- Sunday
- October 4th, 2026
யாழ் பகுதியில் வசித்து வரும் புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளிகளின் சமூக மற்றும் பொருளாதார அந்தஸ்தை முன்னேற்றும் வகையில் 7 ஆவது இலங்கை இராணுவ பெண்கள் படையணியினால் ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டாவது கட்ட சமூக பொருளாதார நலன் ஒருங்கிணைப்பு செயலமர்வு அண்மையில் (4) கோப்பாய் கிருஸ்த்துவ கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வானது இராணுவ பெண்கள் படையினர் மற்றும்...
2016 ஆம் ஆண்டுக்கான உலக சமாதான சுட்டியில் இலங்கை இருந்த இடத்தினை விட 18 இடங்களால் முன்னேறி 97 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதன் மூலம் இலங்கை உள்ளக மற்றும் வெளியக சமாதானத்தினை பேணுவதில் ஒரு நாடு என்ற வகையில் தனது பலத்தினை நிரூபித்துள்ளது. சிட்னி மற்றும் நியூயோர்க் நகரங்களை மையமாக கொண்ட சமாதானம் மற்றும்...
இலங்கைக்கான பிரித்தானிகர் உயர் ஸ்தானிகர் ஜேம்ஸ் டொரிஸ் (James Duaris) உள்ளிட்ட இருவர் அடங்கிய குழுவினர் நேற்று யாழ் மாவட்டத்திற்கு உத்தியபூர்வ விஜயம் ஒன்றை மேற் கொண்டிருந்தனர். இதன்போது இவர் யாழ் மாவட்ட செயலகத்திற்கு விஜயம் மேற்கொண்டு மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த யாழ்...
யுத்தத்தினால் வீடுகளை இழந்த வட கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் மக்களுக்காக கட்டப்படவுள்ள 65,000 விடூகளை பெற்றுக் கொள்வதற்கு 90,000 க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக மீள் குடியேற்ற மற்றும் சிறைச் சாலைகள் தொடர்ப்பான அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட வட கிழக்கு மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் நடைபெற்ற விவாதமொன்றில் உரையாற்றிய போது...
சாவகச்சேரி நீதிமன்றினால் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லண்டன் பிராஜா உரிமைபெற்ற நபர் மீது, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் கம்பியாலும் தடியாலும் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது என மனித உரிமைகள் ஆணையகத்தின் யாழ்ப்பாணக் கிளை அலுவலக இணைப்பாளர் ரி.கனகராஜ், இன்று வெள்ளிக்கிழமை (10) தெரிவித்தார். தாக்குதலுக்குள்ளானவர் காயங்களுக்கு உள்ளாகி யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த திங்கட்கிழமை...
எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமாகிய இரா.சம்பந்தன் அவர்கள் பாரளுமன்றில் சமர்ப்பித்த பிரேரணை முழுமையாக 2016 ஜூன் மாதம் 9ஆம் திகதி பாராளுமன்றம் ஒத்திவைப்பு வேளையில் பொதுமக்கள் முக்கியத்துவம் வாய்ந்த விடயம் ஒன்று தொடர்பான முன்னகர்வு விண்ணப்பத்தைச் சமர்ப்பிப்பதற்கான அறிவித்தலொன்றை இத்தால் தருகின்றேன். இந்த நாட்டில் ஆயுதக் கலவரம் ஒன்று முடிவடைந்து ஏழு வருடங்கள்...
புதிய அரசியல் யாப்பு மூலம் எதிர்காலம் வரை நீடிக்க கூடிய வகையிலான, நிதானமான தீர்வினையே தமிழ் மக்கள் எதிர்ப்பார்கின்ற படியால், அத் தீர்வினை பெற்றுக்கொள்ளக் கூடிய வழிகளை அரசாங்கம் வகுக்க வேண்டுமென பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌவ்ரிஸ்ஸிடம் (James Duaris ) வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார். யாழிற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் இன்று...
யாழ். மாவட்டத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக தமிழரான கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தனது பதவியை நாளை காலை பொறுப்பேற்கவுள்ளார். யாழ்ப்பாணத்தில் அண்மைக் காலமாக நிலவிவரும் குற்றச் செயல்களை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் என்ற கோரிக்கைகள் வலுவடைந்துள்ள நிலையில், யாழ்.மாவட்டத்திற்கு தமிழரான கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக் கப்பட்டுள்ளார். இலங்கை முழுமைக்குமான ஒழுக்கம்...
யாழில் உள்ள இளைஞர்களை அரசியல்வாதிகள் சிலர் அடிதடியில் ஈடுபடுவதற்கு பயன்படுத்தி வருவதாக தெரிவித்த யாழ்.பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சி.ஐ.வீரசிங்க பெற்றோர்களால் கவனிப்பின்றி வளர்க்கப்படும் பல இளைஞர்களை அரசியல்வாதிகள் தூண்டி விடுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார். யாழ்ப்பாணம் கொக்குவில் கிழக்கு ஜே/123 கிராம சேவையாளர் பிரிவில் நேற்றைய தினம் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையில் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு...
நல்லூர் பிரதேச சபையின் 10 மில்லியன் ரூபாய் நிதியிலிருந்து திருநெல்வேலி பொதுச்சந்தையின் வாகனத்தரிப்பிடம் அமைத்தல் மற்றும் கொக்குவில் பொதுநூலகம் அபிவிருத்தி பணிகள் என்பன மேற்கொள்ளப்படவுள்ளன. திருநெல்வேலி சந்தைக் கட்டடத்தின் தரைப் பகுதியிலுள்ள வாகனத் தரிப்பிடம் சிறிய இடத்தில் வசதியீனங்களுக்கு மத்தியில் இயங்கி வருகின்றது. நாளாந்தம் மோட்டார் சைக்கிள், சைக்கிள் போன்ற பெருந்தொகையான வாகனங்கள் அங்கு நிறுத்தப்படுவதால்...
ஜனாதிபதி மாளிகை மக்கள் பார்வைக்கு திறக்கப்பட்டுள்ளமை நீங்கள் அறிந்த தே. இதனை ஜனாதிபதியே திறந்து வைத்துள்ளார். இந்நிலையில் அதை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கும் நிகழ்வில் எதிர்கட்சித் தலைவர் சம்பந்தனும் கலந்துகொண்டிருந்துள்ளார். நிகழ்வின் போது சம்பந்தனின் தோளில் கையை போட்டவாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கதைத்துக்கொண்டிருந்துள்ளார். இதன்போது, அங்கு நிர்மாணிக்கப்பட்டிருக்கும் நிலக்கீழ் அறைக்கு செல்லவில்லையா என ஜனாதிபதியிடம்...
சுன்னாகம் நகரப் பகுதியில் நகைக் கடையொன்றின் உரிமையாளராகவுள்ள குடும்பஸ்தரொருவர் பொது அமைதிக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் நடந்து கொள்வதால் அதனையண்டியுள்ள பல்வேறு தரப்பினரும் பெரும் அசெளகரியங்களை எதிர்நோக்குவதாகத் தெரிவிக்கின்றனர். குறிப்பாக சுன்னாகம் பிரதான பேருந்து தரிப்பிடத்திற்குச் சென்று அங்கு பஸ்ஸிற்காகக் காத்து நிற்கும் மாணவிகளுடனும், பெண்களுடனும் சேஷ்டை விடும் குறித்த நபர் சுன்னாகம் பொதுச் சந்தைக்குள்...
நாட்டை சுற்றி கடற்பகுதியில் எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என வானிலை அவதான நிலையம் எச்சரித்துள்ளது.விசேடமாக புத்தளம் , மன்னார் , காங்கேசன்துறை மற்றும் முல்லைத்தீவு வரையிலான கடற்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 70 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் .தீவை சுற்றி மற்ற கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 50 கிலோமீற்றர் வரை...
2014 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் உயர்தரக் கல்வியினை பூர்த்தி செய்த மாணவர்கள் ஓர் அரச நியமனம் பெறவும் அரச சேவையிலிருந்து கொண்டே ஓர் பட்டதாரியாக வருவதற்கும் அரிதோர் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை எமது பிரதேச மாணவர்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். மேலும் எமது பிரதேசத்திலேயே மனங்கவர் கொடுப்பனவுடைய அரச தொழில் பெற சந்தர்ப்பம்...
சவூதி அரசாங்கத்தால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப் பட்ட பேரீத்தம் பழம் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு இன்னும் வழங்கப் படவில்லை என யாழ் மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் அங்கம் வகிக்கும் யாழ் கிளிநொச்சி முஸ்லீம் சம்மேளனம் குற்றம் சாட்டியுள்ளது . இவ் விடயம் தொடர்பாக யாழ் மாவட்ட அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் ஜமால் மொகைதீன்...
எமது அலுவலர்களில் சிலர் இராணுவத்திற்குப் பயந்து தமது முறையான சட்ட ரீதியான செயற்பாடுகளில் ஈடுபடாது எமக்குப் பாதகமான முறையில் நடந்து கொள்வது வரவேற்கத்தக்கதல்ல. என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்து உள்ளார். வவுனியா, மன்னார் மற்றும் முல்லைத்தீவு மாவட்ட துறை சார் கூட்டம் வவுனியாவில் உள்ள உதவி உள்ளூராட்சி ஆணையாளரின் அலுவலகத்தில் நடைபெற்றது. அக்கூட்டத்தில் முதலமைச்சர்...
ஜனாதிபதி யாழ்ப்பாணம் வரும் வேளை மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்திற்கு அருகில் உள்ள சோதனை சாவடி பின் நகர்த்தப்படலாம் என யாழ்.மாவட்ட செயலக வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேனா எதிர்வரும் 18ம் திகதி யாழ்பாணம் வருகை தந்து புனரமைக்கப்பட்ட துரையப்பா விளையாட்டரங்கை திறந்து வைப்பார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அவ்வாறு ஜனாதிபதியின் யாழ்ப்பாண...
யாழ். குடாநாட்டுக்கு இரணைமடு குளத்திலிருந்து நீரைக் கொண்டு செல்லும் திட்டத்தை கைவிடும் எண்ணமில்லையென ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் சபையில் உறுதியாகத் தெரிவித்தார். பாராளுமன்றில் நேற்று வியாழக்கிழமை ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா 23...
பாராளுமன்ற உறுப்பினராக வருவதற்கு கல்வித் தகைமை கட்டாயமாக்கப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை சபாநாயகர் முன்னெடுக்க வேண்டுமென நேற்று சபையில் வலியுறுத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் ராஜித சேனாரத்ன மஹிந்த ராஜபக் ஷ ஆட்சிக்காலத்தில் வாய் மூடியிருந்தவர்கள் இன்று வாய் திறக்க ஆரம்பித்துள்ளனர் என்றும் குறிப்பிட்டார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற நிதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை...
வடமாகாணத்தில் தற்காலிகமாக பணியாற்றும் சுகாதார தொண்டர்களுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படாமைக்கு முகாமைத்துவ சேவைகள் திணைக்களமே காரணம் என வடமாகாண சுகாதார அமைச்சர் ப. சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். சுகாதார தொண்டர்களின் போராட்டம் தொடர்பாக கருத்து தெரிவித்த போதே வடமாகாண சுகாதார அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். வடமாகாண சுகாதார தொண்டர்களின் நியமனம் தொடர்பாக ஊடகங்களில் மாறுபட்ட கருத்துக்கள் வெளியிடப்பட்டு...
Loading posts...
All posts loaded
No more posts
