- Sunday
- October 4th, 2026
இறுதிப் போரில் நடந்த போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பில் விசாரிக்க சர்வதேச நீதிபதிகள் தேவையில்லை என்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெளிவாக இருக்கிறாராம். இந்தத் தகவலை கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். மேலும், போர் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் மீறல் தொடர்பான விசாரணைகளை...
இறுதிக் கட்டப் போரில் இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து, விசாரணைகளை மேற்கொள்வதற்காக முன்மொழியப்பட்டுள்ள இடைக்கால நீதிப் பொறிமுறைகளில், சாட்சியமளிக்கத் தயார் என, ஐரோப்பாவில் புலம்பெயர்ந்து வாழும், விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். தமது பாதுகாப்பு மற்றும் அடையாளம் வெளிப்படுத்தப்படாது என்பதற்கும் உத்தரவாதம் வழங்குகின்ற பட்சத்தில் சாட்சியமளிக்க தயார் என அவர்கள் கூறியுள்ளதாக,...
எதிர்வரும் வருடத்திலிருந்து க.பொ.த சாதாரண தர பரீட்சையில் அமரவுள்ள அனைத்து மாணவர்களுக்கும் உயர்தர பரீட்சையிலும் அமர்வதற்கான சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பொருளாதார விவகாரங்கள் மற்றும் கொள்கை அமைச்சினால் நேற்று கொழும்பில் ஒழுங்கமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை விழாவில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வடக்கு மாகாணத்தில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக, வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் நேற்று கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த வேலைத்திட்டத்தை எதிர்வரும் மாதம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் இந்த கூட்டத்தில் அவர் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் ஆசிரியர்...
இலங்கை தொடர்பில் ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்துக் கூறுவதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரனை அமெரிக்க காங்கிரஸ் கலந்துரையாடலுக்கு அழைத்துள்ளது. அமெரிக்க காங்கிரஸின் இலங்கை சம்பந்தமான ஆர்வக் குழு நாளைமறுதினம் அமெரிக்காவில் விசேட கலந்துரையாடலை ஒழுங்கு செய்துள்ளது. இதில் பங்கேற்குமாறு தமிழ்த் தேசியக்...
யாழ். மாவட்டத்தில் கஞ்சா விற்பனையின் மத்திய இடமாக பருத்தித்துறை கற்கோவளம் புனிதநகர் காணப்படுவதாகவும் இதனைப் பொலிசார் கட்டுப்படுத்தவேண்டும் என பருத்தித்துறை சிவில் பாதுகாப்புக் குழுக் கூட்டத்தில் பொதுமக்கள் வேண்டுகோள்விடுத்தனர். பருத்தித்துறை பொலிசார் நடாத்திய சிவில் பாதுகாப்புக் கூட்டம் பருத்தித்தறை பொலிஸ் நிலையித்தில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதன்போதே பொதுமக்களால் மேற்படிவேண்டுகோள் பொலிசாரிடம் முன்வைக்கப்பட்டது. இது தொடர்பில் தெரிவிக்கப்பட்டதாவது...
ஜனாதிபதி செயலகத்தின் பாதுகாப்பு பிரிவின் குழுவினர்கள் யாழ் மாவட்டத்திற்கு தீடிர் விஜயம் ஒன்றை மேற்கொண்டனர். இவர்கள் நேற்று காலை யாழ் துரையப்பா விளையாட்டு அரங்கினை பார்வையிட்டதை தொடர்ந்து அதற்கு முன்பாக உள்ள நவீன மயமாக்கப்பட்டுள்ள யாழ் தலைமை பொஸிஸ் நிலைய கட்டிடத் தொகுதியினையும் பார்வையிட்டனர். இதனை தொடர்ந்து பொஸிஸ், இராணுவ அதிகாரிகளுடன் ஜனாதிபதி செயலனிக் குழுவினர்...
தாம் சென்ற படகில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, 40 இலங்கையர்கள் இந்தோனேஷியாவில் நிர்க்கதியான நிலையில் உள்ளதாக அந்தநாட்டுத் தகவல்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முற்பட்டுள்ளதாக, இந்தோனேஷியப் பொலிஸார் கூறுகின்றனர். இவர்களில் பெண்கள் மற்றும் சிறுவர்களும் அடங்குவதாக தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் நாகை அருகே நடுக்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த இலங்கை அகதிகள் மூன்று பேர் மீட்கப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் கோடியக்கரை அருகே இலங்கையை சேர்ந்தவர்கள் வந்த படகு பழுது காரணமாக நடுக்கடலில் நின்றது. இதனையடுத்து, அப் படகில் இருந்தவர்கள் அக்கரைபேட்டையே சேர்ந்த குமார் என்பவரது விசைபடகு மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக, இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.
காட்டு யானை ஒன்றை சிறுமி ஒருவர் கட்டுப்படுத்தும் காணொளி ஒன்று தற்போது இணையத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இலங்கையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த காணொளியில், பிரதான வீதியில் தன்னை நோக்கி வரும் காட்டு யானை ஒன்றை சிறுமி ஒருவர் தனது கைகளால் கட்டுப்படுத்தும் காட்சி பதிவாகியுள்ளது. அதாவது சிறுமி கையை காட்டி முன்னோக்கி...
