- Sunday
- October 4th, 2026
மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு செப்டெம்பர் முதலாம் திகதி முதல் எஸ். எல். எஸ். தரமொன்றை அறிமுகப்படுத்த போக்குவரத்து அமைச்சு முடிவு செய்துள்ளது. இதன்படி, செப்டெம்பர் மாதம் முதல் இறக்குமதி செய்யப்படும் மற்றும் இங்கு உற்பத்தி செய்யப்படும் தலைக் கவசங்கள் எஸ். எல். எஸ். 517 தரத்தை உடையதாக இருக்க வேண்டும் என அமைச்சு தெரிவித்தது. உரிய...
உலக இரத்ததான தினம் (World Blood Donor Day ) ஆண்டுதோறும் ஜுன் மாதம் 14 ஆம் திகதியாகிய இன்று ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்புடன் உலக சுகாதார நிறுவனத்தால் சர்வதேச ரீதியில் அனுஸ்டிக்கப்படுகின்றது. இரத்தப் பிரிவுகளான A B O ஆகிய பிரிவுகளைக் கண்டுபிடித்த கார்ல் லென்டினரின் (Karl Landsteiner) பிறந்த தினத்திலே இத்தினம்...
சிறுவர்கள் தொடர்பான நடவடிக்கைகளில் வெகுஜன ஊடகங்கள் அதிக பொறுப்புடன் செயற்பட வேண்டும் என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். சிறுவர்கள் தொடர்பான செய்திகளை வௌியிடும் போது, சில ஊடகங்கள் தமது இருப்பு பற்றி சிந்தித்தே செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சிறுவர்களின் எதிர்காலத்தை பாதுகாக்கும் வகையில் பொறுப்புடன் செயற்பட வேண்டியது ஊடகங்களின் கடமை எனவும் அவர் கூறியுள்ளார்....
பெட் ஸ்கேன் (PET scan) இயந்திரத்தைக் கொள்வனவு செய்ய, மஹரகம புற்றுநோய் வைத்தியசாலை மக்களின் உதவியை நாடத் தீர்மானித்தது. இதன்பொருட்டு மனுஷத் தெரணவுடன் கைகோர்த்த குறித்த வைத்தியசாலையின் முயற்சிகளுக்கு சிறந்த பலன் கிட்டியுள்ளது. இதன்படி, 20 கோடி ரூபாய் இதுவரை மக்களால் நன்கொடையளிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த வைத்தியசாலையின் இலக்கு எட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, தன் பெயரைக் குறிப்பிட...
நெடுங்கேணி ஒலுமடு பகுதியில் 17 வயது யுவதி ஒருவரை காணவில்லையென பெற்றோர் முறையிட்டுள்ளனர். இவர் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் உடனடியாக தந்துதவுமாறும் கோரியுள்ளனர். ஒலுமடு வேலடியைச் சேர்ந்த 17 வயது சந்திரகுமார் கிருசாந்தினி என்ற யுவதி கடந்த சனிக்கிழமை 11.06.2016 அன்று வவுனியாவுக்கு தையல் பயிற்சிக்கான பொருட்கள் வாங்கச் சென்றபோது காணாமல் போயுள்ளார். இவ் யுவதி...
யாழ்ப்பாணம் சுன்னாகம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். காக்கை தீவுப்பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட பிளாஸ்ரிக்பொலித்தீன் கழிவு மீள்சுழற்சி நிலையத்தை இன்று திங்கட்கிழமை திறந்து வைத்து உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். வட பகுதியிலேயே மிகச் சுத்தமான குடி நீர் பெறக்கூடிய இடமாக அமைந்திருந்த சுன்னாகம்...
கரப்பான்பூச்சியை கண்டு பயந்த கொங்கொங் நாட்டுப் பெண்ணுக்கு உதவுவது போல் பாலியல் சில்மிஷம் செய்ய முற்பட்ட ஒருவர் யாழப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது, சுண்டுக்குழி பகுதியில் வங்கி முகாமையாளர் ஒருவர் வீட்டின் அறைகளை வாடகைக்கு கொடுத்து வந்துள்ளார். இதன்படி வாடகைக்கு வந்திருந்த...
வீ.ஆனந்தசங்கரி அவர்கள் யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவசர நிதியுதவி வழங்கப்பட வேண்டும் என கோரி ஜனாதிபதி அவர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த கடிதத்தில் மேதகு ஜனாதிபதி அவர்களே, எதிர்பாராதவிதமாக சொற்ப நேரத்தில் கொஸ்கம, சலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட சம்பவத்தால் தமது சகல சொத்துக்களையும் இழந்தவர்களுக்கு தமிழர் விடுதலைக் கூட்டணியின் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களை...
யாழ்ப்பாணத்தில் உள்ள உயர்தரவகுப்பு பாடசாலை ஒன்றில் மாணவர்களும் மாணவிகளுமாகச் சேர்ந்து பாலியல் லேகியம் சாப்பிட்டுள்ளனர். இதன் பின்னர் அவர்கள் போதை ஏறி தமக்குள் சண்டையிட்டதன் காரணமாக 4 மாணவர்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச் சம்பவத்தில் குறித்த மாணவர்கள் சீருடையுடனேயே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களை வைத்தியசாலையில் ஆசிரியர் ஒருவரே அனுமதித்துள்ளதாகவும் தெரியவருகின்றது. குறித்த மாணவர்கள்...
யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் வாகன விபத்தில் பாடசாலை மாணவன் மரணமடைந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளவருக்கு யாழ் நீதவான் பிணை வழங்க மறுத்ததையடுத்து, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பிணை மீளாய்வு மனுவை வெள்ளிக்கிழமை பரிசீலனை செய்தபோதே நீதிபதி இளஞ்செழியன் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். யாழ்ப்பாணம் திருநெல்வேலி சந்தியில் கடந்த பெப்ரவரி மாதம் 3 ஆம்...
