Ad Widget

கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் திட்டம் இன்று யாழில்

தேசிய சுற்றாடல் வாரத்தை முன்னிட்டு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சு, கடல் சார் சூழல் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றின் ஏற்பாட்டில் தூய கடற்கரை என்னும் தொனிப்பொருளில் கடற்கரைகளை தூய்மைப்படுத்தும் தேசிய செயற்றிட்டம் இன்று யாழ் மாவட்ட செயலக ஏற்பாட்டில் யாழ் பண்ணை கடற்கரை பகுதியில் நடைபெற்றது.

see1

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் இந்நிகழ்வு நடைபெற்றது.

இதில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் பா.செந்தில் நந்தனன், திட்டமிடல் பணிப்பாளர் மோகனேஸ்வரன் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இங்கு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன்,

ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கு அமைவாக முன்னெடுக்கப்படும் இவ் வேலைத் திட்டத்தில், இன்று யாழ் மாவட்ட அரச மற்றும் சிவில் அமைப்பினர்கள், இராணுவத்தினர் உட்பட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

கடற்கரையோரங்களின் தூய்மைகள் மிகவும் முக்கியமானது.

இன்று வடக்கில் சுற்றுலாத்துறை அபிவிருத்தி கண்டுவருகின்ற மாவட்டமாக யாழ் மாவட்டம் காணப்படுகின்ற நிலையில் கரையோரங்களை தூய்மைப்படுத்துவது எமக்கு தேவை என அவர் தெரிவித்தார்.

see2

Related Posts