இட்டார். கடந்த...

அதிகரிக்கும் எயிட்ஸ்!! சுகாதார அமைச்சு எச்சரிக்கை!

நாட்டிலுள்ள இளைஞர்கள் மத்தியில் எச்.ஐ.வி தொற்று அதிகரித்துள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 15 தொடக்கம் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களே இவ்வாறு அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக, பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் ஒழிப்பு வேலைத்திட்டத்தின் பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியின் முதல் ஐந்து மாதங்களில் எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 135 பேர்...

மக்களை அணிதிரட்டி தீர்வுகளுக்காகப் போராடுங்கள் பொதுச்சபைக் கூட்டத்தில் டக்ளஸ் வேண்டுகோள்

தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளவும், கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் மக்களை அணிதிரட்டி போராடுங்கள் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பொதுச் சபைக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார். கொழும்பிலுள்ள ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அலுவலகத்தில் நேற்று (08.06.2016) நடைபெற்ற பொதுச்சபைக் கூட்டத்தில் கட்சியின் நிகழ்கால மற்றும் எதிர்கால அரசியல் செயற்பாடுகள்...

ஐ.நாவிற்கு வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவைக்கு அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமை குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அதிருப்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் அடுத்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 32 ஆவது அமர்வில் கலந்துகொள்வதற்கென தமது பிரதிநிதிகள் ஜெனிவா செல்லவுள்ளதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். இந்த விஜயத்தின் போது ஐ.நா...

யாழ்.பல்கலைக்கழக வளாகத்துக்குள் பெறுமதியான மரங்களை வெட்டிச் சாய்த்த பேராசிரியர்!

இயற்கை வளங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய உத்தரவையும்பொருட்படுத்தாமல் யாழ்.பல்கலைக்கழக வளாகத்திற்குள் இருந்த பெறுமதியான மரங்கள் வெட்டிச் சாய்க்கப்பட்டுள்ளன. இந்த மரஅழிப்பை தடுத்து நிறுத்தவேண்டும் என யாழ்.பல்கலைக்கழக சமூகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பலா, தென்னை, வேம்பு ஆகிய மரங்கள் பெரு விருட்சமாக நீண்ட காலமாக ஒரு சோலையாக இந்த பரமேஸ்வரன் ஆலயம் காட்சியளித்தது....

மக்களைப் பாதுகாக்கவே வடக்கில் இராணுவம்!

எதிர்பாராத விதமாக பிரச்சினைகள் ஏற்படுமிடத்து, வடக்கு மக்களுக்கு பாதுகாப்பதற்காகவே அங்கு இராணுவ முகாம்கள் அகற்றப்படாமல் உள்ளதாக இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் ஜயநாத் ஜயவீர தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, வடக்கிலுள்ள இராணுவ முகாம்களை அகற்ற வேண்டுமென, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்திருந்தமை குறித்து...

உடலில் செல் துகள்களுடன் வாழும் மக்களுக்கு உதவி!

யுத்த காலத்தில் குண்டுத்தாக்குதல்களுக்கு இலக்காகி உடலில் செல் துகள்களுடன் வாழும் மாணவ மாணவியர், இளைஞர்கள், யுவதிகள் மற்றும் முதியவர்களுக்கு அரசாங்கம் உதவி வழங்குமென பிரதமர் ரணில்விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளார். நேற்று காலை 9.30 மணிக்கு நாடாளுமன்றம் கூடியவேளையில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அண்மையில் உடல் அவயமொன்றிலிருந்த செல் துகள்களை ஒரு பாடசாலை மாணவன் 5...

தனது குற்றங்களை மறைத்து தன்னைப் புனிதராகக் காட்டிக்கொள்ளும் சந்திரிக்கா!

காணாமல் போனவர்கள், கடந்த்தப்பட்டவர்கள் தொடர்பாக இராணுவத்தினருக்கெதிராக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டை இராணுவம் ஏற்றுக்கொள்ளும் என தான் நம்பவில்லையென முன்னாள் அதிபர் சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார். கொழும்பில் கடந்த புதன் கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில், காணாமல் போனவர்கள், கடத்தப்பட்டவர்கள் தொடர்பாக சிறீலங்கா இராணுவம் ஒத்துக்கொள்ளும் என நான் ஒருபோதும் நம்பவில்லை....