இனத்தின் தனித்துவம் அழிக்கப்படுகின்ற அல்லது மாற்றியமைக்கப்படுகின்ற சூழ்நிலையில், எமது கலாசாரங்களை பாதுகாக்க வேண்டிய தேவையுள்ளது. இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும்' என யாழ்.மாவட்டச் செயலாளர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்தார். யாழ்.மாவட்ட கலாசார பேரவையின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாக சபை தெரிவும் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை (12) நடைபெற்றது. இதில் தலைமையுரையாற்றும் போதே மாவட்டச்...
கிளிநொச்சி கண்டாவளை மகா வித்தியாலயத்தைச் சேரந்த 23 மாணவர்கள் மற்றும் 3 ஆசிரியர்கள், குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இன்று திங்கட்கிழமை (13) காலையில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தர்மபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடும் காற்று காரணமாக மேற்படி பாடசாலை வளாகத்தில் இருந்த குளவிக்கூடு கலைந்து வகுப்பறைக்குள் குளவிகள் புகுந்துள்ளன. அதன்போதே கற்றல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மாணவர்கள்...
யாழ். நீதிமன்றத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பான வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் மே மாதம் 20ம் திகதி புங்குடுத்தீவு மாணவி வித்தியாவின் படுகொலை வழக்கு தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த முற்பட்ட போது, நீதிமன்ற வளாகத்தின் மீது இளைஞர்கள் சிலர் தாக்குதல் மேற்கொண்டனர். இதனுடன் தொடர்புடையதாக கூறப்படும் 130க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டு...
நாட்டின் தேசிய பிரச்சினையாகியுள்ள சிறுநீரக நோயை ஒழிப்பதற்கு தூய குடிநீர் வழங்குவதற்கான சிறப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். வடமத்திய மாகாணத்திலேயே அதிக அளவிலான சிறுநீரக நோயாளர்கள் இருப்பதாக புள்ளி விவரத் தகவல்கள் கூறுகின்ற போதிலும், இந்த நோய் தற்போது நாடு முழுவதும் பரவியுள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். நேற்று வவுனியா மாவட்டத்தில் நடந்த...
வடக்கு அரசியல்வாதிகளின் அரசியல் நியாயங்களுக்காக வடக்கில் இருந்து எந்தவொரு இராணுவ முகாமும் அகற்றப்படாது. அதேபோல் இராணுவமும் வெளியேற்றப்படாது என அரசாங்கமும், பாதுகாப்பு தரப்பும் தெரிவித்துள்ளன. வடக்கு முதல்வரின் கருத்துகளுக்கு எம்மால் எந்த பதிலையும் தெரிவிக்க முடியாது. நிலைமைகளை எவ்வாறு கையாள்வது என்பது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருடன் கலந்தாலோசித்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் தெரிவித்தது. வடக்கில்...
யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் குப்பைக்கு மூட்டிய தீ உடலில் பற்றியதால் இளம்குடும்ப பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்தசம்பவத்தில் பிரபாகரன் அனிஸ்ரா (23 வயது) எனும் குடும்பபெண்ணே உயிரிழந்துள்ளார். கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை குறித்த பெண் வீட்டு வளவினை துப்பரவு செய்து அவற்றுக்கு தீ மூட்டியிருந்தார்.
இந்தநிலையில் மண்ணெண்ணையை போத்தலை மூடி திறந்த நிலையில் அருகில் இருந்த தண்ணீர்...
இந்தியாவின் கோடியக்கரை கடற்பரப்பில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தமிழ் குடும்பம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதில் இரண்டு வயது சிறுமி உட்பட மூன்று இலங்கைத் தமிழர்களை நாகப்பட்டின மீனவர் குழுவினால் மீட்கப்பட்டுள்ளதாக ஊடகம் குறிப்பிட்டுள்ளது. குமார் என்பவருக்கு சொந்தமான படகில் பயணித்த இலங்கையர்கள், மத்திய கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தவர்களை...
அண்மையில் இடம்பெற்ற சலாவ வெடிவிபத்தையடுத்து தென்பகுதியில் இருக்கும் ஆயுதக் களஞ்சியங்கள் அனைத்தும் தற்போது வடபகுதிக்கு மாற்றப்பட்டுவருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அனுராதபுரம் மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களிலேயே புதிய ஆயுதக் களஞசியங்களை அமைப்பதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் குறித்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சன அடர்த்திகூடிய பிரதேசத்தில் அமைந்திருக்கும் வியாங்கொட ஆயுதக் களஞ்சியத்தையும் வேறு...
காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட வுள்ளதாக அக்குழுவின் தலைவர் மக்வெல் பரணகம தெரிவித்துள்ளார். எதிர்வரும் ஜூலை மாதம் 15 ஆம் திகதி இக்குழு கலைக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் காணாமல் போனோரைக் கண்டறிவதற்கான அலுவலகம் ஒன்றைத் திறப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த ஆணைக்குழுவின் அறிக்கையை குறித்த அலுவலகத்திடம் ஒப்படைக்குமாறும் கூறப்பட்டுள்ளது. காணாமல்போனோர்...
கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி வந்துகொண்டிருந்த ரயிலில் மோதி, இணுவில் பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எச்.எல்.துஸ்மந்த தெரிவித்தார். சனிக்கிழமை (11) இரவு இடம்பெற்ற இந்த சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த எச்.சிறிலிங்கம் (வயது 50) என்பவரே உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
Loading posts...
All posts loaded
No more posts