யாழ். பிரதேச சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகராக பொலிஸ் திணைக்களத்தினால் நியமிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்த கஸ்ரன் ஸ்ரனிஸ்லஸ் இன்று சனிக்கிழமை காலை 8.00 மணியளவில், யாழ். தலைமைப் பொலிஸ் நிலையத்தில் வைத்து தனது கடமைப் பொறுப்பேற்கும் பதிவேட்டில் கையொப்பமிட்டு கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார். இந்து, கிறிஸ்தவ, பௌத்த மற்றும் இஸ்லாம் மத குருமார்களின் ஆசியின் பின்னர்,...
பாராளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்வி மற்றும் அதற்கான அமைச்சரின் பதில் தொடர்பில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ். மாவட்ட எம்.பி. டக்ளஸ் தேவானந்தாவுக்கும் அமைச்சர் சுவாமிநாதனுக்கும் இடையே சுவாரஷ்யமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது. பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை 23 இன் கீழ் 2 என்ற பிரிவின் கீழ் டக்ளஸ் தேவானந்தா எம்.பி அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பில்...
அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்யும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி பொலன்னறுவை, வவுனியா போன்ற பிரதேசங்களில் இதுபோன்று அதிக விலைக்கு சீமேந்து விற்பனை செய்த வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த சபையின் தலைவர் ஹசித திலகரட்ன கூறினார். சீமேந்து தயாரிப்பு நிறுவனங்கள் சிலவற்றின்...
இலங்கையில் இருந்து ஆயிரம் கிலோமீற்றர்களுக்கு கீழ், புதிய நிலத்தகடு ஒன்று உருவாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பேராதனை பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் கலாநிதி அதுல சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கைக்கும் நில அதிர்வுகள் ஏற்படுவதற்கான அபாயங்கள் அதிகரித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதன் விளைவாக எதிர்காலத்தில் இலங்கையில் அதிக நிலச்சரிவுகள் ஏற்படலாம் என்றும்...
சலாவ இராணுவ ஆயுதக் கிடங்கில் ஏற்பட்ட வெடிவிபத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் தொடர்பிருப்பதாக எந்த சான்றும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் கண்டறியப்படவில்லை என்று, உயர்மட்ட இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இது அலட்சியத்தினால் ஏற்பட்ட விபத்தா அல்லது திட்டமிட்ட செயலா என்று, விசாரணைகள் முடியும் வரை – எந்த முடிவுக்கும் வர முடியாது என்றும் அந்த அதிகாரி...
வலி வடக்கிலுள்ள காணிகளை மக்களிடம் மீள கையளிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தன்னாலான முயற்சிகளை மேற்கொண்டுவரும் நிலையில் இராணுவத் தரப்பினர் அதற்கு தடையாகவுள்ளனர் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். வலி. வடக்கிலுள்ள காணிகளை விடுவித்து அவற்றை மக்களிடம் கையளிப்பதற்கு ஜனாதிபதி இயன்ற வரை முயற்சித்து வருகின்றார். ஆனால் அக் காணிகளை விடுவிப்பதில் இராணுவத்தினரே பல...
தமிழர்களுடைய ஆயுதப் போராட்டம் தொடக்கம் எல்லாவற்றையும் பிளவுபடுத்தி பழக்கப்பட்டவர்களுடைய நிகழ்ச்சி நிரலில் மாகாண சபையையும் குழப்பி பேரினவாதிகளுக்கு தீனி போடுவதற் வட மாகாண சபையில் சிலர் உடந்தையாக இருப்பதாக வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார். வடக்கு விவசாய அமைச்சர் ஐங்கரநேசனுக்கு எதிராக வடமாகாண சபையில் உள்ள சுமந்திரன் ஆதரவு உறுப்பினர்கள் சிலர் நம்பிக்கையில்லாத்...
வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றக் கூடாது என நேற்று சபையில் திட்டவட்டமாகக் கூறி, அதற்காக தான் கண்டுபிடித்த 10 காரணங்களையும் முன்வைத்தார் பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில. நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத்...
வடமராட்சிப் பிரதேசத்தில் குற்றங்கள் வெகுவாகக் குறைந்து வருகின்றன. சிவில் பாதுகாப்புக் குழுக்களும் ஊடகங்களும் பொலிஸாருக்கு வழங்கிய ஒத்துழைப்பே குற்றங்கள் குறைவடையக் காரணமாகும். இவ்வாறு காங்கேசன்துறை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவிருத்திருக்கிறார். பருத்தித்துறை மற்றும் நெல்லியடி பொலிஸ் நிலையங்களில் இடம்பெற்ற சிவில் பாதுகாப்புக் குழுக்களுடனான சந்திப்பில் அவர் கலந்துகொண்டு உரையாற்றினார். கடந்த வியாழக்கிழமை இடம்பெற்ற இந்தச்...
கொஸ்கமவில் நடந்தது போன்று மயிலிட்டியில் நடந்தால் குறித்த பகுதியே பாழாய்போய்விடும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வவுனியா உள்ளூராட்சி திணைக்களத்தின் அதிகாரிகளுடன் வவுனியா உள்ளுராட்சி திணைக்களத்தின் கேட்போர்கூடத்தில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வட பகுதியில் உள்ள இராணுவ...
Loading posts...
All posts loaded
No more posts
