Ad Widget

வடக்குக்கும் விஜயம் செய்வார் டொரே ஹேடர்ம்

நோர்வே வெளிவிவகார அமைச்சின் இராஜாங்க செயலாளர் டொரே ஹேடர்ம் (Tore Hattrem) தனது இலங்கை விஜயத்தின் போது, வட மாகாணத்துக்கும் வருவார் எனத் தெரியவந்துள்ளது.

Tore Hattrem - norway

இதன்படி, எதிர்வரும் 01ம் திகதி அவர் யாழ்ப்பாணத்துக்கு வரவுள்ளதோடு, முதல்வர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் ஆளுனர் ரெஜினோல் குரே ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.

டொரே ஹேடர்ம் எதிர்வரும் 31ம் திகதி தொடக்கம் ஜூன் 2ம் திகதி வரை இலங்கைக்கு விஜயம் செய்ய தீர்மானித்துள்ளார்.

அவர் அன்றைய தினம் வௌிவிவகார அமைச்சருடன் சந்திப்பை மேற்கொள்ளவுள்ளதோடு, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், அமைச்சர்களான மலிக் சமரவிக்ரம, ரவூப் ஹக்கீம் உள்ளிட்ட சிலரை சந்திக்கவுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related Posts