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரை அனுமதியின்றி அழைத்துச் சென்ற பொலிஸார்

யாழ். நகரப் பகுதியில் உள்ள நகைக் கடையின் உரிமையாளரினால் தாக்குதலுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வரும் ஊழியர், வைத்தியசாலையின் அனுமதியுமின்றி பொலிஸாரால், பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் என' யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஸ்ரீ.பவானந்தராஜா தெரிவித்தார். யாழ். நகரப் பகுதியில் இயங்கும் பிரபல நகைக்கடை உரிமையாளரின் தாக்குதலுக்குள்ளான ஊழியர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டார்....

துரையப்பா விளையாட்டரங்கத்தை மோடி திறந்துவைப்பார்

மீளவும் செப்பனிடப்பட்ட யாழ். துரையப்பா விளையாட்டரங்கத்தை, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜானதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து திறந்துவைப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வீடியோ வசதியுடனேயே அவர், இந்த வைபவத்தில் பிரதமர் நரேந்திர மோடி இணைந்துகொண்டு திறந்துவைக்கவுள்ளார். இந்த வைபவம் எதிர்வரும் 18ஆம் திகதியன்று இடம்பெறவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வைபவத்தில் பிரதம அதிதிகளாக பங்கேற்கும் இந்தியப்பிரதமர்...

தமிழ் பேசும் அலுவலர்களை எச்சரிக்கிறார் வடக்கு முதல்வர்!

அரசியலை மறந்து சிங்கள மொழி ஆற்றல் விருத்தியை மேற்படுத்த வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். சிங்கள மாணவர்கள் கட்டாயமாக தமிழ் மொழியினை கற்க முன்வந்துள்ளனர். விரைவில் தமிழ் பேசும் சிங்கள அலுவலகர்கள் வட, கிழக்கு மாகாணங்களுக்கு வர இருக்கின்றனர். அதனால் முன்னெச்சரிக்கையாக வட,...

வடக்கு சுகாதாரத் தொண்டர்கள் முதலமைச்சர் அலுவலகத்தின் முன் கவனயீர்ப்பு

வட மாகாண சமூக சுகாதாரத் தொண்டர்கள் வட மாகாண முதலமைச்சர் அலுவலகத்தின் முன்பாக இன்று புதன்கிழமை காலை முதல் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். நியமனம் வழங்கலின்போது தாங்கள் புறக்கணிக்கப்பட்டதாகக் கூறி வடமாகாணத்தைச் சேர்ந்த சமூக சுகாதாரத் தொண்டர்கள் கடந்த சில மாதங்களாக தொடர் கவனயீர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர். கடந்த வடமாகாண சபை அமர்வின்போது வடமாகாண சபை...

கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் கலைமகள் திருவுருவசிலை திறந்து வைப்பு

யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையின் கலைமகள் திருவுருவசிலையை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்தார். இதற்கான நிகழ்வு இன்று புதன்கிழமை வடக்கு முதல்வரது தலைமையில் நடைபெற்றது. இதன்போது நிகழ்வில் விருந்தினர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

உடுப்பிட்டியில் சிறப்பு மருத்துவ முகாம்

உடுப்பிட்டி நலன்புரிச் சங்கத்தின் ஆதரவில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தினரால் சிறப்பு மருத்துவ முகாம் ஒன்று வரும் 10.06.2016 வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு உடுப்பிட்டி பொது நோக்கு மண்டபத்தில் (உடுப்பிட்டி வாசிகசாலைச் சந்தி, சமுர்த்தி வங்கி அருகில்) ஆரம்பமாகி இடம்பெறவுள்ளது. யாழ்போதனா வைத்தியசாலையின் நீரிழிவு சிகிச்சை நிலையத்தால் நடாத்தப்படும் இந்த சிறப்பு...

யாழில் விஞ்ஞான ஆசிரியரினால் மின்சாரம் கண்டுபிடிப்பு!!

நீர்வேலி றோமன் கத்தோலிக்க பாடசாலை விஞ்ஞான ஆசிரியரினால் வாழைத்தண்டில் இருந்து மின்சாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. LED மின்குமிழ்களைப் பயன்படுத்தி வாழைத்தண்டில் உள்ள வாழைக்கயருடன் செப்புத்தகடுகள் தாக்கமடைந்து அதில் மின்சாரம் உருவாகுவது ஆசிரியரினால் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. திரு.ஆறுமுகம் பொன்வாசன் என்ற விஞ்ஞான பாட ஆசிரியராலேயே இக்கண்டு பிடிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